வியாழன், 9 ஜூன், 2016

பேஸ்புக்கின் பாதுகாப்பு மையம்

பேஸ்புக் தளத்தில் முக்கியமான செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற ஒரு மையம் இயங்குகிறது. இதனை பேஸ்புக் Support inbox என அழைக்கிறது. இதில் நாம் கொடுத்துள்ள புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.



நீங்கள் பேஸ்புக் டூல்கள் மற்றும் அம்சங்கள் குறித்து கடிதங்கள் அனுப்பி இருந்தால், அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறித்த தகவல்களை அறியலாம். இதனைப் பெற, பேஸ்புக் தளத்தில், வலது மேலாக இருக்கும், சிறிய தலைகீழ் அம்புக் குறியில் கிளிக் செய்திடவும்.

இப்போது கிடைக்கும் கீழ் விரி மெனுவில், கீழாக Support inbox என்று இருப்பதில் கிளிக் செய்தால், உடன் சப்போர்ட் தளம் கிடைக்கும்.

இதில் நீங்கள் அளித்துள்ள புகார்கள் அனைத்தும் காட்டப்பட்டு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேஸ்புக் தந்த தகவல்கள் இருக்கும்.

இந்தப் பக்கத்தின் வலது புறத்தில், உதவி மையத்திலிருந்து உதவி பெற, தேடல் கட்டம் ஒன்றும் தரப்பட்டிருக்கும்.

இங்கு பொதுவான பிரச்னைகளுக்கு தீர்வுகளைப் பெறலாம். இதன் கீழாக Family Safety Center என்ற மையத்திற்கான லிங்க் ஒன்று காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், 'குடும்ப பாதுகாப்பு மையத்திற்குச்' செல்ல்லாம். இந்த மையத்தில், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்த என்ன செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்படும்.

இதற்கும் கீழாக, Safety Check என்பதற்கான லிங்க் கிடைக்கும். இதன் மூலம் மோசமான சூழ்நிலையில், ஆபத்து காலங்களில், தங்களின் உற்ற நபர்கள், அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். இதில் கிளிக் செய்து, இதனை எப்படி பயன்படுத்துவது என்பதனை அறியலாம்.

பேஸ்புக் தளத்தில், சமூகம் சார்ந்து எத்தகைய தகவல்களைப் பதியலாம் என அறிய விரும்பினால், Community Standards என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு பேஸ்புக்கில் உள்ள நம் கணக்குகளை, எந்தச் சூழ்நிலைகளில், பேஸ்புக் தற்காலிகமாகத் தடை விதித்திடும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்குப் பிரச்னைகள் இல்லாத போதும், இது போன்ற பிரிவுகளுக்குச் சென்று, இவற்றை அறிந்து கொள்வது நல்லது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல