சனி, 27 மார்ச், 2010

முன் எச்சரிக்கை

இன்றைய நவீன வாழ்க்கையில் சுகங்கள், சௌகரியங்கள், நிறைந்திருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில், கடினமான சில வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் நேரலாம். மேலும் ஆரோக்கியத்திற்காக “உடற்பயிற்சி மையம்' போய் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் சிலருக்கு ஏற்படக்கூடும். அது போன்ற சமயங்களில் உடலில் ஏற்படக் கூடிய சிறிய வலி, உபாதைகள் விஷயத்தில் எச்சக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அஜாக்கிரதையினால் பின் விளைவுகள் விபதமாக இருக்கலாம்.

முன் எச்சக்கைக்கான சில குறிப்புகள்

1. கனமான பொருளை தூக்கும்போதோ நகர்த்தும் போதோ, திடீரென தலைவலி அல்லது கழுத்து வலி ஏற்பட்டால் உடனடியாக அந்த வேலையை நிறுத்திக் கொள்வது நல்லது. வலிக்கான காரணம் பளுவினால் இரத்தக் குழாய்களில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் தலை வலி ஏற்படலாம். நரம்புகள் அந்த பளுவை தாங்க வொண்ணாமல் அழுத்ததினாலும் வலி ஏற்படக் கூடும்.
உடனடியாக செய்கின்ற வேலையை நிறுத்திக் கொள்வது நல்லது.

2. ஓடும்போதோ அல்லது வேகமாக நடக்கும்போதோ, கணுக்காலில் வலி ஏற்பட்டால், ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கணுக்காலில் ஏற்பட்டுள்ள சுளுக்கு அல்லது நரம்பு வலியாக இருக்கலாம். சற்று நேரம் ஓய்வாக இருப்பது நல்லது.

3. முதுகில் அல்லது முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டால், நேராக நிமிர்ந்து ஓய்வாக அமர்ந்து கொள்ள வேண்டும். பளுவைத் தூக்குவதாலோ, அல்லது கவனக்குறைவாக குனிந்து நிமிர்வதாலோ இது ஏற்படக் கூடும். இது சாதாரண நரம்புவலி அல்லது முதுகுத் தண்டு விலகலால் இருக்கக் கூடும்.
மேலும் சிரமம் கொடுக்காமல் உடனடி சிகிச்சைக்கு முயற்சிக்கவும்.

4. முகவட்டி பகுதியில் வலி தோன்றினால், இது நரம்பு தொடர்பான பிரச்னையை குறிக்கும்.எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

5. இலேசாக தலைசுற்றல் அல்லது தலைசுற்றல் அல்லது தள்ளுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டால், ஜாக்கிரதையாக இருக்கவும்.
இது பொதுவாக குனிந்து நிமிரும் உடற்பயிற்சி அல்லது சாதாரணமாக குனிந்து நிமிரும்போது ஏற்படக் கூடும். பலவீனம் அல்லது குறைந்த இரத்த அழுத்தம். இவற்றினால் ஏற்படக் கூடியது. மருத்துவரை அணுகி தக்க சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல