ஞாயிறு, 7 ஜூன், 2015

நியூ­ஸி­லாந்தில் அகதிகளாக தஞ்சம் கோரி தீமோரில் தவிக்கும் இலங்­கை­யர்கள்

நியூ­ஸி­லாந்தில் தஞ்சம் கோரி ஆபத்­தான கடற்­ப­யணம் மேற்­கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்­தைகள் உட்­பட 54 இலங்­கை­யர்கள், தீமோர் தீவில் கைவி­டப்­பட்ட நிலையில் இருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

மேலும், இவர்­க­ளுடன் பங்­க­ளா­தே­சத்­த­வர்கள் 10 பேர், மியன்­மாரைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக மொத்தம் 65 பேர் இந்த அவல நிலைக்கு ஆளாகி, தீமோர் தீவின் கப்பாங் என்ற இடத்தில் அந்த நாட்டின் பொலிஸ் காவலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,



தீமோர் தீவில் பொலிஸ் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள இவர்கள், கடந்த மே மாதம் 5 ஆம் திகதி இந்­தோ­னே­ஷி­யாவில் இருந்து நியூ­ஸி­லாந்தை நோக்கிப் பயணம் செய்­த­போது அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­கா­ரிகள் மற்றும் அந்த நாட்டின் கடற்­படை இரா­ணுவப் படை­யி­னரால் பிடித்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தி­ருக்­கின்­றார்கள்.

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி பிடி­பட்ட இவர்கள், 31 ஆம் திகதி வரையில் அவர்­களால் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

அப்­போது தங்­களை நியூ­ஸி­லாந்து நாட்­டிற்குச் செல்­ல­விட வேண்டும் என்று உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­திய இவர்­களின் பட­கு­களை அந்த அதி­கா­ரிகள் பறித்துக் கொண்டு, இவர்­க­ளுடன் சென்ற மாலு­மி­களை அனுப்­பி­யுள்­ளனர்.

இது­பற்றி அவர்­களே தமது கைப்­பட எழு­தி­யுள்ள கடிதம் ஒன்றில் விப­ர­மாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள்.

நியூ­ஸி­லாந்து அர­சாங்­கத்­திற்கு எழு­தப்­பட்­டுள்ள அந்தக் கடி­தத்தின் முழு விபரம் வரு­மாறு:

உங்கள் நாட்­டிற்கு அடைக்­கலம் தேடி வந்த 54 இலங்­கைத்­த­மி­ழர்­களும், 10 பங்­க­ளா­தே­சிகள், 01 மியன்­மார் வாசிகளாகிய நாங்கள் தங்­க­ளு­டைய கவ­னத்­திற்குத் தெரி­யப்­ப­டுத்திக் கொள்­வது யாதெனில்,

எங்கள் நாட்டில் எங்­க­ளுக்கு உயிர் உத்­த­ர­வா­த­மின்றி நாட்டை விட்டு வெளி­யேறி சில மாதங்கள் அக­தி­க­ளாக இந்­தோ­னே­ஷி­யாவில் வசித்து வந்தோம். எங்­க­ளுக்கு அடைக்­கலம் தரு­வீர்கள் என்ற நம்­பிக்­கையில் உங்கள் நாட்டைத் தேடி 05.05.2015 அன்று அதி­காலை 5 மணிக்கு நாங்கள் 65 பேரும் கடல் வழி­யாக உங்கள் நாட்­டிற்கு படகு மூலம் பய­ணத்தைத் தொடர்ந்தோம்.

எங்­க­ளது பயணம் சுமு­க­மாக சர்­வ­தேச கடலில் சென்று கொண்­டி­ருந்த போது அவுஸ்­தி­ரே­லி­யாவின் சுங்கத் திணைக்­களப் படகால் 17.05.2015 மாலைப் பொழுதில் தடுத்து நிறுத்­தப்­பட்டோம்.

எமது படகில் இருந்த ஆவ­ணங்­க­ளா­கிய வரை­படம், ஜீ.பி.எஸ், சற்­றலைட் போன், திசை­காட்டி ஆகி­ய­வற்­றினை அதிகாரிகள் பரி­சோ­தனை செய்த போது நாங்கள் நியூ­ஸி­லாந்து செல்­கின்றோம் என்­ப­தனை அறிந்து கொண்ட அவர்கள், தங்­க­ளது கடற்­ப­ரப்­பிற்கு செல்ல வேண்டாம் என்­ப­தனைத் தெரி­யப்­ப­டுத்தி விட்டு எம்­மி­ட­மி­ருந்து விலகி விட்­டனர்.

பின்பு நாங்கள் சர்­வ­தேசக் கடலின் ஊடாக எமது பய­ணத்தை மீண்டும் உங்கள் நாட்டை நோக்கித் தொடர்ந்து கொண்­டி­ருந்தோம். பின்பு மீண்டும் 6 நாட்கள் கழித்து 22.05.2015 அன்று மாலைப்­பொ­ழு­தினில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சுங்கத் திணைக்­களப் படகும், கடற்­படை இரா­ணு­வமும் 2 பட­கு­களில் வந்து, எங்­க­ளது பட­கினை இடை­ம­றித்து எமது படகு மாலு­மியை சிறிய படகில் அவர்­க­ளது சுங்­கப்­ப­ட­கிற்கு கொண்டு சென்­றார்கள்.

கொண்டு சென்­ற­வர்கள் 6 மணி நேரங்­க­ளாக மாலு­மி­யுடன் மட்டும் கலந்­து­ரை­யாடி விட்டு இரவு வேளை­யா­னதும் கடற்­ப­டை­யினர் எமது பட­கிற்குள் நுழைந்­தனர். பின்பு எங்கள் அனை­வ­ரையும் படகின் வெளிப்­ப­கு­திக்கு அழைத்து அங்கு அமர வைத்­தனர்.

இதில் குழந்­தைகள், பெண்கள் (கர்ப்­பி­ணிப்­பெண்கள்) அனை­வரும் அமர்த்­தப்­பட்ட போது இரவு வேளை மழை பெய்யத் தொடங்­கி­யது. அப்­போது பெண்கள், குழந்­தைகள் அனை­வ­ரையும் பாது­காப்­பான இடத்­திற்கு எடுத்து விட்டு மற்­ற­வர்­களை வெளி­யி­லேயே விட்­டனர்.

மறுநாள் அதி­காலை நாங்கள் "எங்­களை எங்கு கொண்டு செல்­கின்­றீர்கள்" எனக் கேட்ட போது, எவ்­வித பதிலும் சொல்­லாமல் எங்­களை, எங்­க­ளது பட­கி­லேயே அழைத்துச் சென்­றனர்.

சில நாட்­களின் பின்னர் வடக்கு அவுஸ்­தி­ரே­லி­யா­விற்குச் சொந்­த­மான குடாப் பரப்பில் வைத்து எமது பட­கி­லி­ருந்து அவர்­களின் சுங்க வரிப்­ப­ட­கிற்கு 50 பேரும், இரா­ணுவப் பட­கிற்கு 15 பேரு­மாக காலைப் பொழுதில் மாற்­றப்­பட்டோம்.

அன்­றி­லி­ருந்து 31.05.2015 வரை அவர்­க­ளு­டைய கப்­பலில் உள்ள தடுப்­ப­றைக்குள் அடைக்­கப்­பட்டோம். அதே­வே­ளை­களில் மாற்­று­வ­தற்கு உடை­க­ளின்றி வச­திகள் அற்ற நிலையில் இருந்தோம்.

2 நாட்கள் அவர்கள் எவ்­வித பதிலும் எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தா­ததால் அடுத்த நாள் சுங்க வரிப் பட­கி­லி­ருந்த 50 பேரும், எமக்கு நல்ல பதில் தரு­மாறு உண­வுகள் ஏதும் உண்­ணாமல் உண்­ணா­வி­ரதம் இருந்தோம். அதன் பின்பு அவர்கள் தாம் நல்ல முடிவு தரு­வ­தாகத் தெரி­யப்­ப­டுத்­தி­னார்கள்.

அவர்­க­ளு­டைய அந்த உறுதியை நம்பி எது­வித குழப்­பங்­களும் இன்றி அவர்­க­ளின் நல்ல பதி­லுக்­காக எதிர்­பார்த்து இருந்தோம். அவர்கள் எமது சுய விப­ரங்­க­ளையும், புகைப்­ப­டங்­க­ளையும் எடுத்து எமக்கு ஆத­ர­வான முடி­வெ­டுப்­ப­தாகத் தெரி­யப்­ப­டுத்­தி­னார்கள்.

அதன் பின்பு அக­தி­க­ளா­கிய எங்­க­ளிடம் எந்­த­வித கருத்­துக்­களும் கேட்­காமல் நாம் கொடுத்த மனுக்­களை நிரா­க­ரித்து விட்டு எம்மை வலுக்­கட்­டா­ய­மாக எமது நல்ல நிலையில் இருந்த பட­கினைத் தம் வசம் வைத்துக் கொண்டு, எந்த வசதியுமற்ற அவர்­களின் வேறு 2 சிறிய பட­கு­களில் எம்மை அவர்­களின் பாது­காப்­புடன் தீமோர் கடற்­ப­ரப்­பிற்கு அண்­மையில் கூட்டிச்சென்று அநா­த­ர­வாக விட்டு விட்­டனர்.

பின்பு மாலு­மி­களும் எம்மை இடை­நடுவே விட்டு விட்டு தண்­ணீரில் குதித்து தப்பி விட்­டனர். அதன் பின்னர் எவ்­வித வழியும் தெரி­யாமல் இயந்­திரக் கோளாறு கார­ண­மாக படகு இயங்­காத போது படகு முரு­கக்­கற்­பா­றையில் மோதி­யது.

அதன் பின்னர் ஆபத்­தான நிலையில் கடலில் பாய்தோம். இதில் சிறு­வர்கள், பெண்கள் (கர்ப்­பி­ணிப்­பெண்கள்) அடங்­க­லாக கடலில் குதித்தோம். அந்த சந்­தர்ப்­பத்தில் அனைவரும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் கிராமவாசிகள் எம்மை கண்டு இரு சிறு படகில் வந்து குழந்தைகளையும், பெண்களையும் மீட்டனர்.

மற்றையவர்கள் 1.30 மணித்தியாலங்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். பின்பு அந்தக் கிராமவாசிகள் அங்குள்ள பொலிஸாரிடம் அறிவித்து எம்மை அவர்களிடம் கைய ளித்தனர்.

தற்சமயம் தீமோர் தீவில் உள்ள குப்பாங் என்ற இடத்தில் இருக்கிறோம். இப்போதும் நியூஸிலாந்து அரசாங்கம் எங்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கு எடுக்கும் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல