புதன், 21 அக்டோபர், 2015

பகிரங்க மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்..!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட பின்பும் ஒரு சில பிரச்சனைகள் மட்டும் இன்னும் ஓயாமல் இருக்கின்றது.


தேர்தலில் வெற்றி பெற்றதும் நாசர் அணிக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்த எஸ்.வி.சேகர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாசரும் விஷாலும் சிரித்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு புகைப்படத்தையும் அதற்கு பக்கத்திலேயே சரத்குமாரும் விஜயகுமாரும் அழுது கொண்டிருக்கிற ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.

ஆனால் சரத்குமாரும், விஜயகுமாரும் அழுதுகொண்டிருந்த அந்த புகைப்படம் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா இறந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் மரண வீட்டில் எடுத்த புகைப்படத்தை எஸ்.வி.சேகர் பகிர்ந்தது தவறு என்றும் கூறி எஸ்.வி.சேகரைப் பலர் ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்தனர்.

எனவே இதுகுறித்து விளக்கம் கூறிய எஸ்.வி.சேகர், ‘சரத் அவர்களும் விஜயகுமார் அவர்களும் அழும் புகைப்படம் எந்தத் தருணத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியாமல் பதிவிட்டுவிட்டேன், தெரிந்தவுடன் நீக்கிவிட்டேன் என் தவறுக்கு வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல