அமெரிக்காவில் அனுபவம் மிகுந்த ஆசிரியை ஒருவர் 4 வயது மாணவனை தனது முழங்காலால் வேண்டுமென்றே உதைத்து தள்ளிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Amelia Stripling என்ற ஆசிரியை மாணவர்களுக்கு அருமையாக பாடம் எடுப்பவர், இதற்காக இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் விருது வழங்கப்பட்டது.
20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவரின் இந்தசெயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நான்கு வயது பள்ளி மாணவன் கதவினை ஒட்டி நின்றுகொண்டிருக்கையில், அதன் பக்கவாட்டில் இருந்து நடந்துவரும் இவர், தனது முழங்காலை வைத்து அம்மாணவனை தள்ளிவிடுகிறார்.
இதில் அம்மாணவன் தலைகுப்புற விழுந்துவிடுகிறான், பின்னர் அம்மாணவனின் தலையை பிடித்து எழுப்பிவிட்டு, மாணவனை வெளியே அனுப்பிவிட்டு கதவினை அடைத்துவிட்டு செல்கிறார்.
மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியை எதற்காக இவ்வாறு செய்தார் என்பது தெரியவரவில்லை, ஆனால் இவரது இந்த சிறுபிள்ளைத்தனமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க ஆசிரியர் மையத்தில் இருந்து இவரது பக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது Tifton வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் இந்த ஆசிரியர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக