வெள்ளி, 23 அக்டோபர், 2015

சவுதியில் ஏழு வயது மகளை அடித்தே கொன்ற தந்தை..

சவுதி அரேபியாவின் ரியாத் நகரை சேர்ந்த சிறுமி யாரா (வயது 7) இந்த் சிறுமி கடந்த 3 மாதங்கள் தனது தந்தையுடன் ரியாத்தில்,வசித்து வந்தார்.சிறுமியின் தாயார் கணவனை விட்டு பிரிந்து விட்டார்.



கடந்த 24 ந்தேதி குழந்தையிடம் தந்தை என்னை விரும்புகிறாயா என கேட்டு உள்ளார் அதற்கு சிறுமி அதற்கு நான் உன்னை விரும்பவில்லை என தந்தையை நோக்கி கூறி உள்ளது.

இதனால் பயங்கர கோபம் அடைந்த தந்தை ஏர் கண்டிஷன் பைப்பை எடுத்து குழந்தையை அடித்து உள்ளார்.பின்னர் கம்பியை எடுத்து தலையில் தாக்கி உள்ளார். பின்னர் குழந்தை உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுச் என்று உள்ளார். ஆனால் வழியிலேயே சிறுமி மரணம் அடைந்தார் என செய்தி வெளியாகியுள்ளது.

தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் தந்தை சிறுமிக்கு பாடம் புகட்ட அவருக்கு தண்டனை கொடுத்தேன்.என கூறி உள்ளார்.

இது குறித்த செய்தியை படித்த சமூக தள ஆர்வலகர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

ஒருவர் அவர் தாமதம் இல்லாமல் மரணதண்டனை விதிக்கபட வேண்டும் என கூறி உள்ளார்.

மற்றொருவர் இது மிகவும் கேவலமான செயல், குற்றவாளியை உயிரோடு புதைக்க வேண்டும் என கூறி உள்ளார்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல