செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கூகுள் வழங்கும் குழந்தைகளுக்க்கான தேடல் சேவை – கிடில்!

நொடிக்கொரு விதம் மாறி வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர் களுக்கே கையாளத் தெரியாத செல்பேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும். இன்று அப்படியல்ல குழந்தைகள் இன்றைய பெற்றோர்களிடம் கேட்கும் கேள்வி லூசா அப்பா/அம்மா நீ? ஐயோ இது கூட உனக்கு தெரியவில்லை எனும் போது பெற்றோர்கள் உண்மையில் அசடு வழிய தான் வேண்டி இருக்கிறது.



குறிப்பாக அலைபேசி, மடிகணினி போன்ற சாதனங்களில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் அவர்களின் விரல் நுனியில் அனாசியமாக பயன்பட்டு வருகிறது.மாணவ பருவத்தினர் தங்களின் புத்தகப் படிப்போடு நிறுத்தி விடாது ஊடகங்கள் வழியே கல்வி கற்க வேண்டும் எனும் ஆரோக்கியமான விவாதங்களை கல்வியாளர்கள் முன் னெடுத்து சென்று கொண்டிருக்கும் வேளையில் மாணவர்கள் இணையங்களைப் பயன்படுத்தி வருவது ஆரோக்கிய மான விசயம். ஆனால் அவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களிலேயே விளம்பரங்கள் என்ற பெயரில் பல ஆபாச படங்களும் கூடவே கண்களுக்கு காட்சியளிப்பது சத்தமில்லாமல் நடந்தேறுகிறது. அதிலும் அரசாங்கம் மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த பின்னர் அதன் பயன்பாடு இன்னும் வேகம் எடுத்திருக்கிறது.

இந்நிலையிதான் அவ்வப்போது ஏதாச்சும் புதுப் புது வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வரும் கூகுள் நிறுவனம் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் http://www.kiddle.co/ என்ற இணைய தளம் ரொம்பவும் புதுசு. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும்.

குறிப்பாக இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும். பொருத்தமில்லாத வார்த்தைகளை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுவது மோசமான வார்த்தைகள் போன்று தெரிகிறது. மீண்டும் முயற்சிக்கவும்’ என்ற செய்தி திரையில் தோன்றி எச்சரிக்கும்.

இந்த கிடில் தேடு எந்திரத்தை பயன்படுத்த தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் அடையாளம் காண க்கூடிய தகவல்கள் சேகரிக்கப்படமாட்டாது. சர்வரில் உள்ள பதிவுகள் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை அழிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது கிடில்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல