வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வேர்ட் டிப்ஸ்! நீளவரியை மடக்கி அமைக்க, வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்

நீளவரியை மடக்கி அமைக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.



இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.

டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.

அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.
அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கும் விண்டோவில், No Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.

இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது.

ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.

வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்:
வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், விண்டோ இரண்டாகப் பிரிக்கப்படும். அப்போது, வேர்ட் திரையில், படுக்கைக் கோடு ஒன்றை அமைக்கும். மவுஸ் கொண்டு இதனை மேல், கீழாக நகர்த்தலாம். மவுஸ் பட்டனை எங்கு விட்டுவிடுகிறோமோ, அதே இடத்தில், விண்டோ பிரிக்கும் கோடும் அமர்ந்து கொள்ளும்.

விண்டோவினைப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும் என்றால், எஸ்கேப் கீயை அழுத்தலாம். ஆனால், இதனை மவுஸ் பட்டனை, பிரிக்கும் கோட்டில் வைத்துச் செயல்படுத்தும் முன் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்.

விண்டோ மெனுவிலிருந்து Remove Split என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, பிரிக்கும் கோட்டில், மவுஸ் கர்சரை வைத்து, டபுள் கிளிக் செய்திடவும்.

பிரித்த விண்டோவினை ஒன்றாக மாற்றுகையில், டெக்ஸ்ட்டில், கர்சர் எந்த விண்டோவில் இருந்ததோ, அந்த விண்டோவின் பண்புகள், டாகுமெண்ட்டுக்குத் தரப்படும். எடுத்துக் காட்டாக, கோட்டுக்கு மேலாக இருந்த பகுதி நார்மல் (Normal) வியூவிலும், கீழாக இருந்த பகுதி பிரிண்ட் லே அவுட் (Print Layout) வியூவிலும் இருந்து, கர்சர் கோட்டுக்குக் கீழாக இருந்த பகுதியில் வைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட விண்டோ ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டால், கிடைக்கும் விண்டோ, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருக்கும். கோட்டுக்கு மேலாக இருந்தால், நார்மல் வியூவில் இருக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல