திங்கள், 8 பிப்ரவரி, 2010

டிப்ஸ்... டிப்ஸ்

எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் அப்போதான நேரத்தையும், தேதி யையும் இன்ஸெர்ட் செய்திடப் பயன்படுத்த வேண்டிய ஷார்ட் கட் கீகள் Alt + Shift + D கொடுத்தால் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் அன்றைய தேதி இடைச் செருகலாகும்.
Alt + Shift + T கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.

இன்னும் ஒரு கூடுதல் தகவல் :

பவர்பாய்ண்ட் ஸ்லைடில் Alt + Shift + D அல்லது Alt + Shift + T என்ற கீ தொகுப்புகளைக் கொடுத்தால், டைம் மற்றும் டேட் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் இருந்து நீங்கள் எதனை இடைச் செருக வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து கொள்ளலாம்.

இன்னொன்று, எக்ஸெல் தொகுப்பில் Ctrl + ; (semicolon) கொடுத்தால் அன்றைய தேதி ஒர்க்ஷீட்டில் அமைக்கப்படும். Ctrl + Shift + : (colon) கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.

இன்டர்நெட் வெப்சைட்டில் பேக் கிரவுண்டில் தெரியும் டிசைன் மற்றும் இமேஜ் இல்லாமல் எப்படி பிரிண்ட் எடுப்பது?

வெப்சைட்டிலிருந்து டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் எடுப்பது உங்கள் நோக்கம். பெரும்பாலான வெப்சைட்டுகளில் இந்த ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இல்லை என்றால், டெக்ஸ்ட் மட்டும் செலக்ட் செய்து அதனை ஏதேனும் ஒரு வேர்ட் ப்ராசசரில் புதிய பைல் ஒன்றில் பேஸ்ட் செய்திடுங்கள். பின் அந்த பைலை பிரிண்ட் செய்திடலாம்.

அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு "Print background colors and images" என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் கேட்டபடி பிரிண்ட் செய்திடலாம். பயர்பாக்ஸ் எனில் பேஜ் செட் அப் பிரிவில் இந்த ஆப்ஷன் கிடைக்கும். அதிலும் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்து பிரிண்ட் எடுக்கவும்.

டூயல் பூட் என்பது எதனைக் குறிக்கிறது? இரண்டு வகையில் ஒரு கம்ப்யூட்டரை ஏன் பூட் செய்திட வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம்.

எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன். Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது. எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக்கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் போதும். ஆனால் புதியதாக ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிறது. அதற்கு உடனே மாறுவதற்குத் தயங்கலாம். ஆனாலும் அது எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்க ஆவல். இந்த வேளையில் தான் டூயல் பூட் உங்களுக்குப் பயனப்டுகிறது.

எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பல ஆண்டுகள் பழகி இருக்கலாம். விஸ்டா பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் இயக்கிப் பார்க்க ஆவலாக இருக்கும். அதே நேரத்தில் எக்ஸ்பியையும் முழுமையாக விட்டுவிடக் கூடாது. இரண்டையும் கம்ப்யூட்டரில் பதிய வைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம். அப்ளிகேஷன் புரோகிராம்கள் எந்த சிஸ்டத்தில் சிறப்பாகவும் முழுமையாகவும் இயங்குகின்றன என்று கண்டறியலாம். கூடுதலாக விண்டோஸ் விஸ்டா மட்டுமின்றி, விண்டோஸ் இயக்கத்துடன் லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் பதித்து டூயல் பூட் முறையில் இயக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல