பகுதி - 3
வவுனியா
விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு புதிய தகவjeyakumari issusல் வவுனியாவிலிருந்து கிளம்பியது. காவலில் உள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, வவுனியா சிறிமா நகரிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. தாய்.தந்தை மற்றும் ஆறு மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று அங்கிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வவுனியாவில் வசித்து வந்தவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அந்தப் பகுதிக்கு அந்நியர்களாக இருந்தார்கள். அந்த பிள்ளைகள் இரண்டையும் விட்டு வர வேறு யாரும் இல்லாததால் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டார்கள்.






