ஞாயிறு, 21 மார்ச், 2010

திருமணம்

ஒன்றை வாங்குவதற்கு
இன்னுமொன்றை விற்கிறார்கள்..
அணங்குகள் கரை சேர
அவலங்கள் நடுக்கடலில்..

சிவப்பான சித்திரங்கள்
மணமேடையில்...
கறுப்பான அப்பாவிகள்
அடுப்பங்கரையில்..

ஏழ்மையான வண்ணங்களின்
வயதுகள் வரம்பு மீற இந்த
முதிர் கன்னிகளுக்கு
சில வேளைகளில்
வயோதிபர்கள் கூட வாழ்க்கையை
யாசகமாகப் போடுகிறார்கள்.

சதைகளுடன் சந்தோஷங்கள்
சங்கமிக்க சன்மானங்கள்
சத்தியப் பிரமாணம் செய்கின்றன.
வரதட்சணையின்வரட்சியால்
மனையறம் மலடு தட்டுகிறது.

மணமகன் தேவை விளம்பரத்தில்
விழிகளைத் தொலைத்தவர்கள்
உணர்வுகளை சலவை செய்து விட்டு
எரி நட்சத்திரங்களாய் ஒரு
மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஏந்திழையாளின் பெண் பருவங்கள்
எரிந்து போக இல்லாத
இல்லறத்தின் ரணங்களுக்கு
துறவறம் ஒத்தடம் கொடுக்கிறது.
காற்றாடியான வாழ்க்கை
அந்தரத்தில் அடைக்கலமாகிறது.

பாத்திமா நளீரா
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல