வெள்ளி, 23 அக்டோபர், 2015

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மூன்று பேருடன் சேர்ந்து தனது தாயை தாக்கியுள்ளார்

வயோதிபத் தாயொருவரை அவரது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.



கணபதி நகர் ரமேஷ்புரத்தைச் சேர்ந்த 58 வயதான மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது தாய் தனது சகோதரனால் தாக்கப்பட்டமை பற்றி முறைப்பாடு தெரிவித்துள்ள அருமைத்துரை வினோதினி (வயது 30) கூறியதாவது,

சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான எனது சகோதரன் சுவேந்திரன் (வயது 32) உடனடியாக எனது வீட்டுக்குள் புகுந்து எனது தாய் தனியாக இருந்த வேளையில் தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

கோயிலுக்குச் சென்றிருந்த நான் வீடு திரும்பிய போது தாய் இரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார்.

உடனடியாக தாயை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எமது தாயைத் தாக்கிய எனது சகோதரன் உதவியாக மேலும் மூவரை அழைத்துக் கொண்டு வந்து தாயைத் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல