ஓர் எளிதான கைரேகை விளக்கம்
வலது கையில் கம்பீரமாக சனிமேடுவரை சென்றிருக்கும் விதிரேகையானது, இடது கையில் துண்டுபட்டுப்போய் அரையும் குறையுமாய்க் காணப்படலாம். இப்படிப்பட்ட கைகளையுடையவரை வாழ்நாள் முழுவதும் சௌகரியமாய்ச் சீவிக்கிறாரென்று சொன்னால் ரேகை சாத்திரமே பொய்யானதாகிவிடும்.
எந்தக் கையில் ரேகை பார்ப்பது? வலக்கையிலா? இடக்கையிலா? ஆணுக்கு வலக்கையும் பெண்ணுக்கு இடக்கையும் பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்களே, உண்மையா என்றெல்லாம் இக்கட்டுரைத் தொடரை வாராவாரம் வாசித்துவரும் வாசக நேயர்களிடமிருந்து கேள்விகள் எழுகின்றன.
என்னைப் பொறுத்தவரையில் இரண்டு கைகளையும் ஒத்திட்டுப்பார்ப்பதே சரியானது என்பேன். வலது இடது என்றல்ல. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி எந்தக்கை எந்த வேலைக்கும் இயல்பாகவே சட்டென்று முந்திக் கொண்டு வருகிறதோ, அதையே பிரதான கையாகக் கொண்டு பார்த்துப்பலன் தெரிந்து கொள்ள வேண்டும். சில ஆண்களும் பெண்களும் எந்த வேலைக்கும் இடது கையையே பாவிக்கின்றனர். இவர்கள் விடயத்தில் முதலில் இடது கையை ஆராய்ந்துவிட்டு பின்னரே வலது கையைப் பார்த்துப் பலனறிய வேண்டும்.
உதாரணமாக வலது கையில் கம்பீரமாக சனிமேடுவரை சென்றிருக்கும் விதிரேகையானது, இடது கையில் துண்டுபட்டுப் போய் அரையும் குறையுமாய்க் காணப்படலாம். இப்படிப்பட்ட ஒன்றுக்கொன்று வித்தியாசமான ரேகை அமைப்பை உடையவரை வாழ்நாள் முழுவதும் செளகரியமாய்ச் சீவிக்கிறாரென்று சொன்னால் ரேகை சாத்திரமே பொய்யானதாகிவிடும். எனவே இடக்கை விதிரேகையில் சிதைவு காணப்படும்
காலகட்டத்தைக் கணக்கிட்டுப் பார்த்து வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலத்தான் இதுவும். நாணயத்தில் தலை அடையாளம் ஒரு பக்கமிருந்து மறுபக்கம் பூ அடையாளம் இல்லாவிட்டால் அது செல்லாது. அதுபோலத்தான் ஒரு கையில் ரேகைகள் சிறப்பாக அமைந்து காணப்பட்டு மறுகையில் அவை சிதைந்தும் துண்டுபட்டும் காணப்பட்டால் அத்தகைய ரேகைகளைக் கொண்டவரின் வாழ்வு எதிர்பார்ப்பது போல் அவ்வளவு சிறப்பாகவோ சௌகரியமாகவோ இராது. இது ரேகை சாத்திரத்தின் விதியாகும்.
இந்தக் கட்டுரையில் பல்வேறு மேடுகளில் உற்பத்தியாகி சனிமேடு நோக்கிப் பயணிக்கும் முக்கியமான விதிரேகையின் பல்வேறு பலன்கள் பற்றிப்பார்ப்போம்.
விதிரேகையானது உள்ளங்கையின் அடிப்புறமிருந்து தொடங்கி, நடுவிரலின் கீழுள்ள சனிமேட்டில் சென்று முடிந்திருந்தால் அத்தகையவர் வசதியான குடும்பமொன்றில் பிறந்து இறப்புவரை சௌகரியமாக வாழ்வதை அது குறிக்கும். இந்த ரேகையானது எவ்வித தடைரேகைகளோ, குறுக்கீடுகளோ, கிளை ரேகைகளோ, தீவுக்குறிகளோ இல்லாமல் கிடுகிடுவென்று சனிமேடுவரை நேராகச் சென்று முடிந்திருந்தால் அத்தகையவர் வாழ்வு பிரச்சினைகளும் எதிர்பாராத திருப்பங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவித அனுபவங்களும் பாடங்களுமற்ற ஓர் உப்புச்சப்பற்ற வாழ்க்கையாக இருக்கும்.
விதிரேகையானது சனிமேட்டில் ஒரு நட்சத்திரக்குறியில் சென்று முடிந்திருந்தால் (B) அத்தகையவரினது வாழ்வின்முடிவு மற்றவர்களால் இகழ்ந்து பேசப்படும் ஒரு முடிவாக அமையும். சிறைத் தண்டனையோடு வாழ்வு முடிவதையோ, அல்லது அந்திம காலத்தில் தலைமறைவாய்த்திரிந்து சிரமதசையில் வாழ்வை முடிப்பதையோ குறிக்கும். பொதுவாக ஒரு கையிலுள்ள எந்த மேட்டிலும் நட்சத்திரக் குறியிருப்பது சிறப்பாகச் சொல்லப்பட்டாலும் சனிமேட்டில் மாத்திரம் அக்குறியிருப்பது துரதிஷ்டமானதாக கொள்ளப்படுகிறது.
கையின் அடிப்புறமிருந்து விதிரேகையானது ஒரு தீவுக்குறியுடன் ஆரம்பித்தால்(C) அத்தகையவரது பிறப்பு மர்மம் நிறைந்ததாயிருக்கும். யாருக்கோ பிறந்து யாரிடமோ வளர்ந்து ஆளாவதை அது குறிக்கும் பெரும்பாலும் அநாதை ஆசிரமங்களில் வளரும் பிள்ளைகள், தத்தெடுத்து வளர்க்கப்படுவோர் கைகளில் இம்மாதிரி அமைப்பு இருக்கும். சீராக மேல் நோக்கிச் சென்று கொண்டிருக்கும். விதிரேகையானது இடையில் இரண்டாகப் பிளந்து அகன்று ஒரு தீவுபோல் தோன்றும் நிலையை தீவுக்குறி என்பர்.
விதிரேகையில் இவ்விதம் தீவுக்குறி தோன்றும் காலகட்டத்தில் இயல்பு வாழ்க்கையிலோ ஜீவனோபாயத்திலோ ஒரு தேக்கநிலை தோன்றுவதற்கான அறிகுறி இது. பொருளாதார வீழ்ச்சி, பதவியிறக்கம் அல்லது பதவியிழப்பு என்று இக்குறி கையிலுள்ளவர் முன்பு எவ்வித அந்தஸ்த்தில் இருந்தாரோ அந்நிலையிலிருந்து படியிறக்கி கடன், கவலை, கஷ்டங்கள், படச் செய்யும். தீவு தோன்றியிருப்பதற்கு அப்பால் ரேகை சீராகி மேல் நோக்கி செல்லுமாக இருந்தால் நிலையை படிப்படியாய்ச் சீராகி வாழ்க்கை முன்போல் உன்னத நிலையை அடையும்.
கையின் அடிப்புறமுள்ள சந்திரமேட்டிலிருந்து விதிரேகை ஆரம்பித்து (D) சனிமேட்டைச் சென்றடைந்தால் அவ்வித ரேகையைக் கொண்டவர் எவ்வித ஆதாரமோ, பின்புலமோ இல்லாமல் தன்னிச்சையாய் முயன்று உழைத்துப் பொருள்தோடி புகழோடு வாழ்வதை அது குறிக்கும். பெரும்பாலும் பொதுவசன ஆதரவு தேவைப்பட்ட நடிப்பு, நாட்டியம், சினிமா, இலக்கியம், விளம்பரம், ஊடகம், அலங்காரம் போன்ற ஏதாவதொரு துறையில் பெயரும் புகழும் பெற்று வாழ்வார். இந்த ரேகையானது சந்திர மேட்டிலிருந்து புறப்படாமல் எந்தவளவுக்கு சந்தரமேட்டின் அடிப்புறத்திலிருந்து உற்பத்தியாகிறதோ அந்தளவுக்கு தன் குடும்பத்தவர்களையோ உற்றார் உறவினர்களையோ தன்னோடு சேர்த்துக்கொண்டு வாழும் கடினமான மனப்போக்கு இத்தகைய ரேகை அமைப்பு உடையவருக்கு இருக்கும். அத்துடன் கையின் குறுக்கே காணப்படும் அவரது புத்திரரேகையானது சந்திரமேட்டில்வளைந்து விடாமல் கையின் மத்தியிலுள்ள செவ்வாய்ச் சமவெளியில் நேராகச் சென்று முடிந்திருந்தால் இந்த மனோபாவம் உறுதிப்படும்.
விதிரேகையானது பெருவிரலின் கீழுள்ள சுக்கிரமேட்டிலிருந்து சனிமேட்டை அடைந்தால் (E) கட்டிய மனைவி அல்லது கணவன் மூலமாக திரண்ட செல்வத்துக்கு அதிபதியாவதை அது குறிக்கும் அல்லது புத்திர சந்தானமற்ற தாய் வழித்தனவந்தவரொருவரின் வாரிசாகி எதிர்பாராமல் சொத்து சுகங்களை அடைவதையும் அது குறிக்கும்.
உள்ளங்கையின் அடிப்புறத்திலிருந்து புறப்படும் நீண்டபூரணமானதொரு விதிரேகையை சுக்கிரமேட்டிலிருந்து புறப்படும் ஒரு ரேகை குறுக்கிட்டுச் சென்றால் (F) வீட்டிலே ராமனாகவும் வெளியிலே கிருஷ்ணனாகவும் வேடம் போட்டு கோபிகைகளுடன் காதல் லீலை புரிவதால் ஏற்படுகிற அவப்பெயரையும் அது காரணமாக செய்தொழிலில் சிரத்தை குறைந்ததால் ஏற்படுகிற நஷ்டத்தையும் அது குறிக்கும்.
விதிரேகையானது புத்திரேகையில் சென்று முட்டி அவ்வளவோடு முடிந்திருந்தால் (G) எத்தொழிலிலோ திடசங்கற்பத்திலோ நிலைத்து நிற்க முடியாத சஞ்சல புத்தியை அது குறிக்கும். எதிலும் தீர்க்கமான உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திண்டாடுவர். தமது தடுமாற்றத்திற்கும் தோல்விகளுக்கும் மற்றவர்களே காரணமென்பர். அது போல விதிரேகை புத்தி ரேகைக்கு மேலேயுள்ள இருதய ரேகையில் சென்று முட்டி அவ்வளவோடு முடிந்திருந்தால் (H) ஆசாபாசங்கள் காதல் தோல்வி போன்ற பல்வேறு வகையான மனத் தாக்கங்களால் ஜீவனோபாயம் அலைக்கழிக்கப்படுவதை அது புலப்படுத்தும் எந்த விடயத்திலும் நின்று பிடிக்க முடியாமல் தாங்கள் தடுமாறுவதைப் போல தம்மைச் சேர்ந்தவர்களையும் தடுமாற வைப்பர்.
விதிரேகையானது ஆயுள் ரேகையிலிருந்து ஒரு கிளையாகத் தோன்றி சனிமேடுவரை செல்லுமாயின் (J) அக்கிளை தோன்றும் காலம்வரை பிறர்தயவில் வாழ்ந்து அதன் பின்னர் தன் முயற்சியால் சுயதொழிலோ பதவியோ பெற்று வாழ்வில் இஸ்திரம் பெறுவதை அது காட்டும். அதேபோல கையின் அடிப்புறத்திலிருந்து புறப்படும் விதிரேகையானது சிறிது தூரம் ஆயுள்ரேகையோடு இணைந்து ஒரே ரேகையாகிச் சென்று பின்னர் விடுபட்டுத் தனித்து சனிமேடு நோக்கிச் சென்றால் (K) ஆயுள் ரேகையோடு அது பிணைந்து சென்ற காலகட்டத்தை இன்னொருவரின் தயவில் வாழ்ந்து தன் உழைப்பையெல்லாம் அவரை உயர்த்துவதில் செலவிட்ட கால கட்டமாகக் கொள்ளவேண்டும்.
ஒரு வியாபாரத்திலோ அன்றேல் அரசியலிலோ தமக்கடுத்த வாரிசாக பெரும் புள்ளியொருவரால் பயிற்றப்படும் விதத்தில் அவர் தயவில் வாழ்ந்த காலமாகும் இதனைக் கொள்ளலாமென கைரேகை மேதையான கைரோ தமது நூலொன்றில் இது பற்றிக் குறிப்பிடுகின்றார்.
விதிரேகையில் நட்சத்திரக் குறிகாணப்பட்டால் அது காணப்படும் காலகட்டத்தை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் கால கட்டமாகக் கொள்ள வேண்டும். அத்தோடு இந்த நட்சத்திரக் குறிகொண்டவர். அவ்வேளை வாழ்வில் உச்சக்கட்டத்தில் இருப்பார். பாகிஸ்தானின் மறைந்த ஜனாதிபதி சியாவுல் ஹக் எகிப்தின் மறைந்த ஜனாதிபதி அன்வர் அல்சதாத் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாச ஆகியோரின் கைகளில் இக் குறிக்களைக் கண்டு அது பற்றி தாம் முன்கூட்டியே எச்சரிக்கைப்படுத்தியதாக இங்கிலாந்தின் உலகப் புகழ் பெற்ற கைரேகை நிபுணர் அலன் டெலன் தமது Life is in our hands என்ற ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
விதி ரோகையின் முடிவில் சனி மேட்டில் ஒரு நட்சத்திரக் குறியும் அதேபோல கையின் அடிப்புறமுள்ள சந்திரமேட்டில் இன்னொரு நட்சத்திரக் குறியும் (L) காணப்பட்டால். அக்குறிகளைக் கையில் கொண்டவர் தம்மை வாட்டும் பிரச்சினைகள், துக்க, துயரங்களுக்கெல்லாம் பரிகாரம் தான் தற்கொலை செய்து கொள்வதில்தான் இருப்பதாக நினைப்பார்.
ஒரு கையில் விதிரேகைகள் அமைந்திருத்தல் சிறப்பான பலன்தரக்கூடியதே. ஆனால் அவ்விருரேகைகளும் வெவ்வேறு மேடுகளை நோக்கிச் சென்றால்தான் நன்மை. இரண்டும் சனிமேட்டையே நோக்கிச் சென்றால் ஒரு விதிரேகை இருந்து அதனால் கிடைக்கும் நன்மைபோல அத்தனை சிறப்பானதாக இராது.
திருவோணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக