சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நக்கல் செய்து போட்டுள்ள ட்வீட் தீயாக பரவியுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்க தேமுதிகவுக்கு திமுக ரூ.500 கோடி அளிக்க முன்வந்ததாக வைகோ குற்றம் சாட்டினார்.
மேலும் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் வைகோ. திமுகவுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆகவே ஆகாது என்பது உலகம் அறிந்ததே.
இந்நிலையில் ஸ்டாலினின் மகனும், நடிகரும்-தயாரிப்பாளருமான உதயநிதி தனது அப்பா, தாத்தாவுக்கு ஆகாத வைகோ மற்றும் ஜெயலலிதாவை கிண்டல் செய்து ட்விட்டரில் மீம்ஸ் போட்டுள்ளார்.
அந்த மீம்ஸில் வைகோ சேலை உடுத்தியுள்ளார், ஜெயலலிதா வேட்டி, சட்டை, கருப்புத் துண்டு அணிந்துள்ளார். அதாவது வைகோவின் புகைப்படத்தில் ஜெயலலிதாவின் தலையையும், ஜெயலலிதாவின் புகைப்படத்தில் வைகோவின் தலையையும் ஒட்டியுள்ளார்.
உதய் போட்ட மீம்ஸ் தான் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. இது தேவையா உதயநிதி?
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக