பாகம் - 2
தனித்த ஆதாயம்
இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமானது என்னவென்றால் தமிழ் TRaitoriztionதேசியவாதிகளின் அரசியல் அவர்களின் எந்த ஒரு நோக்கத்தையும் சுயேச்சையாக அடைவதில் வெற்றி பெறவில்லை என்பதுதான். ஒருபுறம் அது தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ரி.யு.எல்எப் அல்லது ரி.என்.ஏ எதுவானாலும் சரி, மறுபுறத்தில் எல்.ரீ.ரீ.ஈ உட்பட்ட தமிழ் போராளிக் குழுக்களானாலும் சரி அவர்கள் அனைவருமே இதுவரை தோல்வியே அடைந்துள்ளார்கள். இதில் தனித்த ஆதாயமாக காணப்படுவது இந்திய - இலங்கை ஒப்பந்தம் கொண்டுவந்த 13வது அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே. அரசியல் முன்னணி; இந்த தோல்வியை அடைந்த போதிலும், தமிழ் தேசியவாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொடர்ந்தும் உச்ச நிலையிலேயே ஆட்சி செய்தன. தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் உள்ள தமிழ் ஆட்சியாளரின் இந்த ஏகபோக கட்டுப்பாட்டுக்கு அருகில் உள்ள முக்கிய கருவியாக பயன்படுவது துரோகத்தனமான நடவடிக்கைதான். தங்களால் வழங்க முடியாது தோற்றுப் போகும் எதற்கும் இந்த துரோகத்தனம் என்கிற சமாதானத்தை கூறி தப்பிவிடுவார்கள். யதார்த்தமற்ற மற்றும் அடையமுடியாத இலக்குகளுக்கு அரசியல் முட்டாள்தனம்தான் காரணம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை மாறாக எங்கள் மத்தியில் உள்ள துரோகிகள்மீது தவறுகள் சுமத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு சொல்லப்படுவது தவறுகள் எங்களுடையது அல்ல ஆனால் துரோகிகளுடையது என்று.
முன்பு சொல்லப்பட்டதைப் போல துரோகத்தனமான நிகழ்வுகள் ஆரம்பமானது மக்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பு. துரோகிகள் எனக்கூறி அவர்களது குணாதிசயங்கள் கொலை செயயப்பட்டன. ஆனால் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் தமிழ் ஆயுத போர்க்குணம் எழுச்சி பெற்றதின் பின் இதில் கடலளவு மாற்றங்கள் ஏற்பட்டன, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் போராளிகள் எனப் பலரும் துரோகிகள் என கொலை செய்யப்பட்டார்கள். அதிர்ஷ்டவசமாக துரோகிகள் என கொல்லப்படும் இந்த நடைமுறை ஒரு முடிவுக்கு வந்தது மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு தீவிலிருந்து அழிக்கப்பட்ட பின்னரே. எனினும் துரோகத்தனம் என்கிற நடவடிக்கை எஞ்சியே உள்ளது, ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இல்லாததால் அதன் வலிமை பெருமளவு குறைந்துள்ளது.
சமீப காலங்களில் இந்த துரோகத்தனத்தின் கோரக் காட்சிகள், சில ரி.என்.ஏ அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் மற்றும் உருவப் படங்கள் எரிக்கப்படுவதைக் காணும்போது மீண்டும் எழுச்சி பெறுவதைப் போலத் தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையில் இதை சரி பார்க்காவிட்டால், இந்த நிகழ்வு கடந்த காலங்களைப் போல பெருத்த ஆபத்தை நோக்கி முன்னேற்றமடையலாம். நடந்து முடிந்த தன்மையில் இருந்து பெற்ற அறிவினைக் கொண்டு மீண்டும் வளர்ந்து வரும் ஆபத்தான நிலமையை அனுமானிப்பது சாத்தியமே. இந்தப் பின்னணியில் தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் உள்ள துரோகத்தனமான நிகழ்வுகத்ளை இந்த எழுத்தாளர் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வருகிறார். முன்னைய சந்தர்ப்பங்களில் இதைப்பற்றி நான் எழுதியிருந்தாலும் கூட, தமிழர்களைத் திரும்பவும் துன்புறுத்தும் இந்த ஆபத்தான நோயைப் பற்றி மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய விரும்புகிறேன்.
முன்பு குறிப்பிட்டதைப் போல துரோகிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்தகாலங்களில் நூற்றுக் கணக்கானவர்களை அழித்த இந்த அரசியல் வன்முறை, தமிழர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் மற்றும் தமிழர் சமத்துவத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் அவசியமானது என இதைச் செய்தவர்களால் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நியாயப் படுத்தப்பட்டது. இந்தப் போக்கின் அர்த்தம் வித்தியாசமான அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் அல்லது கொண்டிருப்பதாகக் கருதப்படுபவர்கள் நடப்பில் ஆதிக்கம் செலுத்துபவர்களினால் துரோகிகள் எனக் கணிக்கப்படுகிறார்கள் என்பதே. எதிர்ப்பு இங்கு துரோகத்துடன் சமப்படுத்தப் படுகிறது.
இராவணன் மற்றும் விபீஷணன்
இதி;காசங்களையும் வரலாற்றையும் ஒரு சுருண்ட வடிவத்தில் பார்க்கும் ஒரு போக்கு உள்ளது. உண்மை அல்லது கற்பனையான காட்டிக் கொடுபு;புகளுக்கான அடையாளங்களை இதிகாசங்களிலும் மற்றும் வரலாறுகளிலும் கதாநாயகர்களாக சித்தரிக்கப் பட்டவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாக காட்டப்பட்டன. சீதையை கடத்திச் சென்ற இலங்கையின் அரக்க இராஜாவான இராவணன், மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரமான சீதையின் கணவனான இராமரினால் தோற்கடிக்கப்பட்டான். எனினும் திராவிட சித்தாந்தந்தங்கள் வலியுறுத்துவது அதற்கான காரணம் காட்டிக் கொடுப்பு என்று, ஏனெனில் இராவணன் சகோதரனான விபீஷணன் இராமரின் பக்கம் சென்றான்.
பிரபுத்துவ பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரனான வீரபாண்டிய கட்டபொம்மன் பிரித்தானியரின் அதி உயர் பீரங்கிகளின் சக்திக்கும் அஞ்சாது அடிபணிய மறுத்து இனத்திற்காக போராடி தோற்கடிக்கப்பட்டான். பிரபலமான பேச்சு வழக்கில் கூறப்படுவது, கட்டப்பொம்மன் தோற்கடிக்கப் பட்டது எதனாலென்றால் மற்றொரு பாளையக்காரனான எட்டயபுரத்து எட்டப்ப நாயக்கர் பிரித்தானியப் படைகளுடன் இணைந்து கொண்டதால்தான் என்று. துரோகிகளின் காட்டிக்கொடுப்பு தோல்விக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதன்படி இராவணனுக்கு விபீஷணனனும் மற்றும் கட்டபொம்மனுக்கு எட்டப்பனும் துரோகிகளாக இருந்ததாக இதிகாசம் மற்றும் வரலாறு என்பன சொல்கின்றன.
கடந்த காலத்தை பற்றிய ஒரு சுருக்கமான மீள் ஓட்டம், தமிழ் தேசியவாதிகளின் அரசியல் கோளத்தில் உணரப்படும் துரோகத்தனத்தின் தொடர்ச்சியான நிகழ்வுகளை உரிய இடத்தில் வைப்பதற்கு உதவும். சம காலங்களில் ஸ்ரீலங்காவில்; ஜனநாயகத்தின் பரிணாமம் மற்றும் வளர்ச்சி என்பனவற்றில் துரோகி என்கிற பதம் வெகு தாராளமாகவும,; மாறாக தளர்வாகவும் உச்சரிக்கப்படுகிறது. சகல சமூகங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் பல சமயங்களில் தங்கள் போட்டியாளர்களை மக்களுக்கு அல்லது அவர்கள் சார்ந்த விடயங்களுக்கு துரோகமிழைத்த துரோகிகள் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனினும் இந்தப் போக்கு ஸ்ரீலங்கா தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப் படுவதாகவும் ஆழமாக பதிந்தும் உள்ளது. சர்வஜன வாக்குரிமை மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் என்பன காரணமாக சிங்கள பெரும்பான்மை எண்ணிக்கைக்கு சமமாக தமிழர் தன்னைத்தானே சிதறடித்துக் கொண்டது முதல், தமிழ் அரசியலின் இயல்பு மாற்றத்துக்கு ஆளாகியது.
தமிழ் அரசியலில் இழையோடும் இந்த அடிப்படை நூல் அரசியல் விடுதலை பிரகடனமாக மாறியது. அது சீரான பிரதிநிதித்துவம், பதிலளிக்கும் ஒத்துழைப்பு, கூட்டாட்சி, பிராந்திய சுயாட்சி, அல்லது பிரிவினைவாதம் ஆகிய எதுவாக இருந்தாலும் அதுதான் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தமிழர் விடுதலையின் அடிப்படை பிரசங்கம்.
“உண்மையில் அது படிப்படியாக ஒரு கடின வடிவத்தை உள்வாங்கியது. மக்கள் துரோகிகளாக கருதப்பட்டு கொல்லப்பட்டது இனிமேலும் ஒரு கேலிக்கூத்தான நடவடிக்கையாக இருக்க முடியாது. அது சோகமான ஒன்றாக மாறியது. இந்த துரோகத்தனமான நடவடிக்கை பெருமளவிலான அரசியல்வாதிகளை, அரசாங்க அதிகாரிகளை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு நபர்களை, ஊடகவியலாளர் போன்றவர்களை போட்டியிடும் அரசியல்வாதிகளால் துரோகிகளாகக் கருதி கொல்லுமளவுக்கு வழியமைந்ததுதான் தமிழ் அரசியலில் உள்ள மிகப் பெரிய சோகம்”.
ஒற்றுமை
வளர்ந்து வரும் சமூக மனப்போக்கு மற்றும் இன ஐக்கியத்தின் மீது வைக்கப்பட்ட உயர்ந்த மதிப்பு என்பன அரசியல் பிரச்சினைகளில் பெருமளவிலான மக்கள் ஒரு பொதுவான விஷயத்துக்கு வேண்டி ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கும் நிலை உருவானது. ஒற்றுமை என்பது ஒரு மேலாதிக்க கூச்சலாக மாறியது.
ஒரு குறிப்பிட்ட கட்சி இன அடிப்படையில் வாக்குகளை அணி திரட்டுவது மிகவும் வசதியான முறையாகப் பார்;க்கப்பட்டது. அதேபோல எந்த தமிழரும் சிங்கள மேலாதிக்க கட்சியுடன் - அது தேசியக்கட்சியோ அல்லது இடதுசாரி கட்சியோ எதுவானாலும் - தொடர்பு கொள்வாராயின் அவர் மீது எதிர்மறை பண்புகளை கொண்டவர்களின் ஒத்துழைப்பாளர் என முத்திரையிடுவது எளிதாக இருந்தது.
இதன்படி தமிழர்களிடையே உள்ள எந்த வகையான மேலாதிக்க அரசியல் கருத்திலிருந்து ஒருவர் மாறுபடுவது அல்லது விலகிச் செல்வதுபோல பார்க்கப்பட்டால் அவர் சமுகத்தின் பிரச்சினையை காட்டிக் கொடுத்தவராக சித்தரிக்கப் படுவார். அவர்கள் களைகளாக வர்ணிக்கப்பட்டு களையெடுப்பு நடத்த வேண்டியதாக தீர்மானிக்கப்படும்.
முந்தைய காலங்களில் அரசியல் எதிரிகளை துரோகிகளாகச் சித்தரித்து களையெடுப்பு நடத்துவது முற்றிலும் தேர்தல் முறையினாலேயே. அவர்கள் வாக்குகளால் தோற்கடிக்கப் படவேண்டும் மற்றும் அதைவிட வேறு எதுவுமில்லை. இந்த வகை பிரச்சாரங்களால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு குழி தோண்டுவது மிகவும் சுலபம்.
“கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப்பகுதியில் தமிழ் அரசியலின் மேலாதிக்க மனநிலை பிரிவினைவாதமாக மாறியது. இது தமிழ் ஈழத்தை அடைவதற்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற நிலைக்கு முன்னகர்த்தியது. வருடங்கள் கடந்தபோது காலத்துக்கு காலம் காட்சிகளும் மற்றும் நடிகர்களும் மாறினார்கள், ஆனால் துரோகத்தனமான இந்த நாடகம் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது”.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஜி.ஜி பொன்னம்பலம் மற்றும் அவரது கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்பன பிரபலமாக அறியப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்கிற சமநிலை பிரதிநிதித்துவ திட்டத்தை கோரின. சோல்பரி ஆணையத்தினால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது மேலாதிக்க அரசியலமைப்பை வழங்கியது. தேர்தல்கள் நடத்தப்பட்ட வேளை சோல்பரி ஆணைக்குழுவுக்கு ஆதரவளித்த சேர் அருணாசலம் மகாதேவா மற்றும் ஐதேகவின் தமிழ் வேட்பாளர்களை துரோகிகள் என அழைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் தமிழ் காங்கிரஸ் என்பன அவர்களை விட சிறப்பான பெறுபேற்றை பெற்றன.
சுதந்திரம் கிடைத்ததின் பின்னர் நடைமுறைகேற்றபடி பொன்னம்பலம் தனது நிலைப்பாட்டை பதிலளிக்கும் ஒத்துழைப்பாக மாற்றிக்கொண்டார். அவர் அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சரானார். டி.எஸ்.சேனநாயக்காவின் அமைச்சரவையில் பொன்னம்பலம் அமைச்சரானதும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மற்றும் இதர பெடரல் ஆதரவாளர்களால் பொன்னம்பலம் துரோகி என அழைக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தங்கள் போட்டியாளர்களை மழுங்கடிப்பதற்கு துரோகி என்கிற முத்திரையை வெகு தாராளமாக பயன்படுத்தியது. எனினும் செல்வநாயகமும் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் 1965ல் டட்லி சேனநாயக்காவின் தேசிய அரசாங்கத்தில் இணைந்திருந்த வேளையில் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று தமிழர் சுயாட்சிக் கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர் துரோகி என விமர்சித்தது,அந்த நேரத்தில் அதிக நம்பிக்கையை பெறவில்லை. ஏனெனில் அதற்கு செல்வா மீது மக்கள் கொண்டிருந்த உயர்ந்த மதிப்பே காரணமாக இருந்தது. ஆனால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து தனது சொந்த கட்சியை ஆரம்பித்ததுக்காக நவரத்தினம் துரோகி என அழைக்கப்பட்டு அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டார்.
(தொடரும்)
- டி.பி.எஸ்.ஜெயராஜ்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக