வெள்ளி, 2 செப்டம்பர், 2016

‘டெத் நூடுல்ஸ்’ ‘death noodles’ (காணொளி, படங்கள் இணைப்பு)

பிரிட்டனைச் சேர்ந்த பென் சுமடிநிரியா (22) சமையல் கலைஞராக இருக்கிறார். இந்தோனேஷியாவில் ‘டெத் நூடுல்ஸ்’ என்ற சவாலை ஏற்றார். மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கு அதிகக் காரம் கொண்ட நூடுல்ஸ் இது.


பென், சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது. நாவில் இருந்து நீர் வடிந்தது. கண்ணீர் பெருகியது. கதறினார். “இது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஐஸ்க்ரீம், ஜூஸ், ஸ்வீட் என்று எது சாப்பிட்டும் வாய் எரிச்சல் நிற்கவே இல்லை.

உடல் முழுவதும் எரிந்தது போலிருந்தது. சில நிமிடங்கள் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டது. நான் எத்தனையோ உணவு சவால்களில் கலந்துகொண்டிருக்கிறேன். இது மாதிரியான கடினமான சவால் எதுவும் இல்லை. இங்குள்ள சிலர், முழு நூடுல்ஸையும் சாப்பிட்டு, சவாலில் வெற்றியடைந்திருப்பதாக சொல்கிறார்கள். என்னால் நம்பவே முடியவில்லை!” என்கிறார் பென்.

டெத் நூடுல்ஸ் என்று சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்!










Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல