தலையில் அம்பு ஒன்று ஊடுருவிய நிலையில் தாய் கங்காரு ஒன்று அதிசயிக்கத்தக்க வகையில் நான்கு நாட்களாக உயிர் பிழைத்திருந்த சம்பவம் அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
வட பிறிஸ்பேனிலுள்ள வனப் பிராந்தியத்தில் தலையில் அம்பு பாய்ந்த நிலையில் காணாமல் போயிருந்த குறிப்பிட்ட கங்காரு நான்கு நாட்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு அவுஸ்திரேலிய வன வாழ்க்கை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அந்த கங்காரு மீட்கப்பட்ட போது அது தனது குட்டியை வயிற்றிலுள்ள பையில் சுமந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.
அம்பானது அந்த கங்காருவின் மண்டையோட்டுக்கும் மூளைக் கும் இடையிலான பகுதியினூடாக துளைத்துச் சென்றிருந்தது.
இந்நிலையில் மிருக வைத்தியர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் கங்காருவின் தலையைத் துளைத்துச் சென்றிருந்த அம்பை வெற்றிகரமாக அகற்றினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக