திங்கள், 4 ஏப்ரல், 2016

நீங்கள் நோயா­ளியா? சுக­தே­கியா?

ஆயுள் ரேகை­யா­னது ஒரு சங்­கி­லியைப் போன்றோ துண்டு துண்­டா­கவோ அமைந்­தி­ருந்து அத்­துடன் ஆரோக்­கிய ரேகையும் ஆழப்­ப­திந்து காணப்­பட்டால் அவ்­விதம் அமைந்­த­வ­ருக்கும் ஆரோக்­கி­யத்­துக்கும் வெகு­தூரம்.

ஒரு­வ­ரது ஆரோக்­கி­ய­மா­னது அவ­ரது வாழ்க்கை முறையால் பழக்க வழக்­கங்­க­ளினால் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. அந்த உரு­வாக்­க­மா­னது அவ­ரது கையில் குறுக்கும் நெடுக்­குமாய் வரை­யப்­பட்­டுள்ள கோடு­களால் உணர்த்­தப்­ப­டு­கி­றது.


ஆயுள், புத்தி, இரு­தய, விதி ரேகைகள் அனைத்தும் அவ­ரது எதிர்­கா­லத்தைச் சொல்­லு­வது போல இவை­க­ளுக்கு மத்­தியில் அமைந்­துள்ள ஆரோக்­கிய ரேகையும் அவ­ரது உடல் நிலை, செளக்­கியம் மற்றும் ரோகங்கள் பற்றிச் சொல்­கி­றது. ஒரு கையி­லுள்ள முக்­கி­ய­மான ஏழு ரேகை­களுள் ஆரோக்­கிய ரேகையும் ஒன்­றென ரேகை சாத்­திரம் குறிப்­பி­டு­கின்­றது. ஆனால் இந்த ரேகை­யா­னது இல்­லா­தி­ருப்­பதே நல்­ல­தென ரேகை சாஸ்­தி­ரத்தின் பிதா­ம­க­ரான கைரோ குறிப்­பி­டு­கின்றார். ஏனென்றால் நோய்கள் எது­வு­மற்ற ஒரு திட­மான தேகத்­தை­யு­டை­யவர் கையில் இந்த ரேகை இருக்க வேண்­டிய அவ­சியம் எது­வு­மில்லை என்­பது அவ­ரது கூற்­றாகும். இந்த ரேகை காணப்­ப­டு­வது உடம்பில் ஏதோ­வொரு உள்­ள­டங்­கிய நோய் இருப்­பதன் அறி­கு­றி­யாகும் என்­பதை இத்­தா­லிய கைரேகை மேதை­யான திச­பெ­ர­ளியும் ஒத்துக் கொள்­கிறார்.

ஆனால் ஒரு நேர்­கோ­டாக இல்­லாமல் அலைந்து உலைந்து வெட்­டுண்டு அல்­லது சிதை­வுற்றுக் காணப்­ப­டு­வதே நோயின் அறி­கு­றி­யென்றும் ஆயுள்­ரே­கையின் கிளை­யாக இராத அல்­லது அத­னுடன் தொடர்­பு­ப­டாத சிதை­வுகள் பின்­னங்­க­ளற்ற ஸ்திர­மான ஒரு ரேகை­யாக ஆரோக்­கிய ரேகை நீண்­டி­ருப்­பது வாழ்­நாளில் குன்­றாத ஆரோக்­கி­யத்­தை­யும் தீர்க்­கா­யு­சையும் குறிப்­ப­தாக எல்லா ரேகை சாஸ்­தி­ரி­மாரும் ஒத்­துக்­கொள்­கின்­றனர்.

ஆரோக்­கிய ரேகை­யா­னது ஆயுள்­ரே­கையின் எந்தப் பாகத்தில் அல்­லது ஆயுள்­ரேகை குறிப்­பிடும் ஆயுளின் எத்­த­னையாம் வயதில் உற்­பத்­தி­யா­கி­றதோ அந்த வயதில் அவ்­விதம் அமைந்த நபரின் ஆயுள் முடி­வ­டை­யு­மென ஆங்­கில ரேகை சாத்­தி­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர். ஆனால் அது அனு­ப­வத்­திற்கு ஒத்­து­வ­ர­வில்­லை­யென இந்­திய ரேகை சாத்­தி­ரிகள் பலரும் கூறு­கின்­றனர். ஏனெனில் ஆயுள் ரேகை­யி­லி­ருந்து ஆரோக்­கிய ரேகை ஆரம்­ப­மான காலம் கடந்த பின்­னரும் உயிர் வாழும் அநேகம் பேர் இதற்குச் சாட்­சியாய் இருப்­ப­தாக அவர்கள் அடித்துக் கூறு­கின்­றனர். இது விட­யத்தில் ஆரோக்­கிய ரேகை­யா­னது ஆயுள் ரேகையை தொடா­தி­ருந்தால் மாத்­தி­ரமே தீர்க்­கா­யு­ளுக்கு உத்­த­ர­வா­த­முண்டு என தமிழ் நாட்டின் முது­பெரும் ரேகை சாத்­தி­ரி­யான சக்­தி­தாசன் தமது ஆய்வு நூலொன்றில் குறிப்­பி­டு­கிறார்.

ஆரோக்­கிய ரேகை­யா­னது சந்­தி­ர­மேட்டில் ஆரம்­பித்து செவ்வாய் மேட்­டைக்­க­டந்து புதன் மேடு­வரை சென்றால் அது நீண்ட ஆயுளைக் குறிப்­ப­தாகும். அவ்­விதம் செல்­லாமல் அது வளைந்து சந்­தி­ர­மேட்டின் குறுக்கே நீண்­டி­ருந்தால் அவ்­விதம் அமைந்­தவர் கடல் கடந்து பல பிரயா­ணங்கள் செய்­வதை அது குறிக்கும். ஆயுள் ரேகை­யி­லி­ருந்து அதன் கிளை­யாகப் பிரிந்து சந்­தி­ர­மேட்டின் குறுக்கே செல்லும் பிர­யாண ரேகையை விட இது சிலாக்கியமானதென ரேகை சாத்­திரம் குறிப்­பி­டு­கின்­றது. முன்­னது கடல் கடப்­பதும் பிற­நாடு சென்று முன்­னேற்றம் அடை­வதும் அநே­க­மாக பிறர் தயவில் தங்­கி­யி­ருப்­பதைக் குறிப்­ப­தா­கவும் பின்­னது தன் முயற்­சியில் முயன்று கடல் கடந்து பய­ணங்கள் மூலம் நல்ல சம்­பாத்­தியம் பெறு­வதைக் குறிப்­ப­தா­கவும் அது விப­ரிக்­கி­றது.

ஆரோக்­கிய ரேகை ஒரு நேர்­கோ­டாக இல்­லாமல் வளைந்து வளைந்து புதன் மேட்டை நோக்கிச் சென்­றி­ருந்தால் அப்­படி அமைந்­தவர் பித்த உடம்பு உடை­ய­வ­ரென்று அர்த்தம். அவ­ரது உள்­ளங்­கையில் சதா வியர்வை ஊறி­ய­படி இருக்கும். நீண்ட தூர பஸ், ரயில் பய­ணங்­களில் கிறுதி பிடித்து வாந்­தி­யெ­டுத்து இவர் படும் அவஸ்தை காணக் கன்­றா­வி­யா­யி­ருக்கும். கையி­லுள்ள இதர ரேகைகள் பெரும்­பாலும் மெல்­லி­ய­வை­யாக அமைந்­தி­ருந்து, ஆரோக்­கிய ரேகைக்­குட்­பட்டும் படா­மலும் அமைந்­தி­ருக்கக் காணப்­பட்டால் அவ்­விதம் அமைந்­தவர் இள­மைக்­கா­லத்­தி­லேயே பக்­க­வா­தத்தால் பாதிக்­கப்­பட்டு செய­லி­ழந்து விடப் போகிறார் என்­பதன் அறி­கு­றி ­அது. ஆரோக்­கிய ரேகையின் சிவப்புப் புள்­ளிகள் ஆங்­காங்கே காணப்­படின் இரு­த­யத்­து­டிப்பு அதி­க­மாகும். நெடுந்­தூரம் நடந்­தாலும் உய­ர­மான இடங்­களில் ஏற நேர்ந்­தாலும் இரு­தயம் நின்று விடு­வது போல் பட­ப­ட­வென்று பல­மாக அடித்துக் கொள்­வதை உணர்ந்து அஞ்­சுவர்.

ஆரோக்­கிய ரேகை மஞ்சள் நிறம் கொண்­டி­ருந்தால் உடம்­பா­னது இரத்தக் குறைவால் ஏற்­படும் பல நோய்­களின் விளை­நி­ல­மாக இருப்­பதன் அறி­குறி அது. அதே­வேளை ஆயுள்­ரே­கையில் இருந்து ஆரம்­பிக்கும் ஆரோக்­கிய ரேகையில் சிவப்பும் கறுப்­பு­மான புள்­ளிகள் காணப்­பட்டால் அது இரு­தய நோயுண்­டா­வதன் அறி­கு­றி­யாகும். ஆரோக்­கிய ரேகை­யா­னது புத்­தி­ரே­கையைக் குறுக்­கிடும் போது சூலக்கு போன்ற கிளை ரேகை­க­ளுடன் காணப்­பட்டால் (B) ரேகை சாத்திரம் சோதிடம், வான சாத்­திரம் போன்ற ஏதா­வ­தொன்றில் தேர்ச்­சியும் புகழும் பெறக்­கூ­டிய சுபரூசகம் அது­வாகும்.

ஆரோக்­கிய ரேகை மேல் நோக்கிச் சென்று புத்­தி­ரே­கை­யோடு கலந்து விட அதே­ச­மயம் ஆயுள் ரேகை­யிலும் குறுக்­கிட்ட சிறு சிறு ரேகைகள் நெருங்கிக் காணப்­பட்டால் மூளை சம்­பந்­த­மான நோயுண்­டாகும். ஆயுள், புத்தி, ஆரோக்­கிய ரேகைகள் மூன்றும் சேர்ந்து சிறி­ய­தொரு முக்­கோ­ண­மாக அமைந்து காணப்­பட்டால் (C) சாத்­திர ஆராய்ச்­சியில் சோதிடம் ரேகை சாத்­திரம் மற்றும் வான­வி­யலில் ஆர்­வமும் அவற்றில் தீவி­ரமாய் ஈடு­பட்டால் பின்னே வரப்­போ­வதை முன்னே மொழியும் சூட்­சு­ம­மான ஞான­தி­ருஷ்­டியும் அதனால் புக­ழு­முண்­டாகும். இத்­த­கையோர் தெய்வ உபா­ச­னையில் ஈடு­பட்டால் அவர் வழி­யாக தெய்வம் பேசுமாம். ஆனால் இம்­முக்­கோ­ணத்தின் மத்­தியில் ஒரு நட்­சத்­திரக் குறி அமைந்­தி­ருப்­பது சிறப்­பான பல­னைத்­த­ராது. அது மாலைக்கண் நோயி­ருப்­பதன் அறி­கு­றியாம்.

அதே­ச­மயம் ஆரோக்­கிய ரேகையில் ஒரு நட்­சத்­தி­ரக்­குறி காணப்­ப­டு­வது உயி­ரா­பத்­தைத் ­த­ராது. அது அன்­னா­ருக்கு புத்­திர சந்­தா­ன­மெ­துவும் தர­மு­டி­யாத மலட்­டுத்­தன்மை அவ­ரது உட­லோ­டொட்டி இருப்­பதை அறி­விப்­ப­தாகும். ஆரோக்­கிய ரேகை சுக்­கிர மேட்­டி­லி­ருந்து உற்­பத்­தி­யா­வதும் சரி­யல்ல. (D) அத்­த­கை­யவர் சமூக கலா­சாரம் பண்­பா­டுகள் யாவும் தமது முன்­னேற்­றத்­திற்குத் தடை­யா­னவை என்ற எண்­ணமும் தான்­தோன்­றித்­த­ன­மான போக்கும் கொண்­டவர். இது ஆணுக்கும் பெண்­ணுக்கும் பொருந்தும்.

ஆயுள் ரேகை­யா­னது ஒரு சங்­கி­லியைப் போன்றோ துண்டு துண்­டா­கவோ அமைந்­தி­ருந்து அத்­துடன் ஆரோக்­கிய ரேகையும் ஆழப்­ப­திந்து காணப்­பட்டால் அத்­த­கை­ய­வ­ருக்கும் ஆரோக்­கி­யத்­துக்கும் வெகு தூரம். மருந்தும் கையு­மாக முக்­கலும் முன­க­லு­மாக எப்­போதும் தம்மை ஒரு நோயா­ளி­யாக வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருப்பார்.

ஒன்றின் பக்­கத்­தி­லொன்றாய் இரட்டை ஆரோக்­கிய ரேகைகள் புதன் மேடு­வரை சென்­றி­ருக்கக் காணப்­பட்டால் அத்­த­கை­யவர் நல்ல ஆரோக்­கியசாலி­யா­கவும் பல­சா­லி­யா­கவும் காணப்­ப­டுவார். அத்­துடன் உடற்­ப­யிற்­சிகள், விளை­யாட்­டுக்­களில் தேர்ந்து வெற்றி வாகை சூடு­கி­ற­வ­ரா­யு­மி­ருப்பார். காரைக்­கட்­டி­யி­ழுத்தல், நெஞ்சில் பார ஊர்­தியை ஏற்­றுதல் போன்ற சாக­சங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களும் இத்­த­கை­யோரே.

புத்தி மற்றும் இரு­தய ரேகை­க­ளுக்­கி­டையில் ஆரோக்­கிய ரேகையில் தீவுக்­குறி காணப்­பட்டால் (E) மூக்கு, தொண்டை பற்­றிய நோயைக் குறிக்கும். ஆரோக்­கிய ரேகையில் ஒரு தீவா­னது (F) புத்தி ரேகையின் நடுவே அமைந்­தி­ருந்தால் மார்பு அல்­லது ஈரல் பற்­றிய நோய்கள் பீடிக்­கப்­போ­வதை அல்­லது பீடித்­தி­ருப்­பதை அது காட்டும் குழல் போல் வளைந்த கைவிரல் நகங்கள் இதனை ருசுப்­ப­டுத்தும். ஆரோக்­கிய ரேகை­யா­னது உற்­பத்­தியில் சந்­தி­ர­மேட்டின் அடிப்­பு­றத்தில் ஒரு வில்­வ­ளை­வுடன் ஆரம்­ப­மாகி தங்கு தடைகள் சிதை­வுகள் பின்­னங்­க­ளில்­லாமல் நேரே புதன் மேட்டில் சென்று முடிந்­தி­ருந்தால் நீண்ட ஆயு­ளையும் நோய்­நொ­டி­க­ளில்­லாத சுக வாழ்­வையும் அது குறிப்­ப­தாகும்.

புதன் மேடு நோக்கிச் செல்லும் ஆரோக்கிய ரேகையானது செவ்வாய் மேட்டின் திசை திரும்பி சூரிய மேட்டை நோக்கியிருந்தால் (J) செய்யும் தொழில்கள் நாளாந்தம் ஓங்கி செல்வம் செழிக்குமென ரேகை சாத்திரம் சொல்கிறது. ஆரோக்கிய ரேகை உற்பத்தியில் இரு கிளைகளாக அதிலொரு கிளை ஆயுள்ரேகையைக் குறுக்கிட்டு சுக்கிர மேட்டுக்குள் சென்றிருக்குமானால் (K) அத்தகையவருக்கு மரணம் தன்னை நெருங்கி விட்டதான பிரமை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்குமாம். சாதாரணமாய் தனக்கு நேரும் வியாதி வருத்தம் விபத்துக்களைக் கூட பெரிதாய்க் கற்பனை பண்ணி அஞ்சி நடுங்குவார். ஆனால் அவ்விதம் அற்பாயுளில் வாழ்வு முடியுமா என்பது குறித்து அவரது கையில் ஆயுள்ரேகையின் அமைப்பை அவதானித்தே அறிய வேண்டும். ஆயுள் ரேகையானது அதன் இறுதிவரை சீராகக் சென்றால் மரணம் குறித்து அஞ்ச வேண்டியதில்லை.

திரு­வோணம்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல