ஞாயிறு, 21 டிசம்பர், 2014

துப்பாக்கி முனையில் துடிதுடித்து உயிரிழந்த இளந்தளிர்கள்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகர உண­வ­கத்தில் 50 பேர் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்டு தடுத்­ து­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடும் போ ராட்­டத்தின் மத்­தியில் இரண்டு உயி­ரி­ழப்­புக்­க­ளுடன் 16 மணி­நேர போராட்­டத்தின் பின் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நாட­கத்­தினால் உல­கமே அதிர்ச்­சியில் உறைந்து போயி­ருந்­தது. அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து உலக மக்கள் விடு­ப­டு­வ­தற்கு முன்னர் பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்ள மற்­று­மொரு துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 132க்கும் மேற்­பட்ட இளம் மாண­வர்கள் உட்­பட 145 பேர் கொடூ­ர­மாகப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது உல­கத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.



உலகில் பல நாடு­களில் உள்­நாட்டு யுத்­தத்­தினால் மக்கள் கொல்­லப்­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில் கடந்த 16ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாகிஸ்­தானில் பெஷாவர் நகரில் துப்­பாக்கிதாரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டில் பாட­சாலை மாண­வர்கள், சிறு­வர்கள், ஆசி­ரி­யர்கள் என சுமார் 145 பேர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பாகிஸ்­தானில் பெஷாவர் நகரில் இரா­ணு­வத்­தி­னரால் நடத்­தப்­பட்­டு­வரும் பெஷாவார். பாட­சா­லையில் நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர் கள் படித்து வரு­கின்­றனர். இரா­ணு­வத்­தி­னரின் பிள்­ளைகள் கல்­வி­கற்கும் மேற்­படி பாட­சாலை நகரின் மையப் பகு­தியில் அமைந்­துள்­ளது..

சம்­ப­வத்­தன்று வழக்­கம்­போ­லவே வீட்­டி­லி­ருந்து கிளம்­பிய மாண­வர்­க­ளுக்கு 'அதுதான் தங்­க­ளது பெற்­றோரை கடை­சி­யாக சந்­திக்கும் நாள்' என தெரி­யாது. பெற்­றோர்­க­ளுக்கு விடை­கொ­டுத்­து­விட்டு பரீட்சை எழுத ஆர்­வத்­துடன் சென்­றனர். பரீட்சை நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தது. அந்த நேரத்தில் பாட­சா­லையில் சுமார் 500 மாண­வர்­களும், ஆசி­ரி­யர்­களும் இருந்­துள்­ளனர். நேரம் காலை 10.30 மணி இருக்கும். இரா­ணுவ சீருடை அணிந்­தி­ருந்த ஆறு தலிபான் துப்­பா­பக்கிதாரிகள் பாட­சா­லையின் உள்ளே நுழைந்­தனர்.

அவர்­க­ளி­டம்­ இ­யந்­திரத் துப்­பாக்­கி­களும் கைக்­குண்­டு­களும், அதி­ந­வீன ஆயு­தங்­களும் இருந்­தன. அப்­போது, சற்றும் எதிர்­பா­ராத வித­மாக மாண­வர்­களை நோக்கி கண்­மூ­டித்­த­ன­மாக அவர்கள் துப்­பாக்­கிப்­ பி­ர­யோ­கத்தை மேற்­கொண்­டனர்.

துப்­பாக்­கிச்­சூட்டு சத்தம் கேட்­டதும் பத­றிப் ­போன ஆசி­ரி­யர்கள் வகுப்­ப­றை­க­ளுக்குள் மாண­வர்­களை உட்­பு­ற­மாக வைத்து கத­வைப்­பூட்டி வைத்­தனர். ஒவ்­வொரு வகுப்­ப­றை­யாக தேடித் தேடிச் சென்ற துப்­பாக்­கி­தா­ரிகள் சின்­னஞ்­சிறு குழந்­தைகள் என்று கூடப் பார்க்­காமல் சுட்டுக் கொன்­றனர்.

மாண­வர்­களை உட­ன­டி­யாக தரையில் படுத்­துக்­கொள்­ளும்­படி ஆசி­ரி­யர்கள் அறி­வு­றுத்­தினர். பல மாண­வர்கள் பள்­ளிக்­கூ­டத்தின் பின்­புற வாயில் வழி­யாக வெளி­யே­றி­னார்கள். இது குறித்து தகவல் அறிந்த பொலி­ஸாரும், பாது­காப்பு படை­யினரும் அங்கு விரைந்து சென்று சம்­பவ இடத்தை சுற்றி வளைத்­தனர். பொலி­ஸாரும் தாக்­குதல் நடத்­தினர். இந்நிலையில் பள்­ளியில் தாக்­குதல் நடத்­திய தீவி­ர­வா­தி­க ளும் சுட்­டுக்­கொல்லப் ­பட்­டனர். பாடசாலை இரா­ணு­வத்தின் கட்­டுப்­ பாட்டின் கீழ் கொண்­டு ­வ­ரப்­பட்­டுள்­ள­தா­க வும் அந்த நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. இருந்தும் பய­னில்லை. துப்பாக்­கி­தா­ரிகள் நடத்­திய தாக்­கு­தலில் 132க்கும் மேற்­பட்ட மாணவ -மாண­விகள் கொடூ­ர­மாக கொல்­லப்­பட்டனர். மேலும் ஒன்­பது ஆசி­ரியர், அலு­வ­ லர்கள் உட்­பட 145 பேர் கொல்­லப்­பட்­டனர். 125க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் படு­கா­ய­ம­டைந்­தனர்.

கொல்­லப்­பட்­ட­வர்­களில் அதி­க­மானோர் 5வயது முதல் 10 வய­திற்­குட்­பட்­ட­வர்­கள்தான் என்­பது பெரும் சோக­மான தக­வ­லாகும். 'தாங்கள் எதற்­காக கொல்­லப்­ப­டு­கிறோம்' என்­ப­தைப்­பற்றி அறி­யா­ம­லேயே அவர்கள் மர­ண த்தை தழு­வி­னார்கள். பிஞ்­சு­களின் தலை­யிலும், நெஞ்­சிலும், வயிற்­றுப்­ப­கு­தி­யிலும் சுட்டுத் தங்­களின் வெறியைத் தணித்­துக்­கொண்­டனர் துப்­பாக்­கி­தா­ரிகள்.

அது­மட்­டு­மன்றி, துப்­பாக்­கி­தா­ரி­களில் ஒருவன் தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக இருந்­துள்ளான். இவன் குண்­டு­களை உடலில் பொருத்­தி­யி­ரு­த­துடன் அவன் 60 இற்கும் மேற்­பட்ட மாண­வர்கள் இருந்த வகுப்­ப­றைக்குள் தற்­கொலை தாக்­கு­தலை நடத்தி தானும் உயி­ரி­ழந்தான். மிகு­தி­யாக இருந்த துப்­பாக்­கி­தா­ரிகள் ஏனைய மாணவ மாண­விகள் மற்றும் ஆசி­ரி­யர்கள், ஊழி­யர்­கள்­மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

படு­கா­ய­ம­டைந்த 125க்கும் மேற்­பட்டோர் மீட்­கப்­பட்டு பல்­வேறு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்டு, தீவிர சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கி­றது. ஆனாலும் அதில் பலர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளனர். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­டுள்ள மாண­வர்­க­ளிடம் இது தொடர்­பாக வின­விய போது "துப்­பாக்­கி­தா­ரிகள் அர­பியில் பேசி­ய­தா­கவும் அவர்கள் பார்ப்­ப­தற்கு வெளி­நாட்­ட­வர்கள் போன்று இருந்­த­தா­கவும்" தெரி­வித்­துள்­ளனர்.

பாகிஸ்­தானைச் சேர்ந்த "தெஹ்ரீக் இ தாலி பான்" என்ற அமைப்பு இத்­தாக்­கு­த­லுக்கு தாமே காரணம் என பொறுப்­பேற்­றுள்­ளது. இது­பற்றி அந்த இயக்­கத்தின் செய்­தித்­தொ­டர்­பாளர் தமது தற்­கொ­லைப்­ப­டை­யினரே இந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக தெரி­வித்­தி­ருந்­த­தாக அந்த நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

இத்­தாக்­கு­தலை நடத்த காரணம் என்ன? எதற்­காக மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது? இதனால் அவர்­க­ளுக்கு கிடைக்­கப்­போ­வது என்ன? என பல கேள்­விகள் எழுந்­தாலும் அதற்கு செய்தித் தொடர்­பாளர் அளித்த பதில் "தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக பாகிஸ்தான் இரா­ணுவம் நடத்தி வரும் அதி­ரடித் தாக்­கு­த­லுக்குப் பதி­ல­டி­யா­கவே இந்த தாக்­கு­தலை நடத்­தினோம், எங்கள் வீடு­க­ளுக்குள் புகுந்து பெண்கள், குழந்­தை­களை சுட்­டுத்­தள்ளும் இரா­ணுவம் எங்­க­ளது வலியை உணர்ந்­துக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்தத் தாக்­கு­தலை நடத்­தினோம்" என்று சற்றும் மனச்­சாட்­சி­யின்றி கூறு­கின்றார்.

மேலும் தலி­பான்­களின் செய்தித் தொடர்­பாளர் முக­மது கொர­சானி கூறு­கையில், இந்த தாக்­குதல் வெறும் ட்ரெய்லர் தான். இனி இது போன்று பல்­வேறு தாக்­கு­தல்கள் நடக்கும் என்று அறி­வித்­துள்ளார்.

சம்­ப­வத்தில் உயிர்­தப்பி பாரிய மன அழுத்­தத்­திற்கு ஆளாகிய ஒரு மாணவன் கூறு­கையில், "வகுப்­ப­றையில் தீவி­ர­வா­திகள் புகுந்து சுடத் தொடங்­கியபோது மேஜைக்கு அடியில் ஒடுங்­கியபடி உயிரை கையில் பிடித்­துக்­கொண்­டி­ருந்தோம். என் கண் முன்னே என் நண்­பர்­களை சுட்டு சாய்த்­தார்கள். நடுங்­கி­ய­ப­டியே உயிரை கையில் பிடித்­துக்­கொண்டு காத்­தி­ருந்தோம். தப்­பி­யோ­டி­ய­வர்­களைப் பார்த்து தீவி­ர­வா­திகள் கொன்று குவித்­தனர்.

என் நண்­பர்கள் இரத்தம் சொட்ட உயிரை விட்­டது இன்­னமும் கண் முன் நிற்­கி­றது. நாம் இறைவன் அரு­ளினால் காப்­பாற்­றப்­பட்டோம் என்று கண்­களில் அச்சம் வில­காமல் நடந்த சம்­ப­வத்தை விவ­ரித்தான். ஆனால் பெற்­றோர்­களோ "காலையில் பரீட்­சைக்கு சென்ற தம் பிள்­ளைகள் சட­ல­மா­கவே திரும்­பி­வந்­தனர்" என்று கதறி அழு­கின்­றனர். இவை காலத்தால் அழி­யாத வடுக்­க­ளாக அவர்­களின் மனதில் என்­றுமே பதிந்­தி­ருக்கும்.

நடந்த சம்­ப­வத்தை ஊட­கங்­களில் பார்த்தும் செய்­தி­யாக படிக்கும் போதே உலகம் முழு­வதும் உள்ள பெற்­றோர்­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் துப்­பாக்கி தாரி­களின் வெறி­யாட்­டத்தை நேரில்­பார்த்த மாண­வர்­க­ளுக்கு எப்­படி இருந்­தி­ருக்கும் என்­ப­தற்கு மாண­வர்­களின் இந்த அதிர்ச்­சி­யான நடுக்­க­மான குரல்­களும் பிள்­ளை­களை இழந்த பெற்­றோரின் அழு குர­ல்களுமே சாட்­சி­யங்களாகும்.

பெஷா­வரில் நூற்­றுக்­க­ணக்­கான பிள்­ளைகள் உயி­ரி­ழந்த சம்­பவத்தைக் கேள்­விப்­பட்­ட­வுடன் பாதிக்­கப்­பட்ட பெற்­றோர்­க­ளுக்கு ஆறுதல் கூற ஏரா­ள­மானோர் பெஷாவர் நோக்கி சென்­றனர். மெழு­வர்த்­திகள் ஏற்றி வைத்து பலரும் மாண­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தினர்.

உலக நாடுகள் பல­வற்­றிலும் கொல்­லப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு மெழு­கு­வர்த்தி ஏற்றப்பட்டு அனு­தாபம் தெரி­விக்­கப்­பட்­டது. பாகிஸ்­தானில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த சம்­பவம் குறித்து கருத்து கூறி­யுள்ள ஐ.நா.பொதுச்­செ­ய­லாளர் பான் கீ மூன், இந்த கொடூர செயல். கடு­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­யது. இது­போன்ற கொடிய செய­லுக்கு எந்­த­வித நியாத்­தையும் கற்­பிக்­க­மு­டி­யாது. இது­போன்ற பயங்­க­ர­வா­தத்­திற்கு எந்த பிரச்­சி­னை­யையும் கார­ண­மாக கூற­மு­டி­யாது. பாடம் கற்­றுக்­கொண்­டி­ருக்கும் தற்­காப்­பில்­லாத பிள்­ளைகள் மீது தாக்­குதல் நடத்­து­வது கோழைத்­த­ன­மான, கொடிய மனி­தா­பி­மா­ன­மற்ற செயல், ஒரு போர் நடை­பெறும் போதும் கூட குழந்­தைகள் முதி­ய­வர்­களை கொல்­லக்­கூ­டாது என்­ப­துதான் விதி. அவர்­க­ளுக்கு பாது­காப்பு தர­வேண்டும். ஆனால் கல்­நெஞ்சம் மிக்க உணர்ச்­சி­க­ளற்ற இந்த கொடி­ய­வர்கள் நடத்­திய தாக்­கு­தலில் இதை­யெல்லாம் எதிர்­பார்க்க முடி­யாது'' என்றார்.

இந்­தி­யாவில் பாட­சா­லை­களில் மாண­வர்கள் மெழு­குவர்த்­தி ஏற்றி அஞ்­சலி செலுத்­தி­ய­துடன் உயி­ரிழந்த மாண­வர்­க­ளுக்கு பிரார்த்­த­னையும் செய்­தனர்.

இதே­வேளை இந்­தத்­தாக்­கு­த­லுக்கு இந்­தி­யாவே காரணம் என்று பாகிஸ்­தா­னி­லுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறு­வு­ன­ரான ஹபீஸ் சயீத் தெரி­வித்­துள்ளார். இந்தத் தாக்­கு­த­லுக்கு தாமே பொறுப்பு என்று தெஹிரீத் இ தலிபான் அமைப்பு உரிமை கோரி­யுள்­ள­போதும் இந்­தி­யாவே காரணம் என ஹபீஸ் சயீத் கூறி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனா­தி­பதி பர் வேஸ் முஷா­ரபும் கூட இந்தத் தாக்குதலின் மூளையாக இந்தியா செயற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செழியன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல