ஞாயிறு, 7 ஜூன், 2015

ஒரு சக்­க­ர­வர்த்­தியின் முடி துறத்­தலும் காற்­பந்­தாட்ட சாம்­ராஜ்­யத்தின் எதிர்­கா­லமும்

காற்­பந்­தாட்ட உலகின் சாம்­ராஜ்யம். அதில் சக்­க­ர­வர்த்­தி­யாகத் திகழ்ந்த மனிதர். என்னைப் பார், எனக்கு வய­தா­னாலும் நான் சிங்கம் தான் என்றார். எனது அர­சாங்கம் கறை­ப­டிந்­தி­ருக்­கி­றது என்று எவ­ரேனும் சொன்னால், அதனை சரி­யான திசையில் செலுத்தும் ஆற்றல் எனக்கு இருக்­கி­றது என்று அவர் வெற்றிப் பெரு­மி­தத்­துடன் சொன்னார்.



அதே சக்­க­ர­வர்த்தி நான்கு நாட்கள் கழித்துப் பேசினார். தான் அரி­யா­ச­னத்தில் இருந்து இறங்­கு­கிறேன் என்றார். மந்­தி­ரிகள் சபை விரைவில் கூடி, அடுத்த அர­சரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று பணி­வா­ன­தொரு கோரிக்­கையை விடுத்தார். அடுத்த அரசர் தெரிவு செய்­யப்­படும் வரையில், காற்­பந்­தாட்ட சாம்­ராஜ்­ய­த்தை வழி­ந­டத்தும் பொறுப்பை நிறை­வேற்றப் போவ­தாக அவர் உறு­தி­ய­ளித்தார்.

செப் பிளெற்­றரின் அறி­வித்தல் அதிர்ச்­சியைத் தந்­த­தெனில், அதற்குக் காரணம் இருந்­தது. சர்­வ­தேச காற்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­திற்கு (பீபா) எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களும், அதனை மையப்­ப­டுத்தி அமெ­ரிக்கத் தரப்பு முன்­னெ­டுத்த அர­சியல் காய் நகர்த்­தல்­களும் செப் பிளெற்­றரின் மனோ­தி­டத்தை சோதித்துக் கொண்­டி­ருந்­ததை பலரும் அறிந்­தி­ருந்­தார்கள். தம்மை ஓரங்­கட்டும் முயற்­சி­க­ளுக்கு அடி­ப­ணிந்து அவர் பதவி விலகி விடுவார் என்று அமெ­ரிக்கா எதிர்­பார்த்­த­போ­திலும், அவ­ரது இரா­ஜி­னாமா இத்­தனை சீக்­கி­ர­மாக நிகழும் என்­பதை எவரும் எண்­ணி­யி­ருக்க மாட்­டார்கள்.

தலைமைப் பத­விக்­கு­ரிய வாக்­கெ­டுப்பு நடை­பெ­று­வ­தற்கு இரு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக, அமெ­ரிக்­காவின் மத்­திய புல­னாய்வு நிறு­வனம் பீபா வின் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­தி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில், பீபா மாநாட்­டுக்­காக சுவிட்­ஸர்­லாந்து சென்­றி­ருந்த ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டார்கள். செப் பிளெற்­றரின் ஆட்­சி­கா­லத்தில் பீபா வில் ஊழலும் மோச­டி­களும் தலை­வி­ரித்­தா­டி­ய­தாகக் கூறி, அதனை முற்­று­மு­ழு­தாக கறை­ப­டிந்த அமைப்­பாக சித்­த­ரிப்­ப­தற்கு அமெ­ரிக்க சார்பு ஊட­கங்கள் தீவிர பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தன.

இந்தத் தீவிர பிர­சாரம், பீபா வில் செப் பிளெற்­ற­ருக்­குள்ள செல்­வாக்கைக் குறைத்து விட­வில்லை. அடுத்த தலை­வரைத் தெரிவு செய்­வ­தற்­கு­ரிய வாக்­கெ­டுப்பு இடம்­பெற்ற சமயம், செப் பிளெற்றர் 133 வாக்­கு­களைப் பெற்றார். அவ­ருக்கு எதி­ராக ஐரோப்­பிய காற்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் ஆத­ர­வுடன் கள­மி­றங்­கிய ஜோர்தான் இள­வ­ரசர் அலி பின் அல்-­ஹூ­சை­னுக்கு 73 வாக்­குகள் மாத்­திரம் கிடைத்­தன.

தேர்­தலில் வெற்றி பெற்ற சம­யத்தில் செப் பிளெற்­றரின் குரலில் தொனித்த பெரு­மிதம், இரா­ஜி­னாமா பற்றி அறி­வித்த சம­யத்தில் முற்­று­மு­ழு­தாக மறைந்­தி­ருந்­தது. பீபா வில் அங்கம் வகிக்கும் அமைப்­புக்கள் தம்மை அடுத்த தலை­வ­ராகத் தெரிவு செய்­தி­ருந்­தாலும், காற்­பந்­தாட்ட உலகின் ஆணை தமக்கு இருப்­ப­தாகக் கரு­த­வில்­லை­யென பிளெற்றர் குறிப்­பிட்டார்.

சர்­வ­தேச காற்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தை ஊழல் அற்ற அமைப்­பாக மாற்ற வேண்டும் என்ற இலட்­சி­யத்தின் அடிப்­ப­டையில், பீபா அதி­கா­ரி­களைக் களை­யெ­டுப்­ப­தாக அமெ­ரிக்கா கூறிக் கொள்­கி­றது. அடுத்த காற்­பந்­தாட்ட சுற்­றுத்­தொ­டரை நடத்தும் வாய்ப்பு ரஷ்­யா­விற்கு கிடைத்­ததில் எழுந்த காழ்ப்­பு­ணர்ச்­சி­யாலும் 2022ஆம் ஆண்­டுக்­கு­ரிய சுற்­றுத்­தொ­டரை நடத்தும் வாய்ப்பு தம்­மிடம் இருந்து கட்­டா­ருக்கு சென்­றதால் தலை­தூக்­கிய பழி­வாங்கும் உணர்ச்­சி­யாலும், அமெ­ரிக்கா செப் பிளெற்­றரை ஓரங்­கட்ட முனை­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரியும் உண்­மை­யாகும்.

பீபா வைக் களை­யெ­டுப்­பதில் அமெ­ரிக்­கா­விற்கு உள்ள அதி­காரம் என்ன? அந்த நடை­முறை சர்­வ­தேச ஜன­நா­யக நடை­மு­றை­க­ளுக்கு ஏற்­பு­டை­யதா? என்ற ரீதியில் பல கேள்­விகள் எழு­கின்­றன. பீபா வைக் களை­யெ­டுப்­பதன் மூலம், இதனை விட சிறப்­பா­ன­தொரு அமைப்பை உரு­வாக்கி விட முடி­யுமா என்­பதும் முக்­கி­ய­மான கேள்­வி­யாகும்.

முதலில், பீபா­விற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை எடுத்துக் கொள்வோம். இவை இலஞ்சம் தொடர்­பா­னவை. உலகக் கிண்ண காற்­பந்­தாட்ட சுற்­றுத்­தொடர் என்ற விட­யத்தை எடுத்துக் கொள்வோம். இத்­த­கைய சுற்­றுத்­தொ­டரை ஏற்று நடத்த பல நாடுகள் போட்டி போடு­வது வழக்கம். பீபா அதி­கா­ரிகள் சில நாடு­க­ளிடம் இலஞ்சம் வாங்கி சுற்­றுத்­தொ­டரை நடத்தும் வாய்ப்பை ஒப்­ப­டைத்­தார்கள் என்­பது பிர­தான குற்­றச்­சாட்டு.

இந்த விவ­காரம் இலஞ்சம் சார்ந்­ததாக இருக்­கையில், பீபா அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவின் எவ்.­பீ.ஐ. நிறு­வனம் தாக்கல் செய்த எந்­த­வொரு குற்­றச்­சாட்டும் இலஞ்சம் தொடர்­பான சட்­டங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­வை­யாக இல்லை என்­பது கவ­னிக்க வேண்­டிய விடயம். அமெ­ரிக்­காவின் இலஞ்ச ஒழிப்பு சட்­டங்கள் மூலம் கறை­ப­டிந்த அரச உத்­தி­யோ­கத்­தர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­லாமே ஒழிய, பீபா போன்ற சர்­வ­தேச அமைப்­பிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது.

பீபாவைக் களை­யெ­டுக்கும் முயற்­சியில் செப் பிளெற்­றரை ஓரங்­கட்­டு­வது அமெ­ரிக்­காவின் நோக்கம். அதற்­காக அமெ­ரிக்­காவின் தரப்பில் முன்­வைக்­கப்­படும் காரணம், பீபாவின் தலைமைப் பத­வியை வகிப்­ப­தற்கு அவர் அரு­கதை அற்­றவர் என்­பது தான். செப் பிளெற்­றரின் ஆட்சி காலத்தில் பீபா கறை­ப­டிந்­த­தாக மாறி­யி­ருந்­த­தாகக் கூறும் அமெ­ரிக்க புல­னாய்வு நிறு­வ­னங்­களால் அவ­ருக்கு எதி­ராக எந்­த­வொரு குற்­றச்­சாட்­டையும் சுமத்த முடி­ய­வில்லை.

செப் பிளெற்­றரின் கீழ் பீபா கறை­ப­டிந்­த­தாக மாறி­யது என்று அமெ­ரிக்­காவும், ஐரோப்­பாவும் கூறு­கின்­றன. எனினும், அவ­ரது ஆட்சி காலத்தில் தான் காற்­பந்­தாட்ட விளை­யாட்டில் ஆசிய நாடு­க­ளுக்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கும் கூடு­த­லான வாய்ப்­புக்கள் கிடைத்­தன என்­பதை மறந்து விட முடி­யாது. செப் பிளெற்றர் வளர்­முக நாடு­க­ளுக்கு வாய்ப்­ப­ளித்து காற்­பந்­தாட்ட விளை­யாட்டை சர்­வ­தேச­ம­யப்­ப­டுத்­திய விதம் பற்றி கடந்த வாரம் இதே பத்­தியில் விரி­வாக ஆரா­யந்தோம்.

இன்று செப் பிளற்றர் பற்றி மாத்­தி­ர­மன்றி, அவ­ரது முன்­னோ­டி­யான ஜோவோ ஹெவ்­லாங்கே என்ற பிரே­சி­லியர் பற்­றியும் ஆராய வேண்­டி­யி­ருக்­கி­றது. பீபாவின் தலைமைப் பதவி ஸ்ரான்லி ரூஸ் என்ற ஆங்­கி­லே­யரின் வசம் இருந்த சமயம், ஆசிய மற்றும் ஆபி­ரிக்க நாடு­க­ளுக்கு போதிய வாய்ப்­புக்கள் கிடைக்­க­வில்லை. அந்­நா­டு­களின் அதி­ருப்­தியை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்ட ஹெவ்­லாங்கே, பீபா தலை­மைத்­துவ தேர்­தலில் ரூஸ்சை தோற்­க­டித்தார். ஹெவ்­லாங்­கேயின் ஆட்­சி­கா­லத்தில் அவ­ருக்கு உறு­து­ணை­யாகத் திகழ்ந்த செப் பிளெற்றர், அவரைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு தொடக்கம் பீபாவை மறு­சீ­ர­மைக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்டார்.

1974ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்­டி­களை ஏற்று நடத்­து­வ­தற்­காக வி;ண்ணப்­பித்த 16 நாடுகள் மத்­தியில், ஆசிய மற்றும் ஆப­ிரிக்க காற்­பந்­தாட்ட அமைப்­புக்­களைச் சேர்ந்த மூன்று நாடுகள் மாத்­தி­ரமே இருந்­தன. 2014ஆம் ஆண்டில், மொத்­த­மாக 32 நாடு­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது. அவற்றில் 13 நாடுகள் ஆசிய மற்றும் ஆபி­ரிக்க காற்­பந்­தாட்ட அமைப்­புக்­களை சேர்ந்­தவை. செப் பிளெற்­றரின் ஆட்சி காலத்­திலே முதற்­த­ட­வை­யாக ஆபி­ரிக்க நாடொன்றில் உலகக் காற்­பந்­தாட்ட சுற்­றுத்­தொடர் இடம்­பெற்­றது.

தாம் கட­மையில் இருந்த சம­யத்தில் வளர்­முக நாடு­க­ளுக்­கான அபி­வி­ருத்தி உத­வி­களை பிளெற்றர் 70 சத­வீ­தத்தால் அதி­க­ரித்தார். பீபா வழங்­கிய உத­விகள் கார­ண­மாக பல நாடு­களில் தேசிய மட்­டத்­தி­லான மைதா­னங்கள் அமைக்­கப்­பட்­டன.

வளர்­முக நாடு­களில் காற்­பந்­தாட்ட விளை­யாட்டை விஸ்­த­ரிக்கும் நடை­மு­றையில் ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றி­ருக்க வாய்ப்பை முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்க முடி­யா­விட்­டாலும், இதன் மூலம் பீபா நிறு­வனம் இலா­ப­மீட்­டி­யதை மறுக்க முடி­யாது. முன்­னைய காலத்தை விடவும் மிகவும் சிறப்­பான முறையில் காற்­பந்­தாட்ட விளை­யாட்டு உலகம் முழு­வதும் பர­வி­யதை மறைக்­கவும் முடி­யாது.

இதேவேளை சர்­வ­தேச காற்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தில் நிகழ்ந்­த­தாகக் கூறப்­படும் ஊழல் மோச­டி­களை விசா­ரித்து, பீபாவை தூய்­மை­யாக்கும் முயற்­சிகள் காலத்தின் கட்­டாயம் என்­பதை எவரும் மறுக்க முடி­யாது. எனினும், ஊழலைத் தடுக்கும் முயற்­சிகள் என்ற போர்­வையில் மேற்­கு­லகின் அரா­ஜ­கத்தை நியா­யப்­ப­டுத்திக் கொண்டு, காற்­பந்­தாட்ட விளையாட்டின் உலகளாவிய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 சதீஷ் கிருஷ்­ண­பிள்ளை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல