திங்கள், 8 பிப்ரவரி, 2010

மருத்துவக்குறிப்புகள்

இதய நோயைத் தவிர்க்க: உணவில் தினம் கோதுமை அல்லது சோளம் சேர வேண்டும். சோயா பீன்ஸ் சேருவதும் நல்லது. இவற்றில் உள்ள செலினியம் என்ற தாது உப்பு இதயத் தசைகளை சிறப்பாகப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுத்துவிடுகிறது. தினம் குடிப்பவர்களுக்கு உடலில் செலினியம் உப்பு எப்போதும் பற்றாக்குறையிலேயே இருக்கும். இவர்கள் மேற்கண்ட உணவு வகைகளுடன் மீனையும் சேர்த்து வரவேண்டும்.

வையின் நல்லது

பியர், பிரண்டி, விஸ்கி இவற்றைவிட வையின் நல்லது என்று நியூயோர்க் ஸ்டேட் பல்கலைக்கழகம் தன் ஆய்வில் தெரிவிக்கிறது.
35 வயது தல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பசோதிக்கப்பட்டது. இதில் 35 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பசோதிக் கப்பட்டது. இதில் செல்களைக் கெடுத்துச் சீரழிக்கும் "தியோபார் பிட்யீக் ஆசிட் யாக்டிவ், சப்ஸ்டென்சன்ஸ்' என்ற பொருள், வையின் குடிக்கிறவர்களின் இரத்தத்தில் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தப் பொருள் அதிகமாக அதிகமாகப் புற்றுநோய் ஏற்படும்.

உருளைக்கிழங்கில் இருக்கிறது உற்சாகப் புதையல்

உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸாகச் சாப்பிடுவதைவிட வேக வைத்து தோலுடன் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கின் சதைப்பகுதியில் மரபணுக்கள் உடையாமல் பாதுகாக்கக் கூடிய விட்டமின் சி இருக்கிறது.
தோல், மூளை, இதயத் தசைக்கு தேவையான பொட்டாசியம் உப்பும், எல்லா உறுப்புகளையும் அமைதிப்படுத்தும் "பி' விட்டமின்களும் உள்ளன.

இதயம் வேகமாகத் துடிக்கிறதா?

பதட்டமாக இருக்கிறதா? திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமமா? நெஞ்சு வலியா?
இதய சம்பந்தமாக அடிக்கடி டாக்டரை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் மக்னீஷியம், பொட்டாசியம் மிகவும் குறைவாக இருக்கிறது! போதுமான அளவு இவை உடலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். வாழைப்பழம், ஓரன்ஞ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு சாப்பிடுங்கள். இவற்றின் மூலம் பொட்டாசியம் கிடைத்துவிடும். மக்னீஷியம் உப்பு நன்கு கிடைக்க பரங்கி மற்றும் சூயகாந்தி விதைகள், பசளிக்கீரை முதலியவற்றை நன்கு உணவில் சேருங்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மருந்துச் செலவு குறையும். மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் இவற்றில் இல்லை.

தொந்தியைத் குறைக்க..!

அதிக உணவால் உடலில் கொழுப்புத் தங்கி அதன் விளைவாகத் தொந்தி விழுகிறது.தொடைகள் பெருக்கின்றன. இதைத் தடுக்கத் தினமும் காலையிலும், மாலையிலும் ஓட வேண்டும். எப்போதும் சாப்பிடும் உணவில் 50வீதம் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியை விட திடீரென்று தொந்தியும், தொடைகளும் பெரிதாகி விட்டதால் ஓடித்தான் இவற்றைக் குறைக்க வேண்டும். இப்படி ஓடுவதால் நீழிவு, இதயநோய் முதலியன ஏற்படுவதை தொந்தி, தொடை பெதாகி வருபவர்கள் தடுக்க முடியும். டோக்கியோ மெட்ரோ பொலிடன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த உண்மை இது.

மஞ்சள் தூளைத் தவறாமல் சேருங்கள்!

மஞ்சள் தூள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அரிய உணவு மருந்து. இதன் மூலம் குடல் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
குறிப்பாக வயிற்றுப் பொருமல், சீதபேதி உடனடியாகக் குணமாகும். இதனால்தான் பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்துகிறார்கள்.
மஞ்சள் தூளைச் சமையலில் தவறாமல் சேர்ப்பது நல்லது. ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பண்டையச் காலத்திலிருந்தே மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டு வருகிறது.

மூட்டு வலி எதனால்?

உடற்பயிற்சி, வோக்கிங் செல்பவர்களுக்கு மூட்டுக்களில் அடிக்கடி வலி வந்தால், இவர்கள் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். உடல் உபாதை உள்ளவர்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் ஆகியோர் முப்பது நிமிடங்களுக்கு மேல் எந்தப் பயிற்சியைக் செய்தாலும் அது உடலுறுப்புகளை வற்புறுத்தி துன்புறுத்தி மூட்டுக்களில் வலியைக் கொண்டு வரும் செயலாகும். இதை தவிர்க்கவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல