செவ்வாய், 20 மே, 2014

ஏனய்யா வயிறு பத்தி எரியிறியள்?

இப்ப நீங்கள் ஆட்சேர்த்துக் காசெடுக்க முடியாமலிருக்கோ...!

நாடும் நாமும் படுகிற பாட்டை நினைச்சால் விசர்தான் வரும்.

மன்னிக்கோணும், நாட்டையும் நம்மையும் ஒவ்வொருத்தனும் படுத்திற பாட்டை நினைச்சால் விசரோட கவலையும் கலந்தெல்லோ வருது.



அவனவனுக்கெண்டு கட்சி இருக்கு. கொள்கை இருக்கு. நல்லதோ கெட்டதோ கோட்பாடுகள் இருக்கு. ஆளணி இருக்கு. சின்னதாயோ பெரிசாயோ ஆதரவாளர் படையுண்டு. அப்பிடியே சனங்களின்ரை காதிலயோ மூக்கிலயோ பூவை வைச்சுத் தலையைச் சுத்தியடிச்சு ஒரு மாதிரி ஏதோ ஒரு பதவியையும் பிடிச்சிடுறான்கள்.

ஒரு மண்ணும் இல்லை, மசிரும் இல்லை.

ஆனால், அவனவன் எங்களை வைச்சு எப்பிடியெல்லாமோ பிழைச்சுக்கொண்டு போக நாங்கள் அப்பிடியே இழுபட்டுக்கொண்டு போறமே...

இதை நினைக்கத்தான் விசராக் கிடக்கு.

என்னமாதிரியான கதைகளை எல்லாம் விடுறாங்கள்?

ஜெனிவாத்தீர்மானம் ஏதோ எல்லாம் செய்யும் எண்டாங்கள்..! இப்ப ஒண்டையும் காணேல்லயே?

அமெரிக்கப் பிரேரணை எண்டாங்கள்....! இப்ப அந்தப் பேச்சையே எடுக்கிறாங்களில்லை..?

நவனீதம்பிள்ளை அம்மா எதோ நம்மளுக்குப் புரியாணி போடப்போறா எண்டும், மகிந்தருக்குச் சம்பல் அரைக்கப்போறா எண்டும் சொன்னாங்கள்.

ஆனால், இப்ப பார்த்தால் எங்களுக்குச் சொதி கூடக்கிடைக்கிற மாதிரித் தெரியேல்ல.

இப்பிடியே எதையாவது சொல்லி அந்தந்த நேர காலத்தைச் சமாளிச்சிடுறாங்கள்.

இப்ப தெரிவுக்குழு ஏமாத்துது. அரசாங்கத்தோட இணங்க முடியாது. சர்வதேச சமூகத்தைத் தவிர வேறு ஆரோடயும் பேசத்தயாரில்லை. மூண்டாந்தரப்புத்தான் தேவை எண்டு பழைய பல்லவியைப் பாடத்தொடங்கீட்டாங்கள்.

இதுக்கெண்டே - இதுகளைச் சொல்லிறதுக்கெண்டே ஒரு பேச்சாளர் இருக்கிறார்.

அவர்தான் சு. பி எண்ட சுரேமச்சந்திரன்.

வலு சோக்கான ஆள். அந்த மாதிரிக் கதைவிடுவார். முழுப்பூசினிக்காயைச் சோத்துக்குள்ள மட்டுமில்லை பாதிப்பருப்புக்குள்ளையே மறைக்கக் கூடிய ஆள்.

சிலவேளை அவர் சிங்கம்போல சிலிர்த்துக்கொண்டு அறிக்கை விடுகிறதைப் பார்த்தால் உங்களுக்கு மட்டுமில்ல, இந்த உலகத்துக்கே சிரிப்பு வரும்.

அந்த நாளில புலிகள் இவரைத்தேடேக்க மச்சான் இந்தியன் ஆமியின்ரை பாதுகாப்பில இருந்தார். அப்பிடி இந்தியன் ஆமியின்ரை தயவில இருக்கிறதெண்டால், அவங்கள் சும்மா விடுவாங்களா...?

இவரை வைச்சே கன வேலைகளைச் செய்யப் பார்த்தாங்கள்.

இவரும் இந்தியன் ஆமியோட சேர்ந்து கனவிளையாட்டுக்காட்டினார். அப்பிடியே ஆள் மண்டையில போடுறதில பெரிய கில்லாடி எண்டாகினார். அதோட 'தொண்டர் படை' எண்டு ஒரு குண்டர் படையை இந்தியன் ஆமிக்கு உதவியாகச் சேர்க்கப்போய், தெருவில, பள்ளிக்கூடத்தில எண்டு கண்ட நிண்ட இடத்தில எல்லாம் சின்னஞ்சிறிய குஞ்சுகுருமான்களையெல்லாம் பிடிச்சு கட்டாயப் பயிற்சி குடுத்துப் படைதிரட்டினார்.

பிறகு அந்தப் பிஞ்சுகளைப் புலிகள் பிடிச்சுப்போட்டுத்தள்ள இந்தச் சிங்கம் அப்பிடியே தலைமறைவாகீட்டுது. மன்னிக்கவும் இந்தச் சிங்கத்தின்ரை 'மண்டை' மறைஞ்சு போச்சு.

பிறகு கொழும்பில வந்து தலையைக்காட்டினார். அங்க நிண்டுகொண்டும் இப்பிடித்தான் தொண்டர் படைக்கோ குண்டர்படைக்கோ சப்ளை பண்ணியதாகக் கேள்வி.

இவரைப்போலத்தான் செல்வம் அடைக்கலநாதன், வல்வெட்டித்துறைச் சீமான் சிவாஜிலிங்கம், சித்தார்த்தன் எல்லாரும் கொழும்பில நிண்டு கொண்டு இலங்கை அரசுக்கு தொண்டர்படைக்கு ஆள் குடுத்துக்கொண்டிருந்தவை.

இப்ப இவை என்ன சொல்லுகினம் தெரியுமா?

இலங்கை அரசாங்கம் தொண்டர் படைக்கும் இராணுவத்துக்கும் ஆட்சேர்க்குதாம்?

எல்லா உத்தியோகத்துக்கும் இனவிகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பைக் குடுக்கோணும் எண்டால், ஆமி, பொலிஸ், நேவி, ஏயார் போஸ் எல்லாத்திலயும் அப்பிடி ஒரு நிலைமையைக் கொண்டு வரத்தானே வேணும்.

இதில அரசாங்கமும் ஏமாத்திச் சுத்துமாத்துப் பண்ணக் கூடாது. ஏதோ தொட்டுக்கொள்ள ஊறுகாய் எண்ட மாதிரி தமிழ்ப்பெடியளை சாட்டுக்குப் படையில சேர்க்க முடியாது.

அப்பிடிச் சேர்க்கிறதெண்டால், அதுக்கு ஒழுங்கான முறை, சட்டதிட்டங்கள், சரியான மதிப்பு – மரியாதை எல்லாம் இருக்கோணும். அதை அரசாங்கத்தோட நிக்கிற கட்சிகள், அமைச்சர் தேவானந்தா போன்றோர் உறுதிப்படுத்திக்கொள்ள வேணும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நாம பேச வந்த விசயத்தைப் பார்ப்பம்.

இந்தத் தொண்டர் படைக்கு முந்தித் தாங்களே ஆட்சேர்த்ததைப்போல இப்பவும் செய்ய எண்ணுகினமோ! இல்லாட்டிக்கு அந்த நாளில தொண்டர் படைக்கு எண்டு தலைகளைக் குடுத்து அந்தத் தலைகளுக்குக் காசெடுத்த மாதிரி இப்பவும் விளையாடத்தான் பாக்கினமோ..

அதாலதான் இந்த வயிற்றுப்பொருமலோ....

இதையெல்லாம் எப்பதான் எங்கட சனத்துக்கு விளங்கப்போகுதோ...

-வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல