ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இஞ்சி குழம்பு

தேவையான பொருட்கள்

இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 3 முழு சின்ன பூண்டு [பொடியாக நறுக்கவும்]
சின்ன வெங்காயம் - 15 - 20 [பொடியாக நறுக்கவும்]
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
தக்காளி - 2
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு [கரைத்து வைக்கவும்]

மிளகாய் வற்றல் - 12
மல்லி - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துண்டுகள் - ஒரு கைப்பிடி [அரைத்து பால் எடுத்து வைக்கவும்]
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி

செய்முறை

1.இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முதலில் இஞ்சியை போட்டு வதக்கி எடுக்கவும். அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் மற்றும் தனியாவை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

2.மீதம் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

3.பின்னர் அதனுடன் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

4.இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

5.நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் திரண்டதும் எடுக்கவும்.

Tip
இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது. விரும்பினால் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். அல்லது இஞ்சுடன் சேர்த்தும் அரைத்து ஊற்றலாம்.

FB
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல