சனி, 27 மார்ச், 2010

உலகின் முதலாவது இலத்திரனியல் உள்ளாடை உருவாக்கம்

உலகின் முதலாவது இலத்திரனியல் கீழ் உள்ளாடையை தாம் உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேற்படி உள்ளாடையை அணிந்திருப்பவர் மலம் அல்லது சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகும் போது, அது எழுத்து வடிவ செய்தியை அவரைப் பராமரிப்பவருக்கு அனுப்பி வைக்கிறது.

வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இந்த உள்ளாடை பயன் தருவதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியா மாநிலத்தில் இந்த இலத்திரனியல் உள்ளாடை வெற்றிகரமாக உபயோகித்து பரிசீலிக்கப்பட்டதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் எங்குமுள்ள முதியோர் இல்லங்களில் இதனை உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயோதிபர்களை பராமரிப்பதில் இந்த புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு பெரும் அனுகூலத்தை அளிப்பதாக உள்ளது என இந்த உள்ளாடையை தயாரித்து சந்தைப்படுத்தும் சிமாவிடா கம்பனியின் தலைமை நிறைவேற்றதிகாரி பிலிப்பா லெவிஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் 90 சதவீதத்திற்கும் அதிகமான வயோதிபர்கள், மலம் மற்றும் சிறுநீர் என்பனவற்றை கட்டுப்படுத்த முடியாது தன்னிச்சையாக கழிக்கும் நிலையில் உள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல