ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கட்டுப்பாடாக பேண வேண்டிய உப்பு!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

வீட்­டிற்கு வந்த விருந்­தா­ளியை வர­வேற்று சுக­ந­லன்­களை விசா­ரித்து விட்டு, தேநீர் குடிக்­கி­றீர்­களா? உங்­க­ளுக்குச் சீனி எப்­படி? கூடவா, குறை­யவா போட­வேண்டும்?” என்று கேட்டு உப­ச­ரிக்கும் வழக்கம் நம்­மி­டையே வந்­து­விட்­டது. ஆனால் விருந்து கொடுத்து உப­ச­ரிக்கும் விட­யத்தில், உணவில் உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு உப்புப் போட வேண்­டு­மென்று கேட்­பது நம்­மி­டையே இன்னும் வழக்­கத்­திற்கு வர­வில்லை.


ஆனால் அண்­மையில் உலக உயர் இரத்த அழுத்த நோய் தினத்தை அனுட்­டித்த உலக சுகா­தார ஸ்தாபனம், உலக அளவில் ஏற்­ப­டு­கிற இறப்­பு­க­ளுக்கு முக்­கிய கார­ணி­க­ளி­லொன்­றாக உப்பைக் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. அட, சாதா­ரண உப்­புத்­தானே? அது நமக்கு என்ன செய்து விடப்­போ­கி­றது? என்ற நமது அலட்­சிய மனோ­பா­வத்தின் சட்­டையைப் பிடித்து உலுக்­கு­கி­றது இந்தத் தகவல்!

“நீங்கள் உலகின் உப்­பா­யி­ருக்­கி­றீர்கள்! உப்­பா­னது சார­மற்றுப் போனால் எதனைக் கொண்டு அதனைச் சாரப்­ப­டுத்­து­வது?” என்ற புனித விவி­லி­யத்தின் கேள்­வி­யா­னது, பல­நூறு வரு­டங்­களின் முன்­பி­ருந்தே உப்பு மனி­த­வாழ்வில் இன்­றி­ய­மை­யா­ததாய் உலக பாவ­னையில் இருந்து வரு­வதை உணர்த்­து­கி­றது. ‘உப்­பிட்ட வரை உள்­ள­ளவும் நினை’ என்ற முது­மொழி உப்பை உண­வா­கவே கொள்­கி­றது. அது இல்­லாமல் உணவே கிடை­யாது என்­பதே இதன் அர்த்தம். ‘நீ சோற்றில் உப்பு போட்டுத் தின்­ப­வனா?” என்­பது ஒரு­வரின் ரோஷ உணர்வை, தன்­மா­னத்தை சீண்டும் கேள்­வி­யாகும். இதன் மூல­மா­க­வெல்லாம் உப்பின் மகத்­துவம் நமக்கு உணர்த்­தப்­ப­டு­கி­றது.

எல்­லோ­ரது உடம்­புக்கும் உப்பு தேவை­யா­னது. ஆனால் அது கொஞ்­சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால மனி­தர்கள் உணவில் நிறைய உப்பைச் சேர்த்துக் கொண்­டார்கள். ஆனால் உடல் உழைப்பால் வியர்வை வழி­யாக அதனை வெளி­யேற்­றி­னார்கள். இன்­றைய குளிர்­சா­த­னங்­க­ளுக்­குள்­ள­மைந்த வியர்க்­காத சொகுசு வாழ்க்கை முறையில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஆனால் நவீன உணவு வகைகள் உப்பே கரிக்­காத வகையில் வித­வி­த­மான உப்பு வகை­களை நம்­மு­டலில் திணிக்­கின்­றன என்­கி­றார்கள் மருத்­து­வர்கள்.

நம்­மு­டலில் ஒவ்­வொரு இரத்த அணு­வுக்­குள்ளும் ‘பொட்­டா­சி­யம்’­என்னும் உப்பு உள்­ளது. அணு­வுக்கு வெளியே ‘சோடியம்’ என்ற உப்பும் உள்­ளது. இந்த இரண்­டுமே சம­மான அள­வு­களில் இருந்­தால்தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிக உப்புச் சேர்­வதால் இந்த சமன்­பாடு கெட்டு இரத்தச் சுற்­றோட்டம் சரி­யாக நிக­ழாமல் போகும். இதைத்தான் இரத்த அழுத்தம் என்­கிறோம். இரத்த அழுத்தம் வந்து விட்டால் அது இரு­தய நோய்­க­ளையும், சிறு நீரகப் பிரச்­சி­னை­க­ளையும், பக்­க­வா­தத்­தையும் காலப் போக்கில் கூடவே அழைத்து வந்து விடும். ஆகவே உப்பு விட­யத்தில் கவ­ன­மாக இருக்க வேண்­டி­யது மிக முக்­கியம்.

உப்­பென்றால், நாளாந்தம் ஏதோ சோற்றில் தெளித்­து­விட்டுச் சாப்­பி­டு­வது மட்­டு­மே­யென்று பலரும் நினைக்­கி­றார்கள். அதை மாத்­தி­ர­மல்ல, உண்­மையில் எல்­லா­வித உப்­புக்­க­ளையும் குறைத்துப் பயன்­ப­டுத்த வேண்டும். இன்­றைய பக்கெட் உண­வு­களில் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்­ப­தற்­காக Sodium Bensoate என்ற இர­சா­யனம் சேர்க்­கப்­ப­டு­கி­றது. சுவையைக் கூட்­டு­வ­தற்­காக Monosodium cludomate போன்ற உப்புப் பொருட்கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. பேக்கிங் சோடா, அப்­பச்­சோடா போன்­ற­வை­களும் மிரு­துத்­தன்­மைக்­காக சேர்க்­கப்­ப­டு­கின்­றன. இவை­க­ளெல்லாம் உப்­புத்தான். ஓர் உணவுப் பண்­டத்தில் இருக்க வேண்­டிய உப்பின் அளவை இவை கண்­ணுக்குத் தெரி­யாமல் கூட்­டி­வி­டு­கின்­றன.

சாதா­ர­ண­மாக நாளொன்­றுக்கு ஒரு தேக்­க­ரண்­டி­ய­ளவு, அதா­வது 5 கிராம் உப்­பைத்தான் உண்ண வேண்­டு­மென உலக சுகா­தார ஸ்தாபனம் கூறு­கி­றது. ஆனால் பக்ெகட் உண­வு­க­ளிலும், பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­க­ளிலும் உள்ள உப்பின் அளவு இதை­விடப் பத்­து­ம­டங்கு அதிகம். சாதா­ர­ண­மாக நாம் வீட்டில் தயா­ரிக்கும் 200 மில்­லி­கிராம் சூப்பில் 2 மில்லி கிராம் உப்­புத்தான் இருக்கும். ஆனால், பக்­கட்­டு­களில் விற்­கப்­படும் 200 மில்லி கிராம் சூப்­பு­களில் 20 மில்­லி­கிராம் உப்பு இருக்கும். காரணம் இவற்றில் இருக்கும் பல­வ­கை­யான உப்புச் சேர்க்­கைகள் தான்.

இரத்த அழுத்தம் இருக்கும் பெரும்­பா­லான நோயா­ளிகள் மருத்­து­வர்­களை அணுகி சிகிச்சை பெறு­வது இலங்­கையில், அதுவும் போர் பாதித்­துள்ள வடக்­கிலும் கிழக்­கிலும் குறை­வாக இருப்­ப­தாக ஒரு புள்­ளி­வி­பரம் கூறு­கி­றது. அப்­ப­டியே டாக்­டர்­க­ளிடம் போனாலும் ‘ஊறு­காயைச் சாப்­பி­டாதே’, சாப்­பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்க்­காதே, என்­றுதான் புத்­தி­மதி சொல்­வார்கள். ‘பக்ெகட் உணவைத் திண்­ணாதே’ ‘ரெடிமேட் உண­வு­களைத் தொடாதே’ என்று யாரும் கூறு­வ­தில்லை. உப்புப் பற்­றிய விழிப்­பு­ணர்வு இங்கு குறை­வா­கவே இருக்­கி­றது. அத்­தோடு உப்பின் தரமும் இன்று கவ­லை­ய­ளிக்கும் விதத்தில் இருக்­கி­றது என மருத்­து­வர்கள் மேலும் கூறு­கின்­றனர்.

அந்­நாளில் நாம் பயன்­ப­டுத்­திய கல் உப்பு உண்­மை­யி­லேயே சிறந்­த­தாக இருந்­தது. அதில் நிறம் குறை­வாக இருந்­தாலும் எல்­லா­வித சத்­துக்­களும் நிறைந்­தி­ருந்­தன. இன்று வெள்ளை வெளே­ரென்று எதுவும் இருக்க வேண்­டு­மென்­ப­தற்­காக பெரிய நிறு­வ­னங்கள் விற்கும் தூள் உப்பைப் பயன்­ப­டுத்தி வரு­கிறோம். அவர்கள் கல்­லுப்பை வெள்­ளை­யாக்­கு­வ­தாகக் கூறி அதி­லுள்ள இயற்கைச் சத்­துக்­களை வெளி­யேற்றி விடு­கி­றார்கள். அவை­களில் சத்­து­மில்லை அள­வு­மில்லை என்றும் கவலை தெரி­விக்­கி­றார்கள் மருத்­து­வர்கள்.

ஒரு நாளில் ஒருவர் சாப்­பிட வேண்­டிய உப்பின் அளவு ஐந்து கிராம் என்றால், அந்த அள­வுக்கும் அப்பால் போய் ஒரு சரா­சரி இலங்­கையர் 12 முதல் 18 கிராம் வரை உப்புச் சாப்­பி­டு­கி­றா­ரென்று கூறு­கி­றது பல்­க­லைக்­க­ழக மருத்துவ பீட ஆய்வு ஒன்று. இந்த மாற்றத்திற்கான காரண கர்த்தா Fast-food உணவு!
பக்ெகட் உணவுகள் மூலம் உடம்பில் நாளாந்தம் மறைமுகமாக உப்புச் சேர்வதே விபரீதங்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. உலக மக்கள் இப்போது அருந்தும் உப்பில் 30 சத வீதத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாய்க் குறைக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

உப்புப் பெறாத, உருப்படாத விடயத்திற்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு இனி நாம் உப்புக்காகக் கவலைப்படுவோம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல