வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வேர்ட் புரோகிராமில் மினி டூல் பார்

வேர்ட் 2007 / 2010 இரண்டுக்குமான குறிப்பு
இந்த மினி டூல் பார், நமக்கு வேர்ட் 2007ல் தான் தரப்பட்டது. மிகவும் பயனுள்ள டூல் பார். வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த மினி டூல் பார் தானாகத் தோன்றும். நாம் அந்த சொல்லின் பார்மட்டை மாற்ற (அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட, எழுத்தின் அளவு மற்றும் நிறம் மாற்ற) இதனைப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள மெனு செல்ல வேண்டியதில்லை. இதன் இயக்கத்தினை மீண்டும் கொண்டு வர தேவைப்படும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.



1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.

2. Word Optionsகிளிக் செய்க.

3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.

4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbarஎன்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் பயன்படுத்துவது ஆபீஸ் 2010 தொகுப்பாக இருந்தால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.

1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.

4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல