செவ்வாய், 20 மே, 2014

யாழ்ப்பாண அரசர் - அரச உயர் மட்டக் குழு அதிர்ச்சி சந்திப்பு!

The Arya Chakravarti Dynasty

பழைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்தவரும், நல்லூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த சங்கிலி மன்னனின் வாரிசுமான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா வட மாகாண ஆளுனராக செயற்படுகின்ற விருப்பத்தை அரசுக்கு வெளிப்படுத்தி உள்ளார்.



ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடைகின்றது. இராணுவ பின்னணி அற்ற ஒருவரே வட மாகாண ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.
Raja Remigius Kanagarajah

இந்நிலையிலேயே அரசு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கின்ற பட்சத்தில் நாட்டுக்கு திரும்பி வருகின்றமைக்கும், மக்கள் சேவையில் ஈடுபடுகின்றமைக்கும் எப்போதும் தயாராக உள்ளார் என்று இவர் தெரிவித்து உள்ளார்.

ராஜா ரெமிஜியஸ் கனகராஜா நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். அரச பாரம்பரியங்களை பின்பற்றி வருகின்றார். உலக்த்தில் உள்ள அரச குடும்பங்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணி வருகின்றார். இவர் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவத்திகள் வம்சத்தில் வந்த முடிக்குரிய அரசர்தான் என்று உலகின் அரச குடும்பத்தினராலும், நாட்டுத் தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளார்.

இலங்கை அரசும் இவரை புறக்கணித்து விட முடியாத நிலையில் உள்ளது. கொழும்பில் சார்க் மாநாடு இடம்பெற்றபோது இவரை வரவழைக்கின்ற முயற்சிகள் அரச தரப்பில் இடம்பெற்றன. ஆயினும் காலத்தின் போதாமை காரணமாக இம்முயற்சிகள் தோல்வி அடைந்தன.

Raja Remigius Kanagarajah

இந்நிலையில் கடந்த மாதம் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ண நெதர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்று இருக்கின்றார். அப்போது ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை இலங்கைத் தூதரகத்தில் சந்தித்து பேசி உள்ளார்.

நாட்டின் அரசியல், சமூக நிலைமைகள் குறித்து குறிப்பாக வடக்கின் நிலைவரம் குறித்து பேசி உள்ளார்கள்.

அப்போதே வட மாகாண ஆளுனராக செயற்படுகின்றமைக்கான நாட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா. மத்திய அரசுக்கும் வட மாகாண அரசுக்கும் இடையிலான தூதுவராக இவரால் செயற்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல