ஞாயிறு, 7 ஜூன், 2015

மீண்டும் மர­ண­தண்­டனை யாருக்கு வைக்­கப்­படும் குறி?

மர­ண­தண்­டனை குறித்த விவா­தங்கள் இலங்­கையில் மீண்டும் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

இதற்கு, சர்­வ­தேச புகை­யிலை எதிர்ப்பு தின நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன நிகழ்த்­திய உரை மட்டும் காரணம் அல்ல, புங்­கு­டு­தீவில் வித்­தியா என்ற மாண­விக்கு நிகழ்த்­தப்­பட்ட கொடூ­ரமும் கூட ஒரு காரணம் தான்.


கொடூ­ர­மான குற்­றச்­செ­யல்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­னெப்­போதும் இல்­லா­த­ள­வுக்கு இலங்­கையில் இப்­போது வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இதற்குக் காரணம் நாட்டில் அதி­க­ரித்­துள்ள குற்­றச்­செ­யல்கள் தான் என்­பதில் சந்­தே­க­மில்லை. குற்­றச்­செ­யல்­களின் கொடூ­ரத்­தன்­மையும், அவற்றின் பாதிப்­பு­களும், கடு­மை­யான தண்­ட­னைகள் விதிக்­கப்­ப­டு­வதன் மூலம், இவற்றைக் குறைக்­கலாம் என்ற ஆதங்­கத்தை பெரும்­பா­லா­னோ­ரிடம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில், கடந்த நான்கு தசாப்­தங்­க­ளாக மர­ண­தண்­டனை எவ­ருக்கும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இலங்­கையின் குற்­ற­வியல் சட்­டத்­தின்­படி, நீதி­மன்­றங்கள் மர­ண­தண்­ட­னையை விதிக்­கின்ற போதிலும், அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

கடை­சி­யாக 1976ஆம் ஆண்டே இலங்­கையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்குப் பின்னர், மர­ண­தண்­டனை பெற்­ற­வர்கள், ஆயுட்­காலம் முழு­வ­தையும் சிறையில் கழிக்கும் நடை­மு­றையே இருந்து வரு­கி­றது.

அதி­க­பட்­ச­மான குற்­றங்­க­ளுக்கே - மர­ண­தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது.

பல்­வேறு நாடுகள் மர­ண­தண்­ட­னையை சட்­டத்தில் இருந்து நீக்­கா­வி­டினும், நீதி­மன்­றங்கள் மரண தண்­ட­னையை கொடுப்­பதை முடிந்­த­வரை தவிர்த்து வரு­கின்­றன.

எனினும், இலங்­கையில் நீதி­மன்­றங்­களால் மர­ண­தண்­டனை விதிக்­கப்­படும் சம்­ப­வங்கள் அதி­க­மா­கவே இடம்­பெ­று­கின்­றன.

மிக சமீ­பத்தில், தனது மேல­தி­கா­ரி­யான இரா­ணுவ ெகப்டன் ஒரு­வரை பலாலி படைத்­த­ளத்­துக்குள் வைத்து சுட்­டுக்­கொன்ற லெப்­டினன்ட் தர அதி­கா­ரிக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்றம் மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

இது­போன்ற பல தீர்ப்­புகள் அண்­மைக்­கா­லங்­களில் நீதி­மன்­றங்­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை என்­பதால், இந்த தண்­ட­னையை ஒழிக்க வேண்டும் என்ற பிர­சா­ரங்கள், ஏனைய நாடு­களில் இடம்­பெ­று­வதைப் போன்று அவ்­வ­ள­வாக சூடு­பி­டித்­தி­ருக்­க­வில்லை.

எனினும், தற்­போது மர­ண­தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வாக குரல்கள் எழுந்­துள்­ளதைப் போலவே, அவ்வப்­போது அதற்­கெ­தி­ரான குரல்­களும் இலங்­கையில் எழுந்­தி­ருக்­கின்­றன.

சவூதி அரே­பி­யாவில் கொலைக்­குற்றம் சாட்­டப்­பட்ட ரிஸானா சிரச்­சேதம் செய்­யப்­பட்ட போது, மர­ண­தண்­டனை ஒழிக்­கப்­பட வேண்டும் என்று இலங்­கை மக்­க­ளி­டையே பெரும் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டது.

அது­போ­லவே, ராஜீவ்­காந்தி கொலை வழக்கில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட சாந்தன், பேர­றி­வாளன், முருகன் ஆகி­யோரின் கருணை மனுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, தண்­டனை நிறை­வேற்ற நாள் குறிக்­கப்­பட்ட போது, அதற்கெதி­ராக கடு­மை­யான குரல்கள் எழுந்­தன.

மர­ண­தண்­டனை ஒழிக்­கப்­பட வேண்டும் என்றும், அத்­த­கை­ய­தொரு தண்­டனை முறையே உலகில் இல்­லாமல் ஒழிக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஊட­கங்­களில் அது­பற்­றிய பிர­சா­ரங்கள் தீவி­ர­மாக இடம்­பெற்­றன. மிக­ அண்­மையில், போதைப்­பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டில், மயூரன் என்ற இலங்கை வம்­சா­வளி இளை­ஞ­ருக்கு இந்­தோ­னே­ஷியாவில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட போதும், கடு­மை­யான அதிர்­வ­லைகள் உண­ரப்­பட்­டன.

இந்த மூன்று சந்­தர்ப்­பங்­க­ளிலும் தண்­ட­னையை எதிர்­கொண்­ட­வர்கள் தமிழ் பேசுவோர் என்ற உணர்வு, மட்டும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை.

ரிஸா­னா­வுக்கும், மயூ­ர­னுக்கும் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட கொடூ­ர­மான முறையும், இந்த தண்­ட­னைக்கு எதி­ரான உணர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆனால், அதே­நே­ரத்தில், புங்­கு­டு­தீவில் வித்­தியா என்ற மாணவி கூட்டு வன்­பு­ணர்­வுக்குப் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்ட கொடூரம் அரங்­கே­றிய போது, குற்­ற­வா­ளி­களை தூக்கில் போட வேண்டும் என்ற கோஷம் மேலோங்­கி­யது.

யாழ்ப்­பா­ணத்­திலும் ஏனைய இடங்­க­ளிலும் நடந்த போராட்­டங்­களின் போது, வித்­தியா படு­கொலைக் குற்­ற­வா­ளி­களை தூக்கில் போட வேண்டும் என்று மக்கள் ஆவே­சப்­பட்­டனர்.

ஒரு சில இடங்­களில் பகி­ரங்­க­மாக அவர்­களைத் தூக்­கி­லிட வேண்டும் என்றும் இல்­லா­விட்டால் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறும் கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன.

ரிஸானா, மயூ­ரனின் மர­ணங்­களின் போது, மர­ண­தண்­ட­னைக்கு எதி­ராக குரல் கொடுத்த தமிழ்­மக்­களைக் கூட வித்­தி­யா­வுக்கு நிகழ்ந்த கொடூரம், மர­ண­தண்­ட­னைக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளாக மாற்­றி­விட்­டது ஆச்­ச­ரியம்.

குற்­றங்­களின் கொடூ­ரத்­தன்­மையே, சில­வே­ளை­களில் இத்­த­கைய தடு­மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

வித்­தியா கொலை­யா­ளி­க­ளுக்கு உச்­ச­மான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் இங்கு மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. ஆனால், அது மர­ண­தண்­ட­னை­யாகத் தான் அமைய வேண்டும் என்று எதிர்­பார்த்தால், அது சில­வே­ளை­களில் ரிஸானா, மயூரன் மர­ணங்­களின் போது, அனு­ப­வித்த துய­ரங்கள் தொடர்­வ­தற்கும் கார­ண­மாகி விடும் என்­பதை மறுக்க முடி­யாது.

கடு­மை­யான தண்­ட­னைகள் குற்­றங்­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் அல்­லது இல்­லா­மலே செய்து விடும் என்ற கருத்து ஆதி­காலம் தொட்டு மனி­த­னிடம் இருந்து வரு­கி­றது. அதனால் தான் கொடூ­ர­மான மர­ண­தண்­டனை உள்­ளிட்ட பல தண்­டனை முறைகள் வகுக்­கப்­பட்­டன.

இவற்றில் தலையை சீவுதல், கையை வெட்­டுதல், கண்ணை சேதப்­ப­டுத்தி பார்­வை­யி­ழக்கச் செய்தல் போன்­றவை மட்­டு­மன்றி, வல்­லு­றவுக் குற்­ற­வா­ளி­களின் ஆண் உறுப்பை சிதைத்தல் உள்­ளிட்­ட­வையும் அடங்கும்.

அண்­மையில் வித்­தியா படு­கொ­லைக்குப் பின்னர், வடக்கில் விடு­தலைப் புலி­களின் காலத்தில், இத்­த­கைய குற்­றங்கள் நிகழ்ந்­தி­ருக்­க­வில்லை என்றும், நள்­ளி­ரவில் கூட வீதியில் செல்லும் அள­வுக்கு பெண்­க­ளுக்குப் பாது­காப்­பான நிலை இருந்­த­தா­கவும் அர­சாங்­கத்தில் இருக்கும் அர­சி­யல்­வா­திகள் கூட பெரு­மைப்­பட்டுக் கொண்­டனர்.

அவர்கள் அதை மட்டும் கூற­வில்லை- புலி­களின் காலத்தில் இருந்த மர­ண­தண்­டனை போன்ற கடு­மை­யான தண்­டனை முறை­யினால் தான், அவ்­வா­றான பாது­காப்புக் கிடைத்­த­தா­கவும் குறிப்­பிட்­டனர்.

விடு­தலைப் புலிகள் வன்­பு­ணர்வுக் குற்­ற­வா­ளிகள் போன்­ற­வர்­களை கடு­மை­யாக தண்­டித்­தனர் என்­பது உண்­மையே.

ஆரம்ப காலங்­களில் சிலர் பகி­ரங்­க­மாக பொது­மக்கள் முன்­பாக சுட்டுக் கொல்­லப்­பட்டு தண்­டிக்­கப்­பட்­டதும் உண்­மையே.

ஆனால் பின்னர் அவர்­களும் மனித உரிமைச் சட்­டங்­க­ளுக்கும் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கும் கட்­டுப்­பட்டு, தமது தண்­டனை முறை­களில் மாற்­றங்­களைச் செய்­தனர் என்­பது பல­ருக்குத் தெரி­யாத விடயம்.

கடு­மை­யான குற்­றங்­க­ளுக்கு நீதி­மன்­றத்தின் மூலம் தண்­டனை வழங்கும் முறையே புலி­க­ளாலும் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

வித்­தியா கொலைக்குப் பின்னர், புலி­களின் காலத்தைச் சுட்­டிக்­காட்டி பெருமை பேசி­ய­வர்கள், இன்­னொரு வகையில் அவர்­களின் பகி­ரங்க மர­ண­தண்­ட­னையைத் தான் நியா­யப்­ப­டுத்­தி­னரே தவிர, நீதி­மன்­றங்­களின் மூலம் மட்­டுமே புலி­களால் பிற்­கா­லத்தில் நீதி­ப­ரி­பா­லனம் செய்­யப்­பட்­டது என்­பதை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

விடு­தலைப் புலி­களின் ஆரம்ப காலத்தை வைத்து, பொது­மக்கள் முன் பகி­ரங்­க­மாக மர­ண­தண்­டனை விதிக்க வேண்டும் என்ற யதார்த்­த­மற்ற கோரிக்­கை­களை இப்­போது நியா­யப்­ப­டுத்த முனைந்­தனர்.

கடு­மை­யான குற்­றங்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கில் மட்­டு­மன்றி நாட்டின் ஏனைய இடங்­க­ளிலும் எழுந்­தி­ருந்த நிலையில் தான், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த விவா­தத்தை மேலும் சூடு­பி­டிக்கச் செய்­தி­ருக்­கிறார்.

போதைப்­பொருள் விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஒரு விவா­த­மாக தொடக்கி வைத்­தி­ருக்­கிறார்.

போதைப்­பொருள் விற்­ப­னையைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே அவர் அந்தக் கருத்தை முன்­வைத்­தி­ருந்தார்.

முன்­ன­தாக, நீதி அமைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவும் கடு­மை­யான குற்­றங்­களை ஒழிப்­ப­தற்கு மீண்டும் மர­ண­தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற தொனிப்­பட கருத்துக் கூறி­யி­ருந்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அம­ர­துங்­கவும் மர­ண­தண்­ட­னையை மீள நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து அர­சாங்கம் பரி­சீ­லிப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­வேளை போதைப்­பொருள் விற்­ப­னை­யா­ள­ருக்கு மர­ண­தண்­ட­னையை விதிக்க வேண்டும் என்ற கருத்து ஜனா­தி­ப­தியால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தரு­ணத்தில், ஏனைய கடு­மை­யான குற்­றங்கள் குறித்து அவர் பேச­வில்லை என்­ப­தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

போர்க்­கா­லத்தில் இடம்­பெற்ற மோச­மான மீறல்கள் குறித்த விசா­ர­ணைகள் உள்­நாட்டில் நடத்­தப்­படும் என்று வாக்­கு­றுதி அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­பட்­டுள்ள சூழலில், அர­சாங்கம் மர­ண­தண்­ட­னையை போதைப்­பொருள் விற்­ப­னை­யா­ள­ருக்கு என்று மட்­டுப்­ப­டுத்த முனை­கி­றதா என்ற கேள்­வியும் உள்­ளது.

உள்­நாட்டு போர்க்­குற்ற விசா­ர­ணையில் குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்டால், மர­ண­தண்­ட­னைகள் கூட விதிக்­கப்­ப­டலாம்.

அத்­த­கை­ய­வர்­களை காப்­பாற்றும் வகையில் அர­சாங்கம் நடந்து கொள்ள முற்­ப­டு­கி­றதா என்ற கேள்­வியும் உள்­ளது.

எவ்­வா­றா­யினும், மர­ண­தண்­டனை என்­பது இன்­றைய உலகில் அரு­வ­ருக்­கத்­தக்க ஒன்­றாக - மனித குலத்­துக்கு எதி­ரான ஒன்­றா­கவே மனித உரிமை அமைப்­பு­களால் கரு­தப்­ப­டு­கி­றது.

இதற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் நடக்கும் விவா­தங்கள் முடி­வற்று நீள்­கின்­றன.

இந்தநிலையில் இலங்கையிலும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், கொடூரமான குற்றவாளிகளை அதிகபட்ச தண்டனைக்குட்படுத்துவதன் மூலம் குற்றங்களைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில் கடுமையான – கொடூரமான தண்டனைகள் மட்டுமே, குற்றங்களை தடுக்காது என்ற கருத்தும் உள்ளது.

உதாரணத்துக்கு இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் மிகக்கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், அங்கு குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று கூற முடியாது.

தனியே தண்டனைகள் மட்டும் தான் குற்றங்களை குறைப்பதில்லை. சமூக கட்டுப்பாடுகளும், பிணைப்பும் கூட அவற்றைக் கட்டுப்படுத்தும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் குறைந்திருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.

போர் நடந்த காலத்தில், சமூகத்தில் ஒற்றுமையும், பிணைப்புகளும், சமூக கட்டுப்பாடுகளும் அதிகமாகவே கடைப்பிடிக்கப்பட்டன. புலிகளின் நிர்வாக முறைமைகளும் அதற்கு மற்றொரு காரணமாய் அமைந்திருந்தது.

அது பலருக்குப் புரியாததால் தான், புலிகளின் கடுமையான தண்டனைகளே, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதான கருத்தை அவர்களிடத்தில் ஊன்றச் செய்துள்ளது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல