சனி, 20 ஜூன், 2015

இரு வருட கால­மாக பெண்ணின் தாடையை ஊடு­ரு­வி­யி­ருந்த பல் துளை­யிடும் உப­க­ரணம்

இரு வருட கால­மாக பற்­களை துளை­யிடும் உப­க­ரணம் தாடையில் ஊடு­ரு­வி­யுள்­ளதை அறி­யாது பெண்­ணொ­ருவர் வாழ்ந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.



வார்விக் ஷியரைச் சேர்ந்த அலிஸன் சவுத்வூட்(44 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு பல் துளை­யிடும் உப­க­ரணம் ஊடு­ரு­வி­யி­ருப்­பதை அறி­யாது வாழ்ந்­துள்ளார்.

அவர் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பற்­குழி சிகிச்­சை­யொன்றைப் பெறு­வ­தற்­காக பல் மருத்­து­வ­ரிடம் சென்றார்.

இதன்­போது பல் மருத்­து­வரின் துளை­யிடும் உப­க­ர­ணத்தின் ஒரு பகுதி உடைந்து அவ­ரது தாடையை ஊடு­ரு­வி­யுள்­ளது.

இதனால் அவ­ரது முகத்தின் ஒரு பகுதி முழு­மை­யாக உணர்­வி­ழந்­தது.

இத­னை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட 'எக்ஸ்ரே' பரி­சோ­த­னையின் போது அவ­ரது தாடையில் துளை­யிடும் உப­க­ர­ணத்தின் ஒரு பகுதி ஊடு­ரு­வி­யி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இந்­நி­லையில், அலிஸன் குறிப்­பிட்ட மருத்­து­வ­னைக்கு எதி­ராக மேற்­கொண்ட சட்ட நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து, மேற்­படி வழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் அலிஸனுக்கு 5,500 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நஷ்டஈட்டை வழங்க அந்த மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல