ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கழுத்­தையும் கவ­னி­யுங்கள்

கழுத்து என்­பது முகத்­திற்கு அடுத்­த­படி நாம் பரா­ம­ரிக்க வேண்­டிய ஒன்­றாகும். முகம் ஒரு நிற­மா­கவும், கழுத்து ஒரு நிற­மா­கவும் இருந்தால் அழகை கெடுப்­பது போலா­கி­விடும். அதுபோல் இரட்டை நாடி, மரு, சுருக்கம் ஆகி­யவை ஒழுங்­காக பரா­ம­ரிக்­காமல் இருக்கும் போது ஏற்­ப­டு­பவை.


சில­ருக்கு கழுத்து அழ­காக இருந்­தாலும் அதில் கரும்­புள்­ளி­களும், மருக்­களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்­வாறு பிரச்சி­ச­னைகள் ஆரம்­பிக்­கும்­போதே கவ­னித்து சரி செய்தால் பர­வாமல் காத்­தி­டலாம். உங்கள் கழுத்தை சங்கு போல மாற்­றிட சில குறிப்­புகள் இங்கே..

தைெராய்ட் சுரப்­பியை தூண்ட :
கழுத்து அழகை பாதிக்­கும் ­மற்­றொரு காரணம் தைராய்டு சுரப்பி ஒழுங்­கற்ற முறையில் சுரப்­பதால் ஆகும். இதனால் கழுத்து வீங்கி விடும்.
இச்­சு­ரப்­பியை தூண்டும் வகையில் கழுத்தை மேலும், கீழும் பக்­க­வாட்­டங்­க­ளிலும் மெல்ல சாய்த்தல் வேண்டும். இப்­படி பல­முறை செய்­யலாம். தலையை அப்­ப­டியே வலது புற­மாக 10 முறையும் செய்­யலாம்.

இதனால் தைெராய்ட் சுரப்பி தூண்­டப்­பட்டு நன்­றாக வேலை செய்யும். கழுத்­திலும் சதைகள் ஏற்­ப­டாது. அதோடு தைெராய்ட் பிரச்சி­னையை மருத்­து­வ­ரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்­ளுங்கள்.

சிக்­கென்ற கழுத்தை பெற :
வெது வெதுப்­பான நீரில் துணி யை நனைத்து கழுத்தில் சுற்றி போடுங்கள். சூடு ஆறி­யதும் மீண்டும் வெது­வெப்­பான நீரில் நனைத்து கழுத்தில் சுற்றி போடுங்கள். 10 நிமி­டங்கள் கழித்து துண்டை எடுத்து விடலாம்.. தினமும் ஒரு வேளை இப்­படி செய்­து­வர அழ­கிய கழுத்து கிடைக்கும்.

உணவு :
பச்சைக் காய்­க­றிகள், பழச்­சாறு, சாலட் வகை­களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்­ளுங்கள். இவை கழுத்தில் உண்­டாகும் தொய்வை தடுக்கும்.
கவரிங்க் நகை­களை போட­வேண்டாம் :

சில­ருக்கு கவரிங் நகை அணி­வதால் ஒவ்­வாமை வரும் வாய்ப்பு உண்டு அல்­லது சரு­மத்தில் கருமை ஏற்­படும். கழுத்தில் கருமை ஏற்­பட்டால் எளிதில் போகாது. ஆகவே, கவரிங் மற்றும் அலர்ஜி உண்­டாக்கும் மட்­ட­மான நகை­களை போடா­தீர்கள்.

தொங்கும் சதையை குறைக்க :
முல்­தானி மெட்டி, பன்னீர் மற்றும் கிளி­சரின் கலந்து கழு த்தில் தடவி 30 நிமிடம் பொறுத்து சுத்தம் செய்­வதால் கழுத்து சுருக்கம் இருக்­காது. மேலும், பாலாடை குங்­குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழு­வினால் சிறு­சிறு கரும்­புள்­ளிகள் மறையும்

கழுத்து சுருக்­கங்கள் மறைய :
முட்டை ஒன்றின் வெள்ளைக் கருவோடு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் பொறுத்து கழுவினால் சுருக்கங்கள் விழுவதை தவிர்க்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல