நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ மொராக்கோவில் ஆடு மேய்க்கும் சிறுமியாக வேலை பார்த்ததுதான்.
நஜாத் அக்டோபர் 4, 1977 ல் மொராக்கோவின் கிராமப் புறத்தில் பிறந்தார். அங்கு அவருடைய குடும்ப தொழிலில் உதவியாக ஆடுகளை மேய்க்கும் வேலையும் இளம் வயதில் செய்துள்ளார். அப்போது, அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவும் மாட்டார்.
ஆனாலும், புத்திசாதுர்யம், கல்வி கற்கும் ஆர்வம், சமூக நீதி பற்றிய அக்கறை, அவருக்கு இயல்பாகவே இளம் வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது.இருந்தது.
பொருளாதார தேவைக்காக அவருடைய தந்தை பிரான்ஸில் உள்ள அமீன்ஸ் சூப்பர்ப்ஸ் நிறுவனத்தில், கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தார். பிறகு, தன் மகள் நஜாத் உட்பட குடும்பத்தினரை பிரான்ஸுக்கு 1982 ல் அழைத்துக்கொண்டார்.
அதனால், நஜாத்துக்கு பிரான்ஸில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாரீஸில் உள்ள அரசியல் படிப்பு பிரிவுகள் கல்வி நிறுவனத்தில் அரசியல் படித்து, 2002 ல் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற அதே ஆண்டில், பிரான்ஸின் சோசலிச கட்சியிலும் உறுப்பினராக சேர்ந்தார்.
அந்த கட்சியின் சார்பாக, உள்ளூர் வாசிகளிடம் ஜனநாயகத்தை வலியுறுத்துவது, அரசு காட்டும் பாரபட்சங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது. குடிமக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பது, வேலைவாய்ப்பு மற்றும் வீடு தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்க அணுகுவது, போன்ற சிறப்பான கட்சிப்பணிகளால் மக்களிடம் கட்சியை வலுப்படுத்தினார்.
பட்டப்படிப்பின் போது ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக, போரீஸ் வல்லாட் (Borries Vallaud) என்ற பிரான்சை சேர்ந்தவரை ஆகஸ்ட் 27, 2005 ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த கலப்பு மணம் உறவு நம்பிக்கையில் நாட்டுக்கு உரிமையாக அமைந்தது.
அந்த வருடத்திலேயே சோசலிச கட்சியின் ஆலோசகராக பதவி உயர்ந்தார். 2007, பிப்ரவரியில், செகோலின் ராயல் பிரச்சார குழுவில் பெண் பேச்சாளராக சேர்ந்தார்.
மே 16, 2012 ல் பிரான்ஸ் ஜனாதிபதியின் பிராங்கோயிஸ் ஹோலண்டே அமைச்சரவையில் பெண்ணுரிமை அமைச்சராகவும் அரசின் சபாநாயகராகவும் பதவி ஏற்றார்.ஆகஸ்டு 25, 2014 ல் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுக்கு கல்விதுறை அமைச்சரானார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக