திங்கள், 19 அக்டோபர், 2015

எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழ் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சோக நிகழ்வு - பகுதி – 2

இக்கட்டான பரிதாப நிலை

கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் அப்போது இருந்த சாதாரண மக்களின் இக்கட்டான பரிதாபகரமான ஒரு நிலையை எடுத்துரைக்கிறது. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்த ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வான்படையினரின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டது. அவர்களில் இருவர் முறையே 18ம் மற்றும் 20 வயது நிரம்பிய வாலிபர்கள். பாடசாலையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ கட்டாய இராணுவ சேவைக்கு பிடித்துச் செல்வதை தடுப்பதற்காக அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தார்கள். துயரமான முறையில் அவர்களைப் பிடித்துச் செல்வதற்காக யமன் இஸ்ராயேலின் கபீர் விமானத்தின் வடிவில் வந்திருந்தான். அந்த குறிப்பிட்ட பாடசாலையின் வகுப்புகளுக்கு மாணவர்கள் சமூகமளிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அந்தப் பாடசாலையின் அதிபர் மாணவர்களை அடையாளம் கண்டு கடத்;துவதற்கு எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளின் உயர்மட்ட தளபதி ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த அதிபர் இன்று மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக உயர்ந்த அரசியல் பதவியை வகித்து வருகிறார்.



கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, திருமணமானவர்களை கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்பதால் அதை தவிர்க்கும் ஒரு வழியாக திருமணம் செய்வது மும்முரமாக நடைபெற்று வந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த அநேக நபர்கள் குறைந்த வயதிலேயே திருமணம் செய்ய ஆரம்பித்தார்கள். ஜூன் 2006ல் ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டதுடன் இளவயதினர் மத்தியிலான திருமணங்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. அப்போது எல்.ரீ.ரீ.ஈ 2006 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு நடைபெற்ற திருமணங்கள் யாவும் செல்லுபடியற்றவை என்று அறிவிப்புச் செய்தது. திருமண நிலையை கருத்தில் கொள்ளாமல் புதிதாக திருமணமான மணமகன்கள் மற்றும் மணமகள்கள் யாவரும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டார்கள். மேலும் எல்.ரீ.ரீ.ஈ திருமணம் செய்து கொள்வதற்கான சட்டபூர்வமான வயதெல்லையை ஒரு குறிப்பிட்ட வயது வரை நீட்டிக்கவும் செய்தது. ஆண்கள் தங்களது 40வது வயதையும் பெண்கள் தங்களது 35 வது வயதை அடையும் வரையும் திருமணம் செய்ய முடியாது என்று புதிய கட்டளை பிறப்பிக்கப் பட்;டது. இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என அப்போது எல்.ரீ.ரீ.ஈ உறுதியளித்தது. அந்தச் சமயத்தில் பரிதாபகரமான ஒரு தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றது. 2007 ஜனவரி,22ல் உருத்திரபுரத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் மல்லாவி மருத்துவமனையில் சேவையாற்றும் பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் தங்களது 20ன் நடுப்பகுதி வயதினராக இருந்தார்கள். இரண்டு நாட்களின் பின்னர் 24ம் திகதியன்று எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் புதிதாக திருமணம் செய்திருந்த தம்பதியரிடம் வந்து, மணமகன் தனது திருமண பேரானந்தத்தைக் கைவிட்டு தங்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தினார்கள். அவர்களது திருமணம் செல்லுபடியற்றது ஏனென்றால் சட்டபூர்வமான திருமண வயது 40 மற்றும் 35 என்று அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியர் புலிகளிடம் மன்றாடி தங்கள் திருமணச் சடங்குகளை நிறைவேற்றுவதற்து சில நாட்களைத் தந்து கருணை காட்டுமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்குச் சம்மதித்த புலிகள் புறப்பட்டுச் சென்றார்கள்.

மாப்பிள்ளையும் பெண்ணும் அங்கிருந்து தப்பியோடி வேறு இடத்தில் ஒளிந்து கொண்டார்கள். திரும்பி வந்த புலிகள் இந்த எதிர்ப்பைக் கண்டு ஆத்திரமடைந்தார்கள். அவர்கள் மணமகனின் சகோதரியையும் மற்றும் மணமகளின் சகோதரனையும் கடத்திச் சென்றார்கள். மணமகன் ஒரு வாரத்துக்குள் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். இல்லையென்றால் அவர்களது சகோதரர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்று எல்.ரீ.ரீ.ஈ யினால் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதனால் மணமகன் தீவிர பதற்றமும் கவலையும் அடைந்தார். இந்த நிலைமையை பற்றி நாட்கணக்காக சிந்தனை செய்ததால் விரக்தியுற்று குழப்பமான மனநிலையை அடைந்த அந்த மனிதர் 2007 பெப்ரவரி 5ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது திருமணம் நடைபெற்று சரியாக இரண்டு வாரங்களின் பின்னர் அவர் இறந்து போனார். இந்த துயரமான கதை எல்.ரீ.ரீ.ஈ பிரதேசங்கள் உட்பட எல்லா இடத்திலும் பரவலாகப் பேசப்பட்டது. அநேக மக்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் இந்த நடவடிக்கையை பற்றி கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள், எல்.ரீ.ரீ.ஈயினரின் அரக்கத்தனமான காலடியின் கீழ் அகப்பட்டுள்ள சாதாரண தமிழ் மக்கள் தாம் அடைபட்டுக்கிடக்கும் இக்கட்டான நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டியது. இந்த சீற்றத்தை ஓரளவு தணிக்கும் முறையில் எல்.ரீ.ரீ.ஈ எதிர் சுழற்சியாக, அந்த மனிதருக்கு உயிர்கொல்லி நோயான புற்றுநோய் பீடித்திருப்பதாகக் கண்டறியப்பட்டது அதனால் அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்று ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டது.

தடுத்து வைத்தலும் மற்றும் தண்டனை வழங்கலும்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் நடமாடுவதையும் கூட எல்.ரீ.o22-stud-480ரீ.ஈ தடை செய்தது. மிகவும் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் மிகவும் கட்டுப்பாட்டின் கீழ் மாத்திரமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வன்னியில் வசிக்கும் ஒருவர் அவருக்காக பிணை நிற்கவேண்டியிருந்தது. வெளியேறிய நபர் குறித்த காலத்துக்குள் திரும்பவில்லை என்றால் அவருக்காகப் பிணை நின்றவர் தடுத்து வைத்து தண்டிக்கப்பட்டார். அந்த நாட்களில் வன்னியிலிருந்து 12 மற்றும்17 வயதுக்கு இடைபட்டவர்கள் வெளியே செல்வதற்காக அனுமதி வழங்குவதற்கு எல்.ரீ.ரீ.ஈ மிகவும் கடுமையாக மறுத்து வந்தது.

மக்கள் குறிப்பாகத் தாய்மார்கள் தங்களால் இயன்றவரை தடுத்து வந்தார்கள். ஆனால் பெரும்பாலான முயற்சிகள் பலன் தரவில்லை. அந்த இருண்ட நாட்களைப் பற்றிய சில கதைகள் மிகவும் பரிதாபகரமானவை. தனது மகனை இழுத்துச் செல்வதை தடுக்கும் இறுதி முயற்சியாக ஒரு தாய் புலிகளின் வாகனத்தின் முன்பாக தரையில் விழுந்து படுத்துவிட்டார். ஆனால் புலிகளின் வாகனச்சாரதி மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்தப் பெண்ணின் கால்களுக்கு மேலாக வாகனத்தை ஓட்டி அந்தப் பெண்ணின் கால் எலும்புகளை நொறுக்கினார். மற்றொரு சம்பவத்தில் வெறிபிடித்த தாய் தனது மகனை விடாமல் கட்டிப் பிடித்துக் கொள்ள முயற்சித்தார், ஆனால் அவர் கோரமாக தூக்கி வீசப்பட்டார். அவர் கீழே விழுந்ததும் அவரது தலை ஒரு கல்லில் மோதுண்டது. தனது மனைவியின் தலையில் இருந்து இரத்தம் வடிவதைக்கண்ட வயதான கணவன்ஃதந்தை ஆத்திரமடைந்து புலி அங்கத்தவரை அறைந்து விட்டார். புலிகள் வெகுவாகச் சினமடைந்தார்கள்”எங்களுக்கு கை நீட்டத் துணிந்தாயோ” என்று கூச்சலிட்டார்கள். அதன் பின்னர் அந்த வயதான மனிதரை இரக்கமற்ற முறையில் அவர்கள் அடித்து துவைத்ததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் மாமன் ஒருவரை வரவேற்பதற்காக 21 வயதான சகோதரர் ஒருவருக்கு கொழும்புக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அவரது குடும்பம் மூன்று மாதங்களில் அவர் திரும்பி வருவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்தது. அவர் கொழும்பிலிருந்த சமயம் எல்.ரீ.ரீ.ஈயின் ஆட்சேர்ப்பு ஓட்டம் விரிவடைந்தது. குடும்ப அங்கத்தவர்கள் மகனை திரும்பி வரவேண்டாம் கொழும்பிலேயே தங்கியிருந்து வெளிநாடு செல்ல முயற்சிக்கும்படி வற்புறுத்தினார்கள். எல்.ரீ.ரீ.ஈ அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றபோது அந்த இளைஞன் சுகவீனமுற்றிருப்பதாகவும் அவருக்கு கொழும்பில் மருத்துவ சிகிச்சை அவசியப்படுவதாகவும் குடும்பத்தினர் அவர்களிடம் கூறினார்கள்.

புலிகள் 16வயதான அந்த இளைஞரின் சகோதரியை பிடித்துச் சென்றதுடன் அவளது சகோதரனின் மருத்துவ நிலையை பற்றிய ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே அவளை விடுவிப்பதாகச் சொல்லிச் சென்றார்கள். அந்த சகோதரன் ஒரு தனியார் வைத்தியசாலையில் தன்னை அனுமதித்து சில சிகிச்சைகளை பெற்றதுடன் உரியவர்களின் அனுதாபகரமான உதவியினால் எல்.ரீ.ரீ.ஈ யினை திருப்திப் படுத்துவதற்கு தனது உடல்நிலை பற்றி விளக்கும் மருத்துவ ஆவணங்களை அனுப்பினார். எல்.ரீ.ரீ.ஈ அந்த ஆவணங்களை நிராகரித்ததுடன் அரசாங்க மருத்துவமனையில் இருந்து ஆவணங்களை பெற்றுத் தரும்படி குடும்பத்தினரிடம் கூறினார்கள். அந்தச் சகோதரி பல மாதங்களாக எல்.ரீ.ரீ.ஈயின் காவலில் இருந்தார், இறுதியாக எல்.ரீ.ரீ.ஈயின் அணியில் சேருவதற்கு இணங்கினார். யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்.

ஆட்சேர்ப்புக்கான எல்.ரீ.ரீ.ஈயின் கோஷம் வீட்டுக்கு ஒரு வீரன் அல்லது வீராங்கனை என்பதாக இருந்தது. புலிகள் இதை கடுமையாக அமல்படுத்தினார்கள். அனைத்து வீட்டுடமைகளும் ஒரு அங்கத்தவரை அனுப்புவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். தகுதியானவர் ஆட்சேர்ப்பு செய்யப் படுவதில் இருந்து தப்பியோடினால் அல்லது தவிர்த்தால் மற்றொருவர் பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டார். இதை எதிர்ப்பவர்களோ அல்லது ஆர்ப்பாட்டம் செய்பவர்களோ மோசமான தாக்குதலுக்கு உள்ளானார்கள். சிலர் காலவரையற்ற வரையில் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டார்கள்.

விளைவுகளை எதிர்கொள்ளல்

புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்ட சிலர் ஒருவாறு தப்பித்து மறைந்து வாழத் தொடங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ அவர்களது குடும்பங்களுக்கு தப்பித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட திகதிக்குள் தாங்களாகவே வந்து சரணடைய வேண்டும் என்று கடிதங்கள் அனுப்பியது. இல்லையெனில் குடும்ப அங்கத்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று புலிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். 9 பெப்ரவரி 2007ல் வட்டக்கச்சியில் நடைபெற்ற மற்றொரு சltte traning-5ம்பவத்தில் இளைய சகோதரி ஒருவர் ஒளிவில் சென்றதால் மூத்த சகோதரியை புலிகள் பிடித்துச் சென்றார்கள். அதை எதிர்த்த பெற்றோர்களை உதைத்து தள்ளினார்கள். யுத்த நிறுத்தத்துக்கு பின்னர் ஒரு அரசியல் வேலையை செய்வதற்காக வவுனியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் புலிகள் அமைப்பில் இருந்து ஓடிப்போனார். அவர் கொழும்புக்கு வந்து பின்னர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இது 2003ல் நடந்தது. குடும்பத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் எல்.ரீ.ரீ.ஈ எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. ஆனால் 2006ல் எல்.ரீ.ரீ.ஈ வீட்டுக்கு வந்து தப்பியோடியவர் திரும்பவும் வந்து எல்.ரீ.ரீ.ஈ யில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. அவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகச் சொல்லப்பட்டதும் புலிகள் அவரது 15 வயதான இளைய சகோதரியை பிடித்துச் சென்றார்கள். அவளது சகோதரன் நாட்டுக்குத் திரும்பி இயக்கத்தில் இணைந்தால் மட்டுமே அந்தப் பெண்ணை வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதாக குடும்பத்தாரிடம் சொல்லப்பட்டது.

சிலபேர் தங்கள் பிள்ளைகளை அல்லது குடும்பத்துடன் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு காட்டுப் பாதைகள் வழியாக வெளியேறினார்கள். அதில் அதிகம் கஷ்டமும் ஆபத்தும் நிறைந்திருந்தது, ஆனால் மக்கள் தங்கள் பிள்ளைகள் கட்டாய ஆட்சேர்ப்பில் அகப்படுவதை பார்த்துக் கொண்டிருப்தைக் காட்டிலும் இந்த ஆபத்தை எதிர்கொள்வதே மேல் என்று துணிந்து இறங்கினார்கள். சிலர் ஒருவழியாக தப்பிச் சென்ற அதேவேளை பலர் எல்.ரீ.ரீ.ஈயிடம் பிடிபட்டு தண்டிக்கப் பட்டார்கள். ஒரு குடும்பத்திடம் 20 வயதான இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை தங்களிடத்தில் வந்து சேருமாறு எல்.ரீ.ரீ.ஈ வேண்டியது. அந்தக் குடும்பம் காட்டுப்பாதை வழியாக தப்பியோட முயன்று அகப்பட்டுக் கொண்டது. அதற்குத் தண்டனையாக இரண்டு மகன்களையுமே எல்.ரீ.ரீ.ஈ எடுத்துக் கொண்டது.

ஒரு குறிப்பிட்ட துயரமான சம்பவம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. அவள்தான் அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு பெண் பிள்ளை மற்றும் படிப்பில் மிகுந்த திறமைசாலியும் கூட. அவளது மூத்த சகோதரர்கள் ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ மாவீரர்களாக மடிந்துவிட்டார்கள் அல்லது வெளிநாடு சென்றுவிட்டார்கள். இவள் மட்டுமே குடும்பத்தில் இருநதாள். எனினும் பல வருடங்களாக இவள் வயதுக்கு வராததால் குடும்பத்தினர் இவளைப்பற்றி மிகவும் கவலைப் பட்டார்கள். இறுதியாக தனது 18ம் வயதில் அவள் பெரிய பிள்ளையானாள். அவளது பெற்றோர் மிகவும் சந்தோஷப் பட்டதுடன் அவளது பூப்புனித நீராட்டு விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். அந்த நீராட்டு விழா நடந்து இரண்டு நாட்களின் பின் பெற்றோரை பேரழிவுக்கு உள்ளாக்கும் வண்ணம் புலிகள் வந்து அந்தப் பெண்ணை பிடித்துச் சென்றார்கள்.

வேலியே பயிரை மேய்ந்த கதை

அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பானைச் சேர்ந்த சில குடும்பங்கள் மே 2006ல் கடற்படை மற்றும் ஈ.பி.டி.பி ஆகியோரினால் ஏற்பட்ட கொலைச் சம்பவங்கள் காரணமாக வன்னியில் வந்து குடியேறியிருந்தன. தங்கள் சொந்தக் கிராமத்தைக் காட்டிலும் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என அவை நம்பின. 2007ல் இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சில இளம் வயதினர்கள் காணாமல் போனார்கள். குடும்ப அங்கத்தவர்கள் நடேசனால் நடத்தப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் காவல்துறையினரிடத்தில் விரைந்தனர். ஈழ காவல்துறையினர் அவர்களது விடயத்தை விசாரணை செய்வதாக வாக்குறுதி வழங்கினார்கள். சில நாட்களின் பின்னர் மட்டுமே குடும்பத்தினருக்கு வேலியே பயிரை மேய்ந்துவிட்டது என்கிற ஞ}னம் உதயமாகியது. எல்.ரீ.ரீ.ஈயினால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மத்தியில் கத்தோலிக்க சகோதரிகள் உடன் தங்கியிருந்து கன்னியர் மடத்தில் பயின்று வந்த சில மாணவிகளும் இருந்தார்கள். புலிகள் அங்கிருந்து 17 வயதுக்கு மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள். தேவாலயத் தலைவர்கள் எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டத்தினருக்கு இது பற்றி முறைப்பாடு செய்தார்கள், ஆனால் வெளிப்படையான சில காரணங்களுக்காக இந்த விடயத்தை விளம்பரப் படுத்தவில்லை.

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த மன்னார்,வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்தும்கூட எல்.ரீ.ரீ.ஈ இளைஞர்களைக் கடத்தியது. அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கடத்தப்படுபவர்களுக்கு வயது அல்லது திருமணநிலை என்பது ஒரு தடையாக இருக்கவில்லை. அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இரகசியமாக கூட்டிச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக புலி அங்கத்தவர்களாக மாற்றப்பட்டார்கள். அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் பகல் வேளைகளில் இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போக்கடிக்கப்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் எல்.ரீ.ரீ.ஈ யினாலேயே நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. மோதல் தீவிரமடைந்தபோது வன்னியில் பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை எல்.ரீ.ரீ.ஈ தடை செய்தது. யாராவது அதை பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்பட்டார். அனைத்து வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களையும் எல்.ரீ.ரீ.ஈயினால் நடத்தப்படும் தொடர்பாடல் நிலையங்களில் இருந்து மட்டுமே பெறமுடிந்தது. அழைப்பு இலக்கங்கள் காலையில் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு அழைப்புக்கான கால அவகாசம் ஐந்து நிமிடங்களாக மட்டுப்படுத்தப் பட்டிருந்தது, அழைப்புகளை மாலையில் மட்டுமே பெறமுடியும். அதற்கு இடைபட்ட நேரம் அழைக்கப் படுபவரைப் பற்றிய விபரங்களை எல்.ரீ.ரீ.ஈ அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டது.

எனினும் அந்தக் காலத்தில் பலர் ஒருவாறு சமாளித்து வன்னியை விட்டு வெளியேறினார்கள். இது பிரதானமாக ஊழல் மற்றும் சொந்த பந்தங்களுக்கு சலுகை வழங்கும் காரணங்களால் நடைபெற்றது. உயர் பதவியில் இருந்த புலித் தலைவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளை உயர் கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள், சில சந்தர்ப்பங்களில் தலையீடு செய்து தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். மற்றைய சந்தர்ப்பங்களில் மக்களை வெளியே எடுப்பதற்காக பெருந்தொகைப் பணம் நன்கொடையாக உத்தியோகபூர்வமாக எல்.ரீ.ரீ.ஈக்கும் மற்றும் உத்தியோகப் பற்றற்ற விதத்தில் புலி உத்தியோகத்தார்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் துயரமான வஞ்சனை என்னவென்றால் இப்படி தப்பித்தவர்களில் சிலர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததும் எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்களாக பிடிக்கப் பட்டதுதான்.

கடுமையாக இருண்ட சூழ்நிலை

போர் நடைபெற்ற காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் ஆதிக்கத்தில் இருந்த வடக்கில் அப்போது நிலவிய கடுமையான இருண்ட சூழ்நிலை இதுதான். தமிழ் மக்களின் விடுதலையாளர்கள் என்று அழைக்கப் பட்டவர்கள் தீவிரமாக மக்களை ஆட்சேர்ப்புச் செய்து பலவந்தமாக புலிப் படையணியில் இராணுவ சேவைக்கு அமர்த்தினார்கள். போரை தொடர்வதற்கு மனித வலு அவசியம் என்கிற பகுத்தறிவே இதற்கான காரணம். அனைத்து அடக்கு முறையும் தமிழர் விடயத்துக்கு வேண்டியே மேற்கொள்ளப்பட்டதாக நியாயப் படுத்தப்பட்டது.

எனினும் சாதாரண தமிழ் குடிமக்கள் விரும்பியது இந்தப் போரின் எந்தப் பகுதியும் தங்கள் பெயரால் நடத்தப்படவில்லை என்பதையே. அவர்கள் விரும்பியது தங்களை தங்கள் வழிக்கு விட்டுவிடவேண்டும் அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை தாங்கள் கொண்டு நடத்திக் கொள்ள முடியும் என்பதையே. துரதிருஸ்டவசமாக அது அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அதுதான் தமிழர்களின் துயரம். கடுமையான கஷ்டங்களை அனுபவித்த சில வருடங்களின் பின் இறுதியாக மே 2009ல் யுத்தம் முடிவடைந்தது.

டி.பி.எஸ்.ஜெயராஜ்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல