திங்கள், 4 ஏப்ரல், 2016

துர்முகி வருடம் துயரங்களை போக்கட்டும்

எமது கலா­சார விழு­மியம் சேர்ந்த புத்­தாண்­டாக அமை­வதே, சித்­தி­ரைப்­புத்­தாண்டு எனப்­ப­டு­கின்ற மேட சங்­கி­ராந்தி இயற்­கையும் இனிதாய் பூத்­துக்­காய்த்து கனியும் வசந்­த­காலம் என வரை­யறை கொடுக்­கப்­பட்ட தமிழ் - சிங்­கள புத்­தாண்­டாக அறு­பது வருடச் சுற்றின் 30ஆவது வரு­ட­மாக துர்­முகி எனும் நாமத்­தோடு இப் புத்­தாண்டு மலர்­கின்­றது. 13–-04–-2016 புதன்­கி­ழமை வளர் ஸப்­தமித் திதியும் திரு­வா­திரை நட்­சத்­தி­ரமும் அதி­கண்­ட­யோகம் வணி­ச­க­ரணம் துலாம் லக்னம் விருட்­சிக நவாம்சம் சூரிய கால வோரை செவ்வாய் சூட்­சு­ம­வோரை ரா­க் ஷச குண வேளை கொண்ட பஞ்­சாங்க சம்­பி­ர­தா­யங்கள் சேர யாழ்ப்­பாணம் இர­கு­நா­த­ஐயர் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி மாலை 6 மணி 36 நிமிட நேர­ம­ளவில் இந்தப் புதிய துர்­முகி வருடம் பிறக்­கின்­றது.


சூரிய அஸ்­த­ம­னத்தின் பின்னர் வருடப் பிறப்பு அமை­வ­தனால் 14.04.2016 வியாழன் அதி­கா­லையில் இருந்து வருடப் பிறப்பு சம்­பி­ர­தா­யங்­களை மேற்­கொள்­வதே சாலச்­சி­றந்­தது.

விஷு புண்­ணிய காலம் 13.04.2016 புதன்­கி­ழமை பிற்­பகல் 2.36 முதல் இரவு 10.36 வரை­யுள்ள காலம் இந்த வருடப் பிறப்­பன்று அனை­வரும் அதி­கா­லையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பச்சை வர்ணம் அல்­லது வெண்­பட்டு அமைந்த புத்­தாடை தரித்து மர­கதம் வைரம் பதித்த ஆப­ரணம் அணிந்து கண்­ணாடி, தீபம், நிறை­குடம் தனது வலக்கை, மஞ்சள் போன்ற மங்­கலப் பொருட்­களை தரி­சித்து விநா­யகர் முத­லான தத்­த­மது இஷ்ட குல தெய்வ வழி­பாடும் சூரி­ய­னுக்கு பொங்கல் வழி­பாடும் புரிந்து தாய், தந்தை, ஆசி­ரியர், பெரியோர் ஆசிகள் பெற்று கைவி­சேடம் கொடுத்து வாங்கி உணவுப் பரி­மாற்றம் செய்து அறு­சுவை உண­வ­ருந்தி தாம்­பூலம் தரித்து உற­வினர் நண்­பர்­க­ளுடன் உற­வாடி இயன்ற தான தர்மம் செய்து புதிய வரு­டப்­ப­லன்­களை வாசித்தும் கேட்டும் நன்­கு­ணர்ந்து நல்ல சிந்­தனை கொண்டு மங்­கலம் நிறைந்த மகிழ்­வோடு சயனம் கொள்ள வேண்டும்.

சங்­கி­ரம தோஷ­மு­டைய நட்­சத்­தி­ரங்கள்

மிரு­க­சீ­ரிடம் 3, 4ஆம் பாதம் புனர்­பூசம், 1, 2, 3 பாதம் சுவாதி, விசாகம், 4ஆம் பாதம் அனுஷம், கேட்டை, சதயம் கொண்டோர் தவ­றாது மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து இயன்ற தான தர்மம் செய்து சங்­கி­ரம தோஷ நிவர்த்தி பெற வேண்டும்.
இவ்­வ­ரு­டத்தின் வரவு –செலவு
ராசி­களின் விபரம்
மேடம்- வரவு 2, செலவு 8
இடபம்- வரவு 11, செலவு 14
மிதுனம்- வரவு 14, செலவு 11
கடகம்- வரவு 14, செலவு 2
சிம்மம்- வரவு 11, செலவு 5
கன்னி- வரவு 14, செலவு 11
துலாம் - வரவு 11, செலவு 14
விருட்­சிகம் - வரவு 2, செலவு 8
தனுசு - வரவு 5, செலவு 14
மகரம் - வரவு 8, செலவு 8
கும்பம் - வரவு 8, செலவு 8
மீனம் - வரவு 5, செலவு 14

அணிய வேண்­டிய புத்­தாடை வர்ணம் பச்சை அல்­லது வெண்மை.

கைவி­சேடம் வரு­டப்­பி­றப்­பன்று கொடுத்து வாங்­குவோர் தெய்­வேந்­திர முகூர்த்தம் 14.04.2016 பகல் 11.46 முதல் 12.16 வரை உள்ள சுப­வே­ளையில் மேற்­கொள்­ளலாம்.

18 -–-04– 2016 திங்கள் காலை 9.10 முதல் 9.37 வரை காலை 9.47 முதல் 11.46 வரை மாலை 6.05 முதல் 7.25 வரை உள்ள சுப­நே­ரங்­களில் கைவி­ஷேடம் புது வியா­பார கணக்கு என்­பன ஆற்­று­வ­தற்கு உரிய சுப நேரங்­க­ளாகும். துர்­முகி வருடம் அனைவர் துய­ரங்­க­ளையும் போக்­கட்டும்.

மேட­ராசி
(அஸ்­வினி, பரணி, கார்த்­திகை, 1ம் பாதம்)

பூமி­கா­ரகன் எனப்­படும் செவ்வாய் கிர­ஹ­கத்தின் ஆதி­பத்­தியம் கொண்ட மேட ராசி அன்­பர்­களே எதைச் செய்­தாலும் அதில் உங்­களின் முதன்­மைத்­த­னத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­படும் நீங்கள் நியாய பூர்­வ­மான குண இயல்­புகள் கொண்­ட­வர்கள். மலரும் துர்­முகி வருடத்தின் முற்­ப­குதி உங்களுக்கு ஓர­ள­விற்கு அனு­கூலம் தரு­வதாய் அமையும். எடுக்கும் முயற்­சி­களில் வெற்­றிகள் அமையும். இவ்­வ­ருடம் ஆடி மாதம் நடுப்­ப­குதி வரை ஓர­ள­விற்கு உங்­களின் முயற்­சி­களில் வெற்றி காண முடியும். அதன் பின்னர் அமையும் குருப்­பெ­யர்ச்சி 02.08.2016 முத­லாக ரோகஸ்­தா­ன­மா­கிய 6ஆம் இடம் அமை­வதும் இவ் வருடம் முழு­வதும் அட்­ட­மத்து சனி சஞ்­சாரம் அமை­வதும் சற்று அலைச்சல், இழு­பறி நிலைகள் அதி­க­மாக இருக்கும். குறிப்­பாக உடல் நிலையில் சுகவீ­னங்கள், மருத்­துவ செல­வுகள் மற்றும் சத்­திர சிகிச்சை போன்ற பலன்கள் அமையும். எந்த விடயம் என்­றாலும் பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். தொழில் நிலை­களில் வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். புதிய தொழில் சார்ந்த விட­யங்­களில் தடை, தாமத இழு­ப­றிகள் தொடரும். பண­வ­ரவு இடை­யி­டையே இறுக்­க­மான நிலையை ஏற்­ப­டுத்தும். உற­வினர், நண்­பர்­க­ளுடன் மனச் சஞ்­ச­ல­மான நிலைகள் அமையும். உங்­களின் ஜாதக நிலையில் அமையும் மஹா திசைப் பலன்கள் சிறப்­பா­ன­தாக அமையும் நிலையில் ஓர­ள­விற்கு நன்­மை­களும் அதி­ப­லன்­களும் அமையும் நிலை இருக்கும். வருடம் முழு­வதும் அமையும் ராகு கேதுவின் கோசார பலன் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் தரும். பெண்­க­ளுக்கு மனச் சஞ்­சல நிலை சற்று அதி­க­மாக இருக்கும். மாண­வர்கள் கல்வி நிலையில் ஊக்­கமும் முயற்­சியும் மிக முக்­கியம். எதையும் முகத்­திற்கு நேரே பட­ப­ட­வென பேசித்­தீர்த்து விடும் நீங்கள் உங்­களின் காரி­யங்­களில் கண்ணும் கருத்­து­மாக செயற்­ப­டு­வீர்கள். எல்லா விட­யங்­க­ளிலும் நேர்­மை­யான செயற்­திறன் கொண்­டி­ருப்­பதால் தெய்வ அனு­கூலம் உங்­க­ளுக்கு உண்டு. இந்த வருடம் சனீஸ்­வரன் குரு கிரஹ வழி­பாட்­டுடன் அம்பாள் வழி­பாடும் மேற்­கொண்டு செயற்­ப­டுங்கள். அனு­கூ­ல­மான நன்மை நூற்­றிற்கு 55% உண்டு.

இட­ப­ராசி
(கார்த்­திகை 2, 3, 4 ம் பாதம் ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1, 2 ம் பாதம்)

களத்­திர காரகன் எனப்­ப­டு­கின்ற சுக்­கி­ரனின் ஆதி­பத்­தியம் கொண்ட இடப ராசி அன்­பர்­களே தனித்­து­வ­மான போக்கும் சாதுர்­ய­மான செயற்­பாடும் கொண்­ட­வர்கள் நீங்கள். உங்கள் ராசி நிலைக்கு துர்­முகி வருடத்தின் பிற்­ப­குதி அனு­கூ­ல­மா­ன­தாக அமையும். சுகஸ்­தானம் எனப்­ப­டு­கின்ற 4ஆம் இடத்­திலே குருவின் கோசார நிலை அமை­கின்­றது. அத்­தோடு சனீஸ்­வரன் சஞ்­சாரம் களத்­தி­ரஸ்­தானம் எனப்­படும் 7ஆம் இடம் அமை­கின்­றது. எனவே ஆண்டின் நடுப்­ப­குதி வரை சற்று அலைச்­சலும் இழு­பறி நிலை­களும் இருக்கும். தொழில் நிலை­களில் வேலைப்­பழு சற்று அதி­க­மாக இருக்கும். குடும்ப நிலை­யிலே சிறு சிறு பிரச்­சி­னைகள், மனச்­சஞ்­சல நிலைகள் ஏற்­படும். தேவை­யற்ற வீண் பிரச்­சி­னைகள் உங்­களை நாடி வரு­கின்ற நிலை இருக்கும். பண வரவு மத்­தி­ம­மா­கவே அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் 02 முதல் குருவின் கோசார நிலை பஞ்­ச­மஸ்­தா­ன­மா­கிய 05 ஆம் இடம் அமை­வதன் மூல­மாக தொழில் நிலை­களில் நல்ல முன்­னேற்­றங்கள் இருக்கும். புதிய தொழில் முயற்­சி­களில் அனு­கூ­ல­மான வெற்­றிகள் அமையும். குடும்ப நிலையில் மகிழ்ச்­சியும் நன்­மை­களும் ஏற்­படும். திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்களுக்கு அப்­பலன் அனு­கூ­ல­மா­ன­தாக அமையும் நிலை­யுண்டு. பெண்­க­ளுக்கு ஓர­ள­வுக்கு மன நிறைவும் குடும்ப நிலையில் சுமு­க­மான பலன்­களும் ஏற்­படும். மாண­வர்­களுக்கு கல்வி நிலையில் நல்ல முன்­னேற்­றங்கள் இருக்கும். புதிய முயற்சி ஓர­ள­விற்கு வெற்­றி­களை தரக்­கூ­டி­யதாய் இருக்கும். உங்­களின் நீண்ட நாள் நண்­பர்கள் உற­வி­னர்­களின் தொடர்­புகள் அமையும். மொத்­தத்தில் துர்­முகி வரு­டத்தின் பிற்­ப­குதி உங்­க­ளுக்கு ஓர­ள­வுக்கு சிறப்­புகள் கொடுக்கும். உங்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு வெற்­றிகள் அமையும். பொது­வா­கவே எல்லா விட­யங்­க­ளையும் மன­திற்­குள்ளே வைத்து மூடி மறைக்கும் குண இயல்பால் பல விட­யங்­க­ளிலும் நீங்கள் மந்­த­மா­ன­வர்­க­ளாக இருப்­பீர்கள். இதை சரி செய்தால் நீங்­களே மகத்­தான வெற்­றி­யா­ளர்கள். சனீஸ்­வரன் அம்மன் வழி­பாடு நல்­லது. துர்­முகி வருடம் நூற்­றிற்கு 65 % நன்­மைகள் கொடுக்கும்.

மிதுன ராசி
(மிரு­க­சீ­ரிடம் 3, 4 பாதம் திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2, 3 ம் பாதம்)

வித்­தி­யா­கா­ரகன் புதனின் ஆதி­பத்­தியம் கொண்ட மிதுன ராசி அன்­பர்­களே அறி­வுத்­தி­றனும் ஆக்­க­பூர்வ செயற்­பாடும் கொண்ட உங்­க­ளுக்கு இந்த துர்­முகி வரு­டத்­தின் சற்று மத்­தி­ம­மான பலன்­களே அமையும் நிலை­யுண்டு. எடுக்கும் முயற்­சி­களில் சற்று பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். தொழில் நிலை­களில் அலைச்சல் இழு­பறி நிலைகள் இருக்கும். குடும்ப நிலையில் குழப்ப நிலை அதி­க­மா­யி­ருக்கும். மனச்­சஞ்­சல நிலை, யோச­னைகள் சற்று அதி­க­மா­யி­ருக்கும். உங்­களின் ராசி நிலைக்கு குருவின் கோசார சஞ்­சா­ர­மா­னது முதற்­ப­குதி ஆகஸ்ட் 02 வரை ஜெயஸ்த்­தா­ன­மா­கிய 3ஆம் இடம் குருவின் சஞ்­சாரம் அமை­கின்­றது. அதன் பின்­ன­ராக சுகஸ்­தா­ன­மா­கிய 4ஆம் இடம் குரு­சஞ்­சாரம் அமை­கின்­றது. எனவே இந்த இரு நிலைச் சஞ்­சா­ரமும் சற்று மத்­தி­ம­மான பலன்­க­ளையே தரும். எனவே பெரும் சிறப்­பான நன்­மை­யான பலா­ப­லன்­களை எதிர்­பார்க்க முடி­யாது. சனீஸ்­வ­ரனின் சஞ்­சாரம் ரோகஸ்த்­தா­ன­மா­கிய 6ம் இடம் அமை­வதன் மூலம் இடை­யி­டையே சிறு சிறு நன்­மை­களும் அதிர்ஷ்ட பலன்­களும் அமையும். எதையும் பொறு­மை­யாக கையாண்டு கொள்­வதே மிகவும் நல்­லது. தொழில் சார்ந்த தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். மற்றும் திடீர் வழக்கு விவ­கா­ரங்கள் அமையும். கொடுக்கல் வாங்கல் மற்றும் புதிய முயற்­சி­களில் மிகப் பொறு­மை­யோடு செயற்­பட வேண்டும். பெண்­க­ளுக்கு சஞ்­ச­ல­மான நிலைகள் இருக்கும். வாக்கு வாதங்கள், பகைமை நிலை என்­பன ஏற்­படும். மாண­வர்கள் கல்வி நிலையில் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். மந்­த­மான நிலை கல்­வியில் தொடரும் முயற்­சியும் நிதா­ன­முமே மிகவும் வெற்­றிகள் கொடுக்கும். உங்­களின் ஜாதக மஹா திசை சிறப்­பாக அமையும் நிலை இருப்பின் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நன்­மை­களும் இருக்கும். பொது­வா­கவே உங்­களை ஒரு புரி­யாத புதி­ரா­கவே உங்கள் உற­வினர் முதல் நண்­பர்கள் பார்ப்­பார்கள். அந்த அள­விற்கு உங்­களின் செயற்­பாடும் அமைந்­தி­ருக்கும். யாரு­டனும் எதையும் பகிர்ந்து கொள்­ளாமல் உங்கள் விட­யங்­களை உங்­க­ளுக்­குள்­ளேயே வைத்து செயற்­பட்டு பல பிரச்­சி­னை­களை சந்­திப்­பீர்கள். விஷ்ணுவை வழி­படவும் எடுக்கும் விட­யங்­களில் பொறுமை நிதா­ன ­முடன் செயற்­ப­டவும் துர்­முகி வருடம் நூற்­றிற்கு 50% நன்­மைகள் கொடுக்கும்.

கடக ராசி
(புனர்­பூசம் 4ம் பாதம், பூசம், ஆயி­லியம்)

மாத்­து­ரு­கா­ரகன், சந்­தி­ரனின் ஆதி­பத்­தியம் கொண்ட கட­க­ராசி அன்­பர்­களே மன நிலையில் சிந்­த­னையும் மறை­மு­க­மான செயற்­பாடும் கொண்ட உங்­க­ளுக்கு இந்த துர்­முகி வருடம் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மா­ன­தாக அமையும். வருட முற்­ப­குதியில் எடுக்­கின்ற முயற்­சி­களில் வெற்­றிகள் கொடுக்கும். தொழில் நிலையில் முன்­னேற்­ற­க­ர­மான பலன் இருக்கும். புதிய முயற்­சி­க­ளிலும் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன் இருக்கும். பண வரவு தேவை­களை பூர்த்தி செய்யும் நிலை இருக்கும். ஆகஸ்ட் 02 ஆம் திக­தியின் மேல் குருவின் நிலை ஜெயஸ்த்­தா­ன­மா­கிய 3ஆம் இடம் அமை­வது சற்று அலைச்சல் நிலை­களைக் கொடுக்கும். எடுக்கும் முயற்­சி­களில் சற்று பொறு­மையும் நிதா­னமும் தேவை. தேவை­யற்ற பிரச்­சி­னை­களில் சிக்க வேண்டி பலன் இருக்கும். குடும்ப நிலையில் மத்­தி­ம­மான மந்­த­மான பலன் இருக்கும். சகோ­த­ரர்­க­ளுடன் சிறு சிறு மனஸ்­தாபம் அமையும். எதையும் எண்­ணி­ய­படி செய்து முடிக்க இய­லாத தடைகள் இருக்கும். இந்த துர்­முகி வருடம் முழு­வதும் சனீஸ்­வரன் பஞ்­ச­மஸ்­தா­ன­மா­கிய 5ஆம் இடம் அமை­வ­தனால் திடீர் சிக்கல் நிலைகள் பண­வ­ரவில் தடைகள் கொடுக்கல் வாங்கல் நிலை­களில் இழு­பறி நிலைகள் என்­பன இருக்கும். ராகு கேது சஞ்­சா­ரமும் சற்று இழு­பறி நிலையை இடை­யி­டையே ஏற்­ப­டுத்தும். பெண்­க­ளுக்கு தாம் நினைக்கும் விட­யங்­களில் சிறு சிறு பிரச்­சி­னைகள், மனச்­சஞ்­சல நிலைகள் என்­பன அமையும். மாண­வர்கள் கல்வி நிலையில் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நிலை இருப்­பினும் பரீட்­சை­களில் மந்­த­மான பலா­ப­லன்கள் இருக்கும். அதற்கு ஏற்ப நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். பொது­வா­கவே கல­க­லப்­பா­கவும் எல்­லோ­ரு­டனும் நட்­பு­றவு கொண்டும் பழகும் நீங்கள் முயற்­சியும் இலட்­சி­யமும் அதிகம் கொண்­ட­வர்கள். இருப்­பினும் உங்­களின் செயற்­பாட்­டினில் முழு­மை­யான ஈடு­பாடு இருக்­காது. சிறு­பிள்­ளைத்­த­ன­மான உங்­களின் நடை­முறை பல விட­யங்­க­ளிலும் உங்­க­ளுக்கு சற்று பிரச்­சி­னை­களை தரு­வ­தா­கவே இருக்கும். இந்த வரு­சத்­திலே முதல் ஆறு மாத காலம் ஓர­ள­விற்கு உங்­க­ளுக்கு வெற்­றிகள் அமையும். பிற்­ப­குதி சற்று போராட்­ட­மான நிலை­களைக் கொடுக்கும். குருக்­கி­ரஹ வழி­பாடு, அம்மன் வழி­பாடு அனு­கூலம் கொடுக்கும். இந்த துர்­முக வரு­டத்­திலே நூற்­றிற்கு 50% நன்­மை­யுண்டு.

சிம்ம ராசி
(மகம், பூரம், உத்­தரம் 1ம் பாதம்)

சூரி­யனின் ஆதி­பத்­தியம் கொண்ட சிம்­ம­ராசி அன்­பர்­களே எந்த விட­யத்­தையும் சாணக்­கி­யத்­துடன் செய்­கின்ற ஆளு­மையும் திற­மையும் கொண்ட உங்­க­ளுக்கு இந்த துர்­முகி வரு­டத்தின் முதற்­ப­குதி சற்று மத்­தி­ம­மான சுமா­ரான பலன்­க­ளையே கொடுக்கும். குருவின் கோசார சஞ்­சார நிலை 2016 ஆகஸ்ட் வரை ஜென்ம குரு­வாக அமைந்­தி­ருப்­பது தொழில் நிலை­களில் சற்று அலைச்சல் இழு­பறி நிலைகள் இருக்கும். தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். குடும்ப நிலையில் மனச்­சஞ்­சல நிலைகள், தேவை­யற்ற வீண் செல­வீ­னங்கள், உடல் நிலை உபா­தைகள், வழக்கு விவ­கா­ரங்­களில் சிக்கல், இழு­பறி நிலைகள் என்­பன ஏற்­படும். எந்த விடயம் என்­றாலும் பொறுமை, நிதா­ன­முடன் செயற்­ப­டவும். அத்­தோடு இந்த துர்­முகி வருடம் முழு­வதும் சனீஸ்­வரன் சஞ்­சாரம், சுகஸ்­தானம் எனப்­ப­டு­கின்ற 4ஆம் இடம் கண்­டார்த்த சனி­யாக அமை­வ­தனால் ஒரு பிரச்­சினை நிறைவு பெற மறு பிரச்­சினை உரு­வாகும் நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப பொறு­மையும் நிதா­னமும் கொண்டு செயற்­பட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் பலன் தனஸ்­தா­ன­மா­கிய 2ஆம் இடம் அமை­வது ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்­க­ளைக்­கொ­டுக்கும். குடும்ப ரீதியில் சிறு சிறு நன்­மைகள் அமையும். தொழில் நிலை சார்ந்த முன்­னேற்­றங்கள் அமையும். பெண்­க­ளுக்கும் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நிலை அமையும். மாண­வர்­களுக்கு கல்வி நிலையில் முன்­னேற்­றங்கள் ஏற்­படும். பொது­வா­கவே உங்­களின் செயற்­பா­டு­களில் அதி­க­மான அக்­கறை கொண்டு செயற்­படும் நீங்கள் யாருக்­கா­கவும் இரக்கம் கொண்டு செயற்­ப­ட­மாட்­டீர்கள். உங்கள் காரி­யங்­க­ளிலே கண்ணும் கருத்­து­மாக இருப்­பீர்கள். மன­நி­லையில் எப்­போதும் சஞ்­ச­லங்­களும் சிந்­த­னை­களும் கொண்டு செயற்­ப­டு­வீர்கள். உங்­க­ளுக்கு இந்த துர்­முகி வருடத்­திலே சற்று சுமா­ரான மத்­திம பலன்­களே அமையும். அதற்கு ஏற்ப உங்­களின் செயற்­பாடு இருக்க வேண்டும். குரு சனி கிரஹ வழி­பாடும் சிவன் வழி­பாடும் நன்மை தரும். துர்­முகி வருடம் நூற்­றிக்கு 50% நன்­மை­யுண்டு.

கன்னி ராசி
(உத்­தரம், 2,3,4,பாதம், அத்தம், சித்­திரை1,2,பாதம்)

புதனின் ஆதி­பத்­தியம் கொண்ட கன்னி ராசி அன்­பர்­களே! எதிர்­காலம் உணர்ந்து திட்டம் தீட்டிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் நீங்கள். இத­னாலே பல சிக்­கல்­க­ளையும் எதிர்­கொள்­வீர்கள். உங்­களின் ராசி நிலைக்கு இந்த துர்­முகி வரு­டத்­திலே ஆடி மாதம் வரையும் அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும். எதையும் சமா­ளிக்கும் நிலை­க­ளைக்­கொ­டுக்கும் பல­னி­ருக்கும். இருப்­பினும் செல­வீ­னங்கள் சற்று அதி­க­மா­கவே இருக்கும். ஆகஸ்ட் மாதம் அமையும் குருப்­பெ­யர்ச்சி ஜென்­மஸ்­தா­ன­மா­கிய 7ஆம் இடம் அமை­வது சற்று மந்­த­மான பலன்­களே அமையும். எடுக்கும் முயற்­சி­களில் நிதானம் தேவை. தொழில் நிலை­களில் பிரச்­சி­னைகள் அதி­க­மாக இருக்கும். வேலைப்­பளு, மேலதி ­கா­ரி­க­ளுடன் மனச்­சஞ்­சல நிலை என்­பன ஏற்­படும். குடும்ப நிலையில் உற­வி­னர்­க­ளுடன் மனஸ்­தாப நிலை, எதிர்­பா­ராத உடல் நிலை உபாதை, பண­வ­ரவில் மந்த நிலை போன்ற பலா­ப­லன்கள் இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். வழக்கு விவ­கா­ரங்­களில் சிக்கல் நிலை இழு­பறி நிலை தொடரும். புதிய முயற்­சி­களில் பொறுமை, நிதானம் கொண்டு செயற்­பட வேண்டும். பெண்­க­ளுக்கு மந்­த­மான பல­ன­ளிக்கும். திரு­மணம் போன்ற விட­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­களுக்கு அப்­பலன் சற்று மத்­தி­ம­மாக இருக்கும். இழு­பறி தடை­களைக் கொடுக்கும். மாணவர் கல்வி நிலையில் கூடு­த­லான கவ­னமும் முயற்­சியும் எடுக்க வேண்டும். பொது­வா­கவே தேவை­யில்­லாமல் மிக அதி­க­மாக சிந்­தித்து பல பிரச்­சி­னை­க­ளையும் உடல், மன­நிலை சோர்­வையும் நீங்­களே ஏற்­ப­டுத்­திக்­கொண்டு விடு­வீர்கள். யாரு­டனும் நம்­பிக்­கை­யோடு பழ­க­மாட்­டீர்கள். இதுவும் உங்­க­ளுக்கு அதி­க­மான பிரச்­சி­னை­களை தரும். சனீஸ்­வரன் சஞ்­சாரம் இந்த வருடம் அனு­கூ­ல­மாக அமை­கின்­றது. குருக்­கி­ரஹ வழி­பாடும் விஷ்ணு வழி­பாடும் நல்­லது. இந்த துர்­முகி வருடம் உங்­க­ளுக்கு நூற்­றிற்கு 45% நன்மை.
(தொடரும்)

துலாம் ராசி
( சித்­திரை 3, 4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

சுக்­கி­ரனின் ஆதி­பத்­தியம் கொண்ட துலாம் ராசி அன்­பர்­களே எதையும் மனச்­சாட்­சிப்­படி செய்­கின்ற மனப்­பக்­குவம் அதிகம் கொண்­ட­வர்கள். தவ­றான ஒரு விடயம் செய்­தாலும் அதற்­காக ஏதோ ஒரு வகையில் சம்­பந்­தப்­பட்­ட­வர்க்கு பரி­காரம் செய்து விடு­வீர்கள்.

உங்­களின் ராசி நிலைக்கு துர்­முகி வரு­ஷத்­திலே ஆகஸ்ட் மாதம் வரை அனு­கூ­ல­மான பலன்கள் அமையும். அதன் பின்னர் குருவின் சஞ்­சாரம் விர­யஸ்த்­தா­ன­மா­கிய 12ம் இடம் அமை­வதன் கார­ண­மாக அதி­க­மான செல­வுகள் இருக்கும். அத்­தோடு இந்த வருஷம் முழு­வ­து­மாக உங்­க­ளுக்கு ஏழ­ரைச்­சனி சஞ்­சாரம் நடை­பெ­று­கின்­றது. எனவே ஏழ­ரைச்­ச­னியின் கடைக்­கூற்­றுப்­பலன் என்­ப­த­னாலே பெரும் சிர­மங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொழில் நிலை­களில் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலா­ப­லன்கள் அமையும். எடுக்கும் முயற்­சி­களில் சிறு சிறு இழு­பறி, மந்த நிலை இருப்­பினும் அனு­கூ­ல­மான பலன் இருக்கும். பண வரவு ஓர­ள­விற்கு தேவை­க­ளைப்­பூர்த்தி செய்யும். குடும்ப நிலையில் அனு­கூ­ல­மான பலா­ப­லன்கள் இருக்கும். எதிர்­பா­ராத தல யாத்­திரைப் பய­ணங்கள் அமை­கின்ற நிலை இருக்கும். பெண்­க­ளுக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன் அமையும். திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­கட்கு அப்­பலன் சிறு சிறு இழு­பறி நிலை­க­ளைக்­கொ­டுக்கும். மாண­வர்­கட்கு கல்வி நிலை அனு­கூ­ல­மா­ன­தாக அமையும். கடன் பிரச்­சி­னை­களில் சற்று இழு­பறி தாமத நிலைகள் அமையும். பொது­வாக எந்­த­வி­டயம் என்­றாலும் சற்று போரா­டியே ஜெயிக்க வேண்டும். பொது­வா­கவே செய்யும் விட­யங்­களில் நேர்­மைத்­திறன் கொண்­ட­வர்கள் நீங்கள் எல்­லோ­ரையும் அனு­ச­ரித்து செயல்­ப­டு­வீர்கள். ஒருவர் மீது வெறுப்பு ஏற்­பட்டால் கடை­சி­வரை அது வெறுப்­பா­கவே கொண்டு செயல்­ப­டு­வீர்கள். தெய்வ நம்­பிக்கை அதிகம் கொண்­ட­வர்கள். உங்­களின் ராசி நிலைக்கு இந்த வரு­டத்தில் சனி குரு வழி­பாடும் அம்மன் வழி­பாடும் மிகவும் நன்மை தரும். துர்­முகி வருடம் நூற்­றிற்கு 60% நன்­மை­யுண்டு.

விருட்­சிக ராசி
(விசாகம், 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

செவ்வாய் கிரஹ ஆதி­பத்­தியம் கொண்ட விருட்­சிக ராசி அன்­பர்­களே! எந்த விட­யத்­திலும் தேவை­யற்ற தலை­யீ­டுகள் கொடுத்து பிரச்­சி­னை­களை வாங்கிக் கொள்­ப­வர்கள் நீங்கள். உங்கள் ராசி நிலைக்கு துர்­முகி வருட பலா­ப­லன்கள் மத்­தி­ம­மா­ன­தா­கவே முற்­ப­குதி அமையும். தொழில் சார்ந்த பிரச்­சி­னைகள், வேலைப்­பளு, தொழில் நிலை இட­மாற்றம் போன்ற பலா­ப­லன்கள் அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் சஞ்­சாரம் லாபஸ்த்­தான மாகிய 11ம் இடம் அமை­வது ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன் கொடுக்கும். பண வரவும் அனு­கூ­ல­மான நிலை­யிலே அமை­கின்ற பலன் இருக்கும். இருப்­பினும் ஏழ­ரைச்­சனி சஞ்­சாரம் ஜென்­மச்­ச­னி­யாக அமை­வ­தனால் எந்­த­வி­டயம் என்­றாலும் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்­பட வேண்டும். தேவை­யற்ற சிறு சிறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்டு மறையும். உடல் நிலையில் சுக­யீ­னங்­களும் மருத்­துவ செல­வு­களும் அமையும். கடன் பிரச்­சி­னை­களில் சிக்கல் நிலைகள், வழக்கு விவ­கா­ரங்­களில் இழு­பறி நிலைகள் என்­பன ஏற்­பட்டு மறையும் நிலை­யி­ருக்கும். பெண்­க­ளுக்கு சஞ்­ச­ல­மான நிலை அமைந்­தி­ருக்கும். திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு சிறு சிறு அலைச்சல், இழு­பறி என்­பன இருக்கும். குருவின் லாபஸ்த்­தான சஞ்­சார நிலை நற்­ப­லன்­களைக் கொடுக்கும் நிலை உண்டு. இருப்­பினும் அவை முழு­மை­யாக நிறை­வாகப் பெற முடி­யாத நிலையில் ஜென்­மச்­ச­னி­யாக ஏழ­ரைச்­ச­னியின் சஞ்­சாரம் வருடம் முழு­வதும் அமை­வ­தனால் இந்த துர்­முகி வரு­ஷத்தில் போராட்ட நிலை மிகவும் அதி­க­மாக இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை நிதா­னத்­துடன் செயற்­பட வேண்டும். நீங்கள் நினைக்கும் விட­யங்­களை எப்­ப­டியும் செய்து முடிக்­கின்ற குண இயல்பு உங்­க­ளிடம் அதி­க­மாக இருக்கும். எந்த நிலை­யிலும் உங்­க­ளுக்கு இஷ்­ட­மான விட­யங்­களை எப்­ப­டியும் யாருக்­கா­கவும் விட்­டுக்­கொ­டுக்­க­மாட்­டீர்கள். எதையும் உங்­களின் எண்­ணப்­ப­டியே எல்­லா­வற்­றையும் செய்­வீர்கள். இத­னா­லேயே பல­வித இன்­னல்­க­ளைச்­சந்­தித்து கொள்­வீர்கள். இந்த துர்­முகி வரு­டத்­திலே நூற்­றிற்கு 60% நன்­மை­யுண்டு.

தனுசு ராசி
( மூலம், பூராடம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம்)

குருவின் பூர­ண­மான ஆதி­பத்­தியம் கொண்ட தனு­சு­ராசி அன்­பர்­களே! எந்த விடயம் என்­றாலும் தன்­னம்­பிக்­கை­யுடன் செயற்­பட்டு போராடும் குண இயல்பு கொண்ட உங்­க­ளுக்கு இந்த துர்­முகி வரு­டத்­திலே உங்கள் ராசிக்கு முற்­ப­கு­திப்­பலன் மிகவும் அனு­கூ­ல­மா­ன­தாக அமை­கின்­றது. தொழில் சார்ந்த முன்­னேற்­றங்கள் அமையும் நிலை இருக்கும். குடும்ப நிலையில் நற்­ப­லா­ப­லன்­க­ளுக்கு இட­மி­ருக்கும். சுப­கா­ரிய பலன்கள் சுமு­க­மாக அமையும் பலன் இருக்கும். புதிய முயற்­சி­களில் ஓர­ள­விற்கு அனு­கூல பலன் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமை­கின்ற குருவின் பலன் ஜீவ­னஸ்­தா­ன­மா­கிய 10 ஆம் இடம் அமை­வதன் மூல­மாக எடுக்கும் முயற்­சி­களில் அலைச்சல் நிலை அதி­க­மாக இருக்கும். பண­வ­ரவு மந்­த­மான நிலையில் அமையும். தொழில் நிலை­களில் இட­மாற்றம், பதவி மாற்றம், தொழில்­சார்ந்த விட­யங்கள் என்­பன அமை­கின்ற நிலை­யி­ருக்கும்.
தேவை­யற்ற அலைச்சல் நிலைகள் அதி­க­மாக இருக்கும். குடும்ப நிலை­யிலும் மனச்­சஞ்­சலம் மந்­த­மான பலன் என்­பன அமை­கின்ற நிலை இருக்கும். பொறுமை, நிதா­னத்­தோடு செயற்­ப­டு­வது மிக நல்­லது. இந்த துர்­முகி வருடம் முழு­வதும் ஏழ­ரைச்­சனி சஞ்­சாரம் நடை­பெ­று­கின்­றது. எனவே எதிர்­பா­ராத பிரச்­சி­னைகள் ஏற்­படும். திடீர் பண­வி­ரயம், பொருள் விரயம் என்­பன ஏற்­ப­டு­கின்ற நிலைகள் இருக்கும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலையில் தடைகள், இழு­ப­றிகள் அமையும். பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சல நிலை­களும் குடும்ப நிலையில் குழப்ப நிலை­களும் அமையும். எதையும் சிந்­தித்தே நிதா­ன­முடன் செயல்­ப­டுத்­துங்கள். மாண­வர்­களின் கல்வி நிலையில் சிறு­சிறு மந்த நிலைகள் இருக்கும். பரீட்­சை­களில் முயற்­சி­யோடு செயற்­பட வேண்டும். பொது­வாக துர்­முகி வரு­டத்தின் பிற்­ப­கு­தியில் சுமா­ரான பலன்­களே அமையும் நிலை இருக்கும். அதற்­கு­ரிய செயல் கொண்டு உங்­களின் காரி­யங்­களை நீங்கள் நகர்த்த வேண்டும். முக்­கி­ய­மாக புதிய முயற்­சி­களில் ஈடு­பாடு கொள்ளும் போது ஒன்­றிற்கு பல­முறை சிந்­தித்து செயல்­ப­டு­வதே மிக மிக நல்­லது. பொது­வா­கவே உங்கள் செயற்­பா­டு­களில் பிடி­வாதம் அதிகம் கொண்­டி­ருப்­பீர்கள். அந்த பிடி­வாத நிலையில் இருந்து இறங்கி வர­மாட்­டீர்கள். இத­னா­லேயே அதிக பிரச்­சி­னை­க­ளையும் சந்­தித்து கொள்­வீர்கள். உங்­களின் அணு­கு­முறை மற்­ற­வர்­களை கோபப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்கும். சொல்­வது ஒன்று. செய்­வது வேறொன்று எனச்­செ­யல்­ப­டு­வீர்கள். மற்­ற­வர்­களின் மனதை புரிந்து செயல்­படும் எண்ணம் அற்­ற­வர்­க­ளா­கவே இருப்­பீர்கள். எதையும் சமா­ளிக்கும் ஆற்றல் உங்­களின் தனித்­து­வ­மாகும்.

குரு, சனி கிரஹ வழி­பாடும் சிவன் வழி­பாடும்
அனு­கூ­ல­மான பலன் தரும். இந்த துர்­முகி வரு­டத்­திலே நூற்­றிற்கு 60% நன்­மைகள் ஏற்­படும்.

மகர ராசி
(உத்­த­ராடம், 2,3,4 ஆம் பாதம் திரு­வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்)

சனீஸ்­வ­ரனின் ஆதி­பத்­தியம் கொண்ட மக­ர­ராசி அன்­பர்­களே! முகத்­திற்கு நேரே எதையும் பேசு­கின்ற சுபாவம் கொண்ட நீங்கள் உங்கள் நிலை­யி­லி­ருந்து இறங்கி வர­மாட்­டீர்கள். உங்­களின் ராசி நிலைக்கு இந்த துர்­முகி வரு­டத்­திலே முதற்­ப­கு­தி­யி­னிலே அட்­ட­மத்து குருவின் சஞ்­சாரம் ஆகஸ்ட் மாதம் வரை எடுக்கும் முயற்­சி­களில் சிறு சிறு தடை, தாமத நிலைகள் அமையும். தொழில் நிலை­களில் தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­களில் சிக்க வேண்டி வரும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மான நிலை­யி­லேயே அமையும். குடும்ப நிலையில் மத்­தி­ம­மான பலன்­களும் மனச்­சஞ்­சல நிலை­களும் இருக்கும். எதையும் திருப்­தி­க­ர­மாக செய்ய முடி­யாத நிலை இருக்கும். சற்று பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். உடல் நிலை­யிலே சிறு சிறு சுக­யீ­னங்கள், மருத்­துவ செலவு என்­பன இருக்கும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் நிதானம் தேவை. கடன் பிரச்­சி­னை­களில் இழு­பறி நிலை, வழக்கு விவ­கா­ரங்­களில் சிக்கல் நிலை போன்ற பலா­ப­லன்கள் அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமையும் குருவின் பலன் பாக்­கி­யஸ்த்­தா­ன­மா­கிய 9ஆம் இடம் அமை­வது மிகவும் சிறப்­பான அனு­கூ­ல­மான பலன்­க­ளைக்­கொ­டுக்கும்.

சனீஸ்­வ­ரனின் பலன் லாபஸ்த்­தா­ன­மா­கிய 11 ம் இடம் அமைந்து இருப்­பதும் சிறப்­பான நிலையே. எனவே புதிய முயற்­சி­களில் நல்ல வெற்­றிகள் அமையும் நிலை இருக்கும். எதையும் சமா­ளிக்­கக்­கூ­டிய திறன் அமையும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பார்க்­கின்­ற­வர்­கட்கு அப்­பலன் நிறை­வா­ன­தாகக் கைகூடும் நிலை­யுண்டு. மாண­வர்­களின் கல்வி நிலையில் முன்­னேற்­ற­க­ர­மான பலன் அமையும். பொது­வா­கவே துர்­முகி வரு­டத்தின் பிற்­ப­குதி உங்­க­ளுக்கு எண்­ணங்கள் ஈடேறும் நிலையே அதி­க­மாக உண்டு. எனவே அதற்கு ஏற்ப செயல்­பட்டு நல்ல வெற்­றி­களை நீங்கள் பெற்­றுக்­கொள்ள முடியும். பிடி­வா­தமும் வாக்கு வாதம் செய்­வதும் உங்­களின் முக்­கிய குணம். யாரையும் மதிக்­க­மாட்­டீர்கள். உங்கள் முடிவே உங்­க­ளுக்கு திருப்தி தரும். குரு­வ­ழி­பாடும் சிவன் வழி­பாடும் உத்­தமம். இந்த வருடம் நூற்­றிற்கு 70% நன்­மை­யுண்டு.

கும்ப ராசி
( அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்­டாதி 1,2,3 ஆம் பாதம்)

சனீஸ்­வ­ரனின் முழு­மை­யான ஆதி­பத்­தியம் கொண்ட கும்­ப­ராசி அன்­பர்­களே! உங்­களை ஒரு அப்­பாவி போல காட்­டியே பல­வித அதிர்ஷ்­டங்­க­ளையும் பெற்­றுக்­கொள்ளும் புத்­தி­சா­லிகள் நீங்கள். உங்­களின் ராசி நிலைக்கு இந்த துர்­முகி வருடம் அமையும் பலன்கள் சற்று மத்­தி­ம­மான பலன்­க­ளா­கவே இருக்கும். எடுக்கும் முயற்­சி­களில் பொறுமை, நிதானம் தேவை. குடும்ப நிலையில் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் ஆகஸ்ட் மாதம் வரை அமையும். இக்­கால எல்­லை­யிலே உங்­களின் புதிய முயற்­சிகள் செயற்­பா­டு­களில் ஓர­ள­விற்கு நன்­மைகள் ஏற்­படும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் பலன் அட்­ட­மஸ்த்­தா­ன­மா­கிய 8ம் இடம் அமை­வது தொழில் நிலை­களில் அலைச்சல் பிரச்­சினை என்­பன அமையும். எடுக்கும் முயற்­சி­களில் நிதானம் தேவை. பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மான நிலை­யி­லேயே அமை­கின்ற நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­களில் இழு­பறி, தாமத நிலை தொடரும். எதையும் நினைத்­த­படி செய்ய முடி­யாத நிலை இருக்கும். குடும்ப நிலை­யிலே மனச்­சஞ்­ச­லங்­களும் தேவை­யற்ற பிரச்­சி­னை­களும் அமை­கின்ற நிலை இருக்கும். எதையும் நிதா­ன­மா­கவே செயற்­ப­டுத்த வேண்டும். பெண்­க­ளுக்கு தேவை­யற்ற பிரச்­சி­னைகள் அமையும். மாண­வர்கள் கல்வி நிலையில் பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகமிருக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல் நிலை அமையும். பொதுவாகவே எதையுமே ஒரு அசட்டைத்தனத்தோடு எடுத்து செயற்படுபவர்கள் நீங்கள். ஒரு விடயம் பற்றிய தெளிவு அறிவு இல்லாவிடினும் தெரிந்தது போல் துணிவோடு செயல் ஆற்றும் குணம் உடையவர்கள். உங்களை விஞ்சி மற்றவர் முன்னேற்றம் காண்பதை விரும்ப மாட்டீர்கள். இந்த வருஷம் குரு வழிபாடும் சிவன் வழிபாடும் மிக நல்லது. துர்முகி வருடத்தில் நூற்றிற்கு 50% நன்மையுண்டு.

மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி ரேவதி)

குருவின் பூரணமான ஆதிபத்தியம் கொண்ட மீனராசி அன்பர்களே !எதையும் விளம்பரத்தோடு செய்ய வேண்டும் எனும் எண்ணப்பாங்கு அதிகம் கொண்டவர்கள். நீங்கள் உங்களின் ராசி நிலைக்கு துர்முகி வருடத்திலே ஓரளவு அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. எடுக்கும் முயற்சிகள் சிறு சிறு தடை தாமத நிலைகளை கொடுத்தாலும் அனுகூலமான பலன்களைத்தரும். தொழில் நிலைகளில் நல்ல சுமுகமான பலன்களுக்கு இடமிருக்கும். ஆகஸ்ட் மாதம் வரை சிறு சிறு மந்தமான பலன்கள் இடையிடையே ஏற்பட்டு மறையும். உடல் நிலையிலும் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் ஏற்பட்டு மறையும். எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமையும் பலன்கள் அனுகூலமான நன்மைகள் தரும். குடும்ப நிலையில் மகிழ்வும் உறவினர் மூலம் நன்மைகளும் ஏற்படும். பண வரவு தேவைகளைப்பூர்த்தி செய்யும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். பெண்களுக்கு மன மகிழ்வும் நன்மைகளும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் முன்னேற்ற பலன் இருக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் சனியின் சஞ்சாரம் பாக்கியஸ்த்தானமாகிய 9ம் இடம் அமைவது அனுகூலமான நன்மைகளைக்கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் அமையும் நிலைகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளில் சுமுகமான பலன்கள் அமையும். வழக்கு விவகாரங்களும் வெற்றிகளைத்தரும் நிலையுண்டு. பொதுவாகவே உதவி செய்யும் மனோ பாவம் உங்களிடம் இருக்கும். ஆனால் அதை பலரும் அறியக்கூடிய நிலையில் செய்வீர்கள். எங்கு எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வீர்கள். வாக்குவாதம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள் நீங்கள். குரு வழிபாடும், சிவன், அம்மன் வழிபாடும் அனுகூலமான பலன் தரும். பொதுவாக இந்த துர்முகி வருடத்திலே உங்களுக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் அமையும்.


ஜோதிட பூஷணம் துன்­னையூர் -
ராம் தேவ­லோ­கேஸ்­வர குருக்கள்
(சார­தா­பீடம் ஜோதிடம்)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல