செவ்வாய், 17 மார்ச், 2015

சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களே! இரகசிய முகாங்களை அம்பலப்படுத்துங்கள்....?

"இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், திங்கட்கிழமை (16) தெரிவித்துள்ளார்."

அதுசரி இதுவொன்றும் இரகசியமான விடயம் அல்ல. மாறாக புலிகளின் பிரசன்ன காலத்தில் வன்னியிலும், யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் யாழ்பாணத்திலும் புலிகளின் இ(ப)ரகசிய வதை முகாங்கள் இருந்தன.


உங்கள் தானைத் தலைவன் பிரபாகரன், பொட்டு அம்மான் வைத்திருந்த இரகசிய முகாங்கள் துணுக்காய், புதுக்குடியிருப்பு, சாவகச்சேரி, ஆனைக்கோட்டை போன்ற வதைமுகாங்கள் பற்றிய விபரங்களும் உங்களுக்குத் தெரியும்தானே. அவற்றையும் அம்பலப்படுத்துவீர்களா?,

இந்த முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதையின் பின்பு கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பீர்களா?

இதில் உங்கள் முன்னாள் சகாக்கள் பலரும் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் இதுபற்றிய முழுத்தகவல்களையும் வெளிக்கொணர குரல் கொடுப்பீர்களா?

இதற்கான கோரிக்கைகளை ஐநா சபை முன்பு கோரிக்கையாக முன்வைப்பீர்களா? உங்கள் உயிருக்கு பாதுகாப்பு தேவைப்படியின் நாம் தரத்தயாராக இருக்கின்றோம்.

உங்கள் தலைவன் பிரபாகரனின் இரகசிய முகாங்களை அம்பலப்படுத்த உங்களால் முடியுமா...?

தற்போதுதானே புலிகள் இல்லை. புலிகளின் வதை முகாங்கள் பற்றி உண்மைகளை (உங்களுக்கு தெரிந்தவைதான்) வெளிக் கொணர்வதினால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படப்போவதும் இல்லை.

இவற்றை விடவும் சதா உங்களுக்கு இலங்கை அரசபடைகளின் பாதுகாப்புக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்தே பிறகு என்ன பயம்.

இந்திய உளவுப்பிரிவுக்கு பழவந்தாங்கல் பாதுகாப்பு இடத்தைக் காட்டிக் கொடுத்த சாமர்த்தியம் உங்களுக்கு இருக்குத்தானே? புரிந்தால் சரி....?

எல்லாம் தேர்தலுக்கான வாய்வீச்சுகள் என்று எல்லோருக்கும் தெரியும் !!

பயப்படதீர்கள் தமிழ் மக்களும் உங்களைப் போன்றவர்களிடம் ஏமாறுவதில் எப்போதும் போல் வரும் தேர்தலிலிலும் ஏமாந்துவிட்டத்தான் போகப்போகின்றனர்.

எனவே தேர்தல் வெற்றி உங்களுக்கே! சும்மா வாய் சவட்டல் விடாதீர்கள்!! கொஞ்சமாவது மனிதனாக நடக்க முயற்சி செய்யும்.

 - சாகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல