ஞாயிறு, 21 மார்ச், 2010

பரமஹம்ச நித்தியானந்தரின் ஒரு பக்தனின் உணர்வலைகள் இன்று இப்படி இருக்குமா?

கதவைத்திற காற்றுவரும்

உன் எண்ணத்தின் வண்ணத்திலிருந்து
சில வர்ணங்களை எடுத்து
என் வாழ்வின் ஓவியத்தையும்
வடிவுபடுத்திக் கொண்டவன் நான்....

வருத்தமாய் இருக்கிறது
உன்னைப் பற்றிய விபரீத செய்திகள்
என் விழிகளால் வாசிக்கப்படும் போது !

“கதவைத்திற காற்று வரும்' என
எங்கள் கதவுகளை தட்டிய நீ
உன் கதவுகளை ஏன்
தாழிட்டுக் கொண்டாய்....?

உன் உபதேசங்களை
உற்றுப் பார்த்த தேசம் உன்
குற்றங்களை தொட்டுப் பார்க்கிறது !

உண்மையை உரக்கச் சொல்லாத
உன் மௌனங்கள் எப்படி யெல்லாமோ
இங்கு மொழி பெயர்க்கப்படுகிறது.....

வர்ணம் வாசம் கலந்த ரோஜாவில்
முட்களும் போலவா இதுவும்
இல்லை....
விளங்கவில்லை எங்களுக்கு...!
எங்களை சீர் செய்ய நாங்கள்
சிரமப்படுகையில் நீ
சிதைந்து போனாய் !

சிலுவையும் முள்முடியும்
சாதனையான உலகில் உன்
சிம்மாசனம் உனக்கே
சோதனையானதே !

நித்தியானந்தரே...
எந்த நிலையும் நித்தியமில்லை
மாறும் என்ற உங்கள் சத்தியத்தின்
அர்த்தம் இது தானா ?

கலங்கரை விளக்காய் கருதியோருக்கு
கலங்கமான நீ என்ன நினைத்து
எங்களை இந்த நிலைக்குள்
இட்டுச் சென்றாய் ?

நிர்க்கதி நிலையில்
நிம்மதி தேடி நின் போன்றோரை
நாடுவதும் நிம்மதி
இல்லாத செயல்தானோ...?

சி. முத்து சங்கரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல