வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஸ்மார்ட் போனில் அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்றால் என்ன?

அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்பது, ஸ்மார்ட் போனில் இயங்கும் ஒரு தொழில் நுட்பம். ஒரு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகையில், அதனைப் பல கோணங்களில் திருப்புவோம். எந்த பக்கம் போன் திருப்பப்படுகிறது என்பதனை இந்த தொழில் நுட்பம் உணர்ந்து, அதற்கேற்றார்போல், போனில் உள்ள திரைக் காட்சியை நமக்குக் காட்டுகிறது.



இதில் இரண்டு வகை காட்சித் தோற்றங்கள் உண்டு. அவை, போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப். சுருக்கமாக, நெட்டு வாக்கு மற்றும் பக்க வாக்கு எனக் கொள்ளலாம்.

அக்ஸிலரோமீட்டர் தொழில் நுட்பம், இதனை உணர்ந்து நமக்குக் காட்சிகளைக் காட்டுகிறது. இதனைப் பெற Screen Rotation என்ற வசதியை செட்டிங்ஸ் மூலமாக இயக்க நிலையில் வைக்க வேண்டும்.

இதே தொழில் நுட்பம் மேலும் சில மேம்பாட்டுடன் கைரோஸ்பிக் சென்சார் எனவும் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட் போன் எடுத்துக் கொள்ளும் மாற்று நிலைகளை மிகத் துல்லியமாக எடுத்து, கணித்து, அதற்கேற்ப செயல்படுகிறது.

நீங்கள் வாங்க இருக்கும் போனின் மாடலைத் தெரிந்து கொண்டு, இணையத்தில் தேடினால், இந்த தொழில் நுட்பங்கள் அதில் தரப்பட்டுள்ளனவா எனத் தெரிந்து கொள்ளலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல