சனி, 27 மார்ச், 2010

உயிர்த்தெழுகிறார் ராமராஜன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்கும் படம் மேதை. இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மே மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

மேதையில் ராமராஜன் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். நகைச்சுவைக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ராமராஜன்- கவுண்டமணி- செந்தில் கூட்டணி நகைச்சுவை பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களை குஷிப்படுத்தி வெற்றிபெற்றதைப் போல ராமராஜன்- வடிவேலு கூட்டணி பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

படத்தில் 150 பள்ளிக்குழந்தைகளுடன் ராமராஜன் பாடும் பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறும் மேதை இயக்குநர் என். டி. ஜி. சரவணன், இந்தப் படத்துக்குப் பின்னர் ராமராஜன் ஒரு ரவுண்ட் வருவார் என்றும் கூறியுள்ளார்.

படத்தில் ராமராஜன், வடிவேலு தவிர இயக்குநர் ராஜ்கபூர், சார்லி, கோட்டை குமார், ஆர்யன், அலெக்ஸ், கொல்கத்தா மாடல் அழகி கவுசிகா, அஜய், ஹாசினி ஆகிய புதுமுகங்கள் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல