செவ்வாய், 5 ஏப்ரல், 2016

மாபெரும் இரகசிய ஆவணக் கசிவால் உலக நாடுகளின் தலைவர்களும் செல்வந்தப் பிரமுகர்களும் நெருக்கடியில்

உலகில் செல்­வந்த மற்றும் அதி­கா­ரத்­துவம் பொருந்­திய தலைவர்கள் எவ்­வாறு வரிச் சலு­கை­களைப் பயன்­ப­டுத்தி தமது செல்­வத்தை மறைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர் என்­பது தொடர்­பான தக­வல்கள் நம்­ப­கத்­தன்­மை­யான இர­க­சிய ஆவ­ணங்­களின் பாரிய கசிவால் அம்­ப­ல­மா­கி­யுள்­ளன.
உலகின் மிகப் பெரிய இர­க­சிய கசி­வு­களில் ஒன்­றாகக் கருதப்­படும் இந்தக் கசிவால் சம்­பந்­தப்­பட்ட உலக நாடு­களின் தலை­வர்கள் பெரும் நெருக்கடியை எதிர்­கொண்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.



உலகின் மிகவும் இர­க­சியத் தன்மை பேணும் கம்­ப­னி­களில் ஒன்­றான பனாமா நாட்டு சட்ட நிறு­வ­ன­மான மொஸாக் பொன்­செ­க­தட்­டி­லி­ருந்து கசிந்த 11.5 மில்­லியன் ஆவ­ணங்கள் மூலமே இந்த இர­க­சி­யங்கள் அம்­ப­ல­மா­கி­யுள்­ளன.

மேற்­படி ஆவ­ணங்­க­ளா­னது மொஸாக் பொன்­செ­கதட் நிறுவனம் உலகத் தலை­வர்கள் மற்றும் செல்­வந்த பிர­மு­கர்கள் உள்­ள­டங்­க­லான தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பண லஞ்சம் பெறவும் தடை விதிப்­பு­களைத் தவிர்க்­கவும் வரி ஏய்ப்பை மேற்­கொள்­ளவும் எவ்­வாறு உத­வி­யுள்­ளது என்­பது தொடர்­பான விப­ரங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளன. இந்­நி­லையில் அந்தக் கம்­ப­னி­யா­னது தான் 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும் ஒரு­போதும் குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­ன­தில்லை எனவும் தெரி­விக்­கி­றது. தற்­போது கசிந்­துள்ள இர­க­சிய ஆவ­ணங்­க­ளா­னது 1970 களி­லி­ருந்து இந்த ஆண்டு வரை­யான தக­வல்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த இர­க­சிய ஆவ­ணங்கள் கடந்த ஆண்டில் ஜேர்­ம­னியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சட்­டெயட்ச் ஸெய்துங் பத்­தி­ரி­கைக்கும் தொடர்ந்து வாஷிங்­டனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்­புக்கும் பகுப்­பாய்­வுக்­காக வழங்­கப்­பட்­டன.

அந்த ஆவ­ணங்கள் 80க்கு மேற்­பட்ட நாடு­களைச் சேர்ந்த 107 ஊடக நிறு­வ­னங்­களைச் சேர்ந்த சுமார் 400 ஊட­க­வி­ய­லா­ளர்­களால் பகுப்­பாய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் மேற்­படி ஆவ­ணங்கள் தொடர்­பான முத­லா­வது அறிக்கை ஞாயிற்­றுக்­கி­ழமை 149 ஆவ­ணங்கள் சகிதம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஏனைய இர­க­சிய ஆவ­ணங்­களும் கம்­ப­னி­க­ளது முழு பட்­டி­யலும் எதிர்­வரும் மே மாத ஆரம்­பத்தில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது வெளி­யா­கி­யுள்ள ஆவ­ணங்கள் 12 தற்­போ­தைய மற்றும் முன்னாள் உலகத் தலை­வர்­க­ளதும் அவர்­க­ளுக்கு நெருக்­க­மான 61 பேரி­னதும் தர­வு­களை உள்­ள­டக்­கி­யுள்­ளன.

ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளது சந்­தே­கத்­துக்­கி­ட­மான பில்­லியன் டொலர் பண மோசடி, ஐஸ்­லாந்து பிர­தமர் சிக்­மன்டர் கன்­லோக்­ஸனின் மனை­வியின் செல்­வத்தில் தொடர்­பு­பட்ட பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டாத வரி வரு­மானம், அமெ­ரிக்க செல்­வந்­த­ரான மரி­யன்னா ஒல்ஸ்­ஸெவ்ஸ்கி போலி­யான ஆவ­ணங்­களை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கி­யமை என்­பன தொடர்பில் விப­ரிக்கும் அந்த ஆவ­ணங்கள் எகிப்­திய முன்னாள் ஜனா­தி­பதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் தலைவர் மும்மார் கடாபி மற்றும் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத் ஆகி­யோ­ருக்கு நெருக்­க­மான குடும்­பங்­களால் வெளி­நா­டு­களில் இர­க­சி­ய­மாக செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்த கம்­ப­னிகள் சம்­பந்­த­மான தர­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளன.

மேலும் சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் உள்­ள­டங்­க­லான அந்­நாட்டின் பொது­வு­டைமைக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் வெளிநாட்டு நிறு­வ­னங்கள் மூலம் மேற்­கொண்ட சந்­தே­கத்­துக்­கி­ட­மான வரி ஏய்ப்­புகள் குறித்து அந்த ஆவ­ணங்கள் விப­ரிக்­கின்­றன.

அத்­துடன் பாகிஸ்­தா­னிய பிர­தமர் நவாஸ் ஷெரீப்பின் 4 பிள்­ளை­களில் மூவர் லண்­டனில் சொத்தைக் கொண்­­டுள்­ள­தாக அந்த ஆவ­ணங்கள் தெரி­விக்­கின்­றன.

ரஷ்ய வங்­கி­யொன்­றாலும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாலும் சந்­தே­கத்­துக்­கி­ட­மான பல மில்­லியன் பண மோசடி வலைப்­பின்­ன­லொன்று செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­த­தாக அந்த ஆவ­ணங்கள் குறிப்­பிட்­டுள்­ளன.

ரஷ்யா, கிறி­மி­யாவை தன்­னுடன் இணைத்துக் கொண்ட பின்னர் அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியத் தடை விதிப்­புக்­குள்­ளான ரொஸியா வங்­கியால் இந்தப் பண மோசடி செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.
அந்த ஆவ­ண­மா­னது மேற்­படி வங்கி எவ்­வாறு செயற்­ப­டு­கி­ற­து என்­பதை முதல் தட­வை­யாக அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த பண மோச­டி­யா­னது ரஷ்ய ஜனா­தி­ப­திக்கு மிகவும் நெருக்­க­மான நண்பர் ஒரு­வ­ருக்கு உரி­மை­யான இரு கம்­ப­னிகள் உள்­ள­டங்­க­லாக நிறுவனங்களால் வெளி­நா­டு­களில் செயற்­ப­டுத்­தப்­பட்ட கம்­ப­னி­க­ளி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­துள்­ளது.

அதே­ச­மயம் ஐஸ்­லாந்து பிர­தமர் தனது நாட்­டி­லுள்ள வங்­கி­க­ளி­லான மில்­லியன் கணக்­கான முத­லீ­டு­களை தனது மனை­வியால் இர­க­சி­ய­மாக வெளிநாட்டில் செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்த கம்பனி மூலம் மூடிமறைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேற்படி ஆவணங்களின் கசிவால் ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகுவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்த இரகசிய ஆவணங்களின் கசிவையடுத்து பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நவாஸ் ஷெரீப்பின் மகனான ஹுஸைன் தெரிவிக்கையில், தனது குடும்பத்தினரால் தவறு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார். அந்த வெளிநாட்டு நிறுவனங்களும் தமது குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும் என அவர் கூறினார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல