செவ்வாய், 23 டிசம்பர், 2014
திங்கள், 22 டிசம்பர், 2014
ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்!!!
நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள். ஆம், நீங்கள் எவ்வளவு தான் அன்னியோனியமாக இருந்தாலும் கூட அவரிடம் பேச கூடாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்
யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பால் சர்ச்சை!!
சென்னை: யாழ்ப்பாணம் சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, சர்ச்சைக்குரிய டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திடீரென சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரையும் சந்தித்து பேசினார். முன்னதாக பாரதிராஜா- டக்ளஸ் தேவானாந்தா இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
Labels:
சினிமா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சாதியக் கனவுகள்
ராமாயணம் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எண்பதுகளில் நான் பள்ளி மாணவன். எங்கள் வீட்டில் அப்போது டிவி வாங்கியிருக்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்த ஒருவரைத் தவிர எங்கள் தெருவில் மற்ற யார் வீட்டிலும் டிவி இல்லை. அவர் வீட்டில் ராமாயணம் பார்க்க வேண்டும் என்றால் அவருக்கு வயல் வேலையில் சிறிய சிறிய உதவிகள் செய்ய வேண்டும். அதனால் சிறுவர்கள் அனைவரும் ராமாயணம் பார்க்க அக்ரஹாரத்துக்குத்தான் போவோம். பியூனின் மகனும் எங்களோடு வந்துவிடுவான்.
Labels:
பலதும் பத்தும்
தாய்மையின் சிறப்பு
இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
Labels:
பலதும் பத்தும்
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
லிங்கா நஷ்டம்: ரஜினியிடம் புகார் தரப் போகிறோம், பாதுகாப்பு தேவை - கமிஷனரிடம் விநியோகஸ்தர்கள் மனு
சென்னை: லிங்கா படம் சரியாக ஓடாததால் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
Labels:
சினிமா
துப்பாக்கி முனையில் துடிதுடித்து உயிரிழந்த இளந்தளிர்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர உணவகத்தில் 50 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு தடுத் துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் போ ராட்டத்தின் மத்தியில் இரண்டு உயிரிழப்புக்களுடன் 16 மணிநேர போராட்டத்தின் பின் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாடகத்தினால் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து உலக மக்கள் விடுபடுவதற்கு முன்னர் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 132க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உட்பட 145 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








