வியாழன், 9 ஜூன், 2016

உங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்தவர்கள்

பேஸ்புக் தளத்தை நமக்கென உருவாக்கி, நம் நண்பர்களுடன் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாம் நம் பேஸ்புக் கணக்கில் உள்ள தளம் சென்றால், நம் நண்பர்கள் பதிவு செய்தவை எல்லாம் வரிசையாகக் கிடைக்கின்றன. சில வேளைகளில், நம் நண்பர்கள் பெயர்களில் கிளிக் செய்து, அவர்களின் தளம் சென்று, அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அவர்களின் Timeline பக்கத்தைப் பார்க்கிறோம்.



இதே போல நம் பக்கத்தினையும் அவர்கள் பார்த்திருப்பார்கள் அல்லவா? யாரெல்லாம் நம் 'டைம்லைன்' பக்கத்தினைப் பார்த்திருப்பார்கள் என்று அறிய நமக்கு ஆவலாக இருக்கும். அதற்கான வழிமுறைகளைக் கீழே தந்துள்ளேன்.

இது குறித்துத் தேடிய போது, யு ட்யூபில் சில விடியோ படங்களும், இணைய தளங்களில் சில ப்ளக் இன் செயலிகளும் கிடைத்தன. ஆனால், அவை எதுவும் சரியாக இயங்கவில்லை. சில செயலிகள், சில பிரவுசர்களில் மட்டுமே இயங்கின. சில ப்ளக் இன் புரோகிராம்களை பேஸ்புக் நிர்வாகம் தடை செய்தது.

கீழே தந்துள்ள குறிப்புகள், விடியோ படம் ஒன்றில் காட்டப்பட்டு இருந்தன. அவை வெற்றிகரமாக இயங்கியதால், இங்கு தரப்படுகின்றன.

இதற்கு, குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய பிரவுசர்களைப் பயன்படுத்தலாம். நான், குரோம் பிரவுசர் பயன்படுத்தி, இச்செயல்பாடுகள் சரியாக இயங்குவதை உறுதி செய்தேன்.

முதலில், பேஸ்புக் தளம் சென்று, உங்களுடைய பக்கத்தினைத் திறந்து கொள்ளுங்கள்.

உங்கள் தளம் 'டைம்லைன்' பக்கத்தில் இருக்கட்டும். இங்கு இடதுபுறம் காலியாக உள்ள இடத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஏதேனும் லிங்க் இருக்கும் இடம் என்றால், அதில் கிளிக் செய்தவுடன், அந்த குறிப்பிட்ட பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

எனவே, காலியாக உள்ள இடம் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவினைக் கவனிக்கவும்.

இதில் View Page Source என்பதில் கிளிக் செய்திடவும்.

உடன், பல குறியீடுகள் நிறைந்த ஒரு நீளமான பக்கம் ஒன்று, புதிய டேப்பில் திறக்கப்படும்.

இங்கு, உடன் Ctrl + F கீகளை அழுத்தவும்.

தொடர்ந்து, குரோம் பிரவுசர் எனில், வலது பக்கமாக, மேலாக ஒரு நீண்ட கட்டம் காட்டப்படும்.

இது ஒரு தேடல் கட்டம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இதே வகை கட்டம், மொஸில்லா பிரவுசர் எனில், இடது கீழாகக் கிடைக்கும்.

இதில், “initialchat” என மேற்கோள் குறிகள் இல்லாமல் டைப் செய்து எண்டர் தட்டவும்.

உடன், இந்த சொற்கள் உள்ள இடம் வண்ணத்தில் காட்டப்பட்டு, தொடர்ச்சியாக சில எண்கள் காட்டப்படும்.

இந்த எண்களுக்குரியவர்கள் தான், உங்கள் பேஸ்புக் தளத்தின் டைம் லைனைப் பார்த்தவர்கள்.

அடிக்கடி பார்த்தவர்களின் எண் முதலாவதாகக் காட்டப்படும். இந்த எண்ணை அப்படியே கொப்பி பண்ணி, பிரவுசரில் புதிய டேப் ஒன்றைத் திறந்து அதில், faceboom.com/ என முகவரி டைப் செய்து தொடர்ந்து, கொப்பி பண்ணிய எண்ணை ஒட்டி எண்டர் தட்டினால், உங்கள் பேஸ்புக் தளத்தினை அடிக்கடி சென்று பார்த்த நண்பரின் பேஸ்புக் தளப் பக்கம் காட்டப்படும்.

நீங்கள் அமைத்த எண் இருந்த இடத்தில், உங்கள் நண்பரின் பேஸ்புக் பெயர் காட்டப்படும்.

இதே எண்ணை தேடல் கட்டத்தில் அமைத்து எண்டர் தட்டினால், அவர் பார்த்த அனைத்து நாட்களும் காட்டப்படும்.

இதே போல், மற்ற எண்களையும் கொப்பி பண்ணி, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில், faceboom.com/ என டைப் செய்து தொடர்ந்து அந்த எண்ணை டைப் செய்து எண்டர் தட்ட, உங்கள் தளத்தினைப் பார்த்த நண்பர்களைக் காணலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல