சீகிரியாவின் கண்ணாடிச் சுவரில் பெயரொன்றை கிறுக்கினாரென்ற குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற யுவதியின் நலனை விசாரிப்பதற்காக அவரின் தயாரான சின்னத்தம்பி தவமணி (61) அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்று சந்தித்திருந்தோம்.
சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய 5 நிமிடம் என்ற குறைந்த நேர இடைவெளிக்குள் உதய ஸ்ரீ தன் தயாரிடம் கண்ணீருடன் சொன்னது….
‘அம்மா நான் அறிந்து எந்த தவறையும் செய்யவில்லை. ஏன் இன்னும் என்னை விடுதலை செய்யவில்லை. என்ன தவறு செய்யதற்காக என்னை சிறையில் அடைத்தார்கள்? நீதிமன்றத்தில் அவர்கள் சொன்ன விடயங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை.”
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக அறிந்துக் கொள்வதற்காக நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தாண்டி கிராமம் நோக்கி பயணமானோம்.
இந்த பயணத்தில் அம்பாறை மற்றும் கல்முனை பிரதான நகரங்களை கடந்து திருகோணமலை நோக்கி செல்லும் பாதையில் மண்டூர், செங்கலடி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, காத்தான்குடி ஆகிய சில நகரங்களை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சந்திக்கும் சித்தாண்டி நகரத்தில் ரயில் பாதையை கடந்து பயணித்த போது பின்தங்கிய இடமாக காணப்படும் சித்தான்டி கிராமத்தை கண்டோம். உதயாவின் வீடு சித்தான்டி விநாயககிராமம், நல்லையா வீதியில் அமைந்திருந்தது.
நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற பொழுது அயலவர்கள் அந்த வீட்டுக்கு வந்திருந்ததை கண்டோம். அங்கு சின்னத்தம்பி உதய ஸ்ரீயின் தாயார், சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டின் வாசல் படியில் அமர்ந்த படி பெரும் தண்ணீர் தாகத்துடன் இருப்போர் ஒரு துளி நீர் கூட கிடைக்காதோ என்ற ஏக்கத்துடன் இருப்பது போல் பாதையை நோக்கி பார்த்து காத்திருந்தனர்.
‘ஐயா! நாங்கள் அனைவரும் சோகத்தில் தான் இருக்கின்றோம். இந்த அப்பாவி பெண்ணுக்கு நடந்தது பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இது பற்றி பெரிய இடங்களுக்கு தெரிவித்து இந்தப் பெண்ணை பொது மன்னிப்பில் விடுவிக்க உதவிபுரியுங்கள்.”
அங்கிருந்த அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனக்குத் தெரிந்த சிங்களத்தில் எமக்கு தெரிவித்தார். அவரின் மொழிபெயர்ப்பு உதவியை தொடர்ச்சியாக பெற்றுக் கொண்ட நாங்கள் அங்கிருந்த அனைவரதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டோம்.
அதன்படி சின்னத்தம்பி தவமணி அவர்கள் தன் மகள் முகம் கொடுத்த சம்பவம் குறித்து கண்ணீருடன், நெஞ்சத்தை ஈரமாக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்தார்.
‘எனக்கு 61 வயதாகின்றது. எனது கணவர் இறந்து 28 வருடங்கள் ஆகின்றது. எனக்கு 5 பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் இருக்கின்றார்கள். 1987 அம் ஆண்டு தான் என் கணவர் இறந்தார். அன்றில் இருந்து நான் ரொம்ப கஸ்டப்பட்டு தான் என் பிள்ளைகளை வளர்த்து எடுத்தேன்.
மட்டக்களப்பு பூலாவெளியில் அமைந்துள்ள தனியார் நிறுவமொன்றுக்கு எனது மகள் வேலைக்கு சென்றார். நாட்சம்பளம் 650 ரூபா. ஆனால் மாதமொன்றிக்கு ரூ.15000 கிடைத்தது. இந்த பயணத்திற்கு செல்ல முதல் மகள் என்னிடம், ‘வேலை செய்யும் இடத்தில் அனைவரும் சீகிரியாவுக்கு சுற்றுலா செல்கின்றார்கள் நானும் செல்லவா?” என்று கேட்டார். எங்களிடம் அந்த சுற்றுலா செல்லும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லையே. நீங்கள் போக வேண்டாம் என்று சொன்னேன்.
பஸ்சிற்கு மட்டும் 350 ரூபா கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் தான் நான் அவரை அனுப்பி வைத்தேன்.
அன்று அவர் சீகியாவை பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் வெள்ளைக்காரர் இருவர் படமெடுப்பதை பார்த்திருக்கின்றார். மகள் யோசித்திருக்கின்றார். கண்ணாடிச்சுவரில் தனது பெயரை எழுதிச் சென்றால் நல்லதென்று. அவர் தனது நண்பி பக்கத்தில் இருக்கும் போதுதான் ‘உதயா” என்ற பெயரை எழுதினார்.
இந்த சம்பவம் குறித்து சில ஊடகங்களில் தன் காதலரின் பெயரை எழுதினார் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். அப்படி ஒரு பெயரை அவர் அங்கு எழுதவில்லை. மகள் அந்த பெயரை எழுதி முடிக்கும் நேரத்தில் ஒருவர் அவ்விடத்திற்கு ஓடி வந்து உதயா என்பவர் யார் என்று கேட்டிருக்கின்றார். நான் தானென்று எனது மகள் பதிலளித்துள்ளார். அப்பொழுதான் பெயர் எழுதியது தவறு என்று அறிந்து கொண்டுள்ளார்.
அவர் அருகில் வந்த அந்த நபர்; இதை எழுதியமைக்காக 5 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டிவரும். அத்துடன் 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவருமென்று தெரிவித்திருக்கின்றார். அதை கேட்ட மகள் சீகிரியா குன்றிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கின்றார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பி தர்சினிதான் காப்பாற்றியிருக்கின்றார். சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அத்தினமே கைது செய்யப்பட்டு தம்புள்ள பொலிசாரினால் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நான்கு முறை நீதிமன்றம் அழைக்கப்பட்டு நான்காவது முறைதான் தீர்ப்பு வழங்கப்பட்டுதான் மகள் 2 வருடங்களுக்கு சிறை அனுப்பட்டார்.
நீதிமன்றத்தில் நீங்கள் குற்றத்தை ஒப்பு கொள்கின்றீர்களா? என்று கேட்ட போது இந்தப் பிரச்சினையின் பாராதூரம் அவருக்கு புரியவில்லை. ஒன்றையும் அவரால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. மகள் ஒன்றும் சொல்லவில்லை. அந்த சந்தர்பத்தில் அங்கிருந்த முஸ்லிம் ஒருவர் தான் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
நான் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால் ‘என் மகளை விடுதலை செய்து தாருங்கள்.” நாங்கள் வாழ்வதற்கு உதவி புரிந்தது என் மகள் தான். இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் மா இடித்து அவற்றை காலையில் மட்டக்களப்பில் கடைகளுக்கும், வீடுகளுக்கும் விற்றுதான் எங்களுக்கு கொஞ்சமமாவது பணம் கிடைத்து வந்தது. அதுவும் இந்தப்பிரச்சினைக்கு பின்னால் இல்லாமல் போய்விட்டது.
என் மகளுக்கு மொழி தெரியாது. அவர் இப்பொழுது மொழி தெரியாதவர் மத்தியில் இருக்கின்றார். அவருக்கு ஒன்றும் தெரியாது. ஜனாதிபதி ஊடாக அவரை விடுவித்து தாருங்கள். மகள் தவறு செய்திருந்தால் நான் காலில் விழுந்து வணங்குகின்றேன் மகளை விடுவித்து தாருங்கள்.”
வந்தாறுமூலை மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரை கற்ற 28 வயதான சின்னத்தம்பி உதய ஸ்ரீ, மட்டக்களப்பு புலாவெளி பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளாரென்றும் அவர் இதுவரையும் வேண்டுமென்றே என்ற தவறையும் செய்யதில்லை என்று எங்களிடம் தெரிவித்தார்கள்.
அவர் நண்ப, நண்பிகளிடம் நல்லுறவுடன் பழகியதாகவும் இன்று அவர் சிறைத்தண்டனை அனுபவிக்குமளவிற்கு என்ன தவறை செய்தார் என்று அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
சின்னத்தம்பி செந்தில் குமார் – எதனால், போதைப் பொருள் விற்பனை புரியும் பாரதூரமான குற்றச் செய்கள் புரியும் நபர்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் இந்த சமுதாயத்தில் என் சகோதரி அறியாமல் செய்ய தவறை குறித்து அவதானம் செலுத்தி மன்னிப்பு வழங்கும் படி கேட்டுக் கொண்டார்.
வடக்கு கிழக்கு வாழ்வோதயம் சமூகநலன் அமைப்பின் தலைவர் எஸ்.லோகநாதன் அவர்கள் – 2 வருட காலத்திற்கு ஒரு யுவதி சிறைத்தண்டனை அனுபவிப்பதென்பது அந்த யுவதியின் வாழ்க்கையில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தும். அவர் திருமணமாகதவர், குடும்பம் அவரது உழைப்பையே நம்பியிருந்தது. மிகவும் வறிய குடும்பத்தின் அப்பாவிப்பெண். சுனாமியின் போது வீட்டினை இழந்த இவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே வீட்டை கட்டி வழங்கியது. இந்த நாட்டில் தவறு புரிபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது பலர் தவறு புரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். தவறுகள் புரிந்த சுறாக்கள் வெளியில் இருக்கும் போது. இந்த அப்பாவிப் பெண் ஏன தண்டனை பெற வேண்டும்?
எங்கள் அமைப்பின் சார்பாக ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொள்வதென்றால் மனிதாபிமான ரீதியாக இந்த பெண்ணை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள்.
சீகிரியாவை ரசிக்கச் சென்ற சித்தாண்டியை சேர்ந்தயுவதியான சின்னத்தம்பி உதய ஸ்ரீக்கு நடந்த இடர் பற்றி தகவல் சேகரிக்க சென்ற நாங்கள் மீண்டும் எங்கள் இடம் நோக்கி திரும்பி வந்தது, உதய ஸ்ரீக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்தனையுடன்….
மவ்பிம பத்திரிகைக்காக – தீகவாப்பிய நிமா சதுவந்தி மற்றும் கோனாகொல்ல பிறேமததாச அரபேகெதர
தமிழ்லீடருக்காக தமிழில் – ஜீவிதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக