வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொசாக் பன்சிகா என்ற நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலை பனாமா நாட்டின் சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.
இதில், உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியர்கள்...
இந்தப் பட்டியலில் இந்தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் பிரபலமானவர்கள்.
அமிதாப்...
குறிப்பாக இந்தப் பட்டியலில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டெல்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உள்ளனர்.
தலைவர்கள்...
இந்தப் பட்டியலில் இந்தியர்கள் தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்து...
கடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக