திங்கள், 8 பிப்ரவரி, 2010

இது உங்கள் குழ‌ந்தைகளுக்கு....

குழந்தை வளர்ப்பதில் சில தாய்மார்கள் சில தவறான பழக்க வழக்கங்களையும் மற்றும் கருத்துகளையும் நடைறைப்படுத்துகிறார்கள். அவைகள் பற்றி சற்று பார்ப்போம்.

1. குழந்தை பிறந்தவுடன் கழுதைப் பால் கொடுக்க வேண்டும் என்ற தவறான வழக்கம் உள்ளது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். கழுதைப் பால் அஜீரணம் ஏற்படலாம்.

2. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும் போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சு உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.

3. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

4. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம் இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்கு பரவும்.

5. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டும்.

பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று 'தொக்கம் எடுத்தல்' என்று சொல்கிறார்கள்.
இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று 'குடல் தட்டல்' என்று செய்கிறார்கள் இது மடமை.

6. ஒரு முறை டாக்டர் தந்த மருந்தையோ அல்லது அதே நோய் உள்ள மற்ற குழந்தைகளுக்கு டாக்டர் தரும் மருந்தையோ கொடுக்கிறார்கள். நோய் ஒரே மாதிரி தெரிந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழந்தைக்கும் நோயின் தன்மை மாறுபடும்.

7. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளை சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.

8. அம்மையை பற்றி மூடப்பழக்கம் அனேகம் உள்ளன. அம்மை ஒரு வைரஸ் நோய் சில குழந்தைகளுக்கு தானாகவே சரியாகி விடும். இன்னும் சில குழந்தைகளுக்கு விபரீத விளைவை உண்டுபண்ணும் தற்சமயம் அம்மையை தடுக்கும் தடுப்பூசிகள் உள்ளனஎன்பதை மறந்து விடக்கூடாது

9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறு சிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை 'அக்கி' என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். நுண்கிருமிக்குய மருந்தை களிம்பு வடிவிலோ அல்லது மாத்திரையாக உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

10. சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி கொடுப்பதால் சளி பிடிப்பதாக கூறுகிறார்கள். சரியான முறையில் சுத்தமாக ஆரோக்கியமான முறையில் சமையல் செய்தால், கஞ்சியின் காரணமாக சளி பிடிக்காது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல