சனி, 20 ஜூன், 2015

கணவன் கள்ள உறவு – ஆணுறுப்பை எரித்தார் மனைவி

தனது இளவயது சகோதரியுடன் பாலியலுறவு கொள்வதை நேரடியாகக் கண்ட மனைவி கணவன் துாக்கத்தில் இருக்கும் போது அவனது ஆண்குறிப் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை துணுக்காய்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.



மனைவியை சமுர்த்தி முத்திரை விடயமாக பிரதேசசெயலகத்திற்கு சென்றுவிட்டதையடுத்து மனைவி பஸ்சில் வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என நினைத்து மனைவியின் இளைய சகோதரியான 15 வயதுச் சிறுமியை பாடசாலையில் இருந்து தனது தாய் வீட்டுக்கு சென்ற போது மறித்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான் கணவன்.

அங்கு வைத்து அச் சிறுமியுடன் பாலியலுறவு வைத்துக் கொண்டிருந்துள்ளான். இந் நேரம் தனது சிநேகியின் மோட்டார் சைக்கிளில் மனைவி அங்கு திடீரென வந்து இறங்கியுள்ளார்.

தனது சகோதரியின் சைக்கிள் அங்கு நிற்பதையடுத்து சந்தேகமடைந்த மனைவி வீட்டினுள் சத்தம் இன்றி நுழைந்த போது தனது கணவனின் திருவிளையாடலை நேரடியாகப் பார்த்துள்ளார்.

அங்கு வைத்து தனது சகோதரியை நையப்புடைத்துவிட்டு கணவனை ஏசாது விட்டுவிட்டு தனது தாய் வீட்டில் தங்கையைக் கொண்டு சென்று விட்டு அங்கு வைத்தும் சகோதரியைத் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் வீட்டுக்கு வந்து அமைதியாக இருந்த மனைவி இரவு படுக்கைக்கு சென்ற பின்னர் நடுச் சாமம் போல் கணவன் அயர்ந்து துாங்கிய சமயம் அவனது அந்தரங்கப் பகுதிக்கு மண்ணெய் ஊற்றி திடீரென தீ வைத்துள்ளார்.

கணவனின் அலறல் சத்தம் கேட்டு அப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அந் நேரமே குறித்த நபரின் திருவிளையாடல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபருக்கு முதலுதவி அளித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது குறித்த நபர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அடுத்தநாள் காலை கணவன் அங்கிருந்து மாயமானதாகத் தெரியவருகின்றது.

தற்போது கணவர் வவுனியாவில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து வைத்தியசாலை சென்றுவருவதாகத் தெரியவருகின்றது.

மனைவி முன்னாள் போராளி என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல