அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையொன்றிலிருந்து தப்பிச் சென்ற இரு கைதிகளை மீளப் பிடிக்க பொலிஸாருக்கு உதவியமைக்காக வீடுவாசலற்ற நபரொருவர் 100,000 அமெரிக்க டொலர் பணத்தை சன்மானமாக பெற்றுள்ளார்.
மத்தியூ ஹே சப்மான் என்ற மேற்படி நபர் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த தப்பிச் சென்ற சிறைக்கைதிகளின் புகைப்படங்களை அவதானித்துள்ளார்.
இந்நிலையில் களவாடப்பட்ட வேனொன்றில் ஹொஸைன் நயெறி மற்றும் ஜொனாதன் தியயு ஆகிய இரு சிறைக்கைதிகளும் சென்ற போது, அவர்களது முகங்கள் பத்திரிகையில் வெளியான புகைப்படங்களுடன் ஒத்திருப்பதை அவதானித்த மத்தியூ, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அந்தக் கைதி கள் 6 நாட்களுக்கு முன்னர் ஒரேஞ் பிராந்திய சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். அவர்களைக் கைதுசெய்வதற்கு உதவக் கூடிய தகவல்களைத் தருபவர்களுக்கு மொத்தம் 150,000 அமெரிக்க டொலர் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களது கைதுக்குரிய தகவல்களை வழங்கிய நால்வருக்கு இடையில் அந்த சன்மானப் பணம் பகிரப்பட்டுள்ளது. அவர்களில் அதிகளவான சன்மானத் தொகையை மத்தியூ பெற்றுள்ளார்.
இந்தப் வரிசையில் ஏனைய பாகத்தைப் பெற்றவர்களில் இருவர் டார்கட் சிறப்பு சந்தையின் ஊழியர்களாவர். அவர்கள் கண்காணிப்பு காணொளிக் காட்சியில் பதிவாகியிருந்த குறிப்பிட்ட இரு கைதிகளதும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளை அவதானித்து அது தொடர்பில். பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். அவ ர்களுக்கு தலா 15 அமெரிக்க டொலர் சன்மானமாக வழங்கப்பட்டது.
அத்துடன் மேற்படி கைதிகளால் களவாடப்பட்ட வேனின் உரிமை யாளரும் அந்த சிறைக்கைதிகளை பிடிப்பதற்கான தகவலை வழங்கியிருந்ததால் அவ ருக்கு 20,000 அமெ ரிக்க டொலர் சன்மானம் வழங்கப்பட்டது.
அந்த இரு சிறைக்கை திகளுடனும் தப்பிச் சென்றிருந்த 3 ஆவது கைதியான பக் டுவோங் ஏற்கனவே தானாக முன் வந்து சரணடைந்திருந் தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக