ஞாயிறு, 21 மார்ச், 2010

இறுதிக் காலம்

வயது போய் விட்டது
வருத்தங்கள் வந்து
என்னுடம்பை வாடகைக்குக் கேட்கின்றன
அயலவரும்
அன்றாடம் பார்க்கிறார்கள்
அருவருப்போடு

அயராது உழைத்த காலமும்
அண்ணார்ந்து பார்க்கிறது
துயரம், துக்கம்
துரத்துகின்றன

இறுதிக் காலத்தில்
என்னைப் பராமக்க வேண்டிய
மனைவியும், பிள்ளைகளும்
மலையாக நிமிர்ந்து நின்று
கொக்கரிக்கிறார்கள்
கூத்தாடு கிறார்கள்
தலைவிதியை நினைத்து
தலை குனிந்து அழுகிறேன்
என்னைப் போலவே
இவர்களும் ஒரு நாள்
கண்ணீர் வடிப்பார்கள் !
கடவுள் இலேசுப்பட்டவரல்லர் !
காலம் பதில் சொல்லும் !

அதற்கு முன்பாக
காலன் கவர்ந்து கொண்டால்.....
நாலு பேர்
என்னைப் பற்றி எழுதாவிட்டாலும்
எனதுழைப்பில் உயர்ந்தவர்களை
இழிவாகப் பேசுவார்கள்
அப்போது தான் என் ஆன்மா சாந்தி பெறும் !

கவிஞர் செ. குணரத்தினம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல