வியாழன், 25 மார்ச், 2010

காதல் கிறுக்கன்

சக்ஸஸ்!

என்ன சக்ஸஸ்?

லவ் சக்ஸஸ்!

அப்படியா? கங்குராஜுலேசன், ஆள் எப்படி?

செமகட்டை! பாத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம் அவள் பேசினா எப்.எம். ரேடியோ கேட்கறது மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கலாம்!

அட நான் அதைக் கேக்கல சங்கர், அவளுடைய கேரக்டர் எப்படின்னு கேட்டேன்

அதுவா ட்வெண்ட்டி போர் காரட் சுத்தத் தங்கம்! ஒரு நாள் கூட என்னைப் பாக்கலன்னா ரொம்ப பீல் பண்ணுவா. அடிக்கடி கால்பண்ணி செல்போன்ல என்கிட்ட பேசிக்கிட்டே இருப்பா. மொத்தத்துல சொல்லப் போனா ட்ரூ லவ்! நாளைக்கு காலையில 9.30 மணிக்கு மெரினா பீச் காந்தி சிலைக்குப் பக்கத்துல எனக்காக காத்திருப்பதாக சொல்லியிருக்கிறாள்!

நீ நேர்லியே பாக்கணும்னு ஆசைப்பட்டா நாளைக்கு காலையில் என்னோடு வா. என்னைப் பாக்க அவள் எப்படியெல்லாம் துடிக்கிறாங்கிறதை மறைஞ்சிருந்து பார்ப்போம். என் செல்போனையும் ஆப் பண்ணி வச்சிடுறேன். ஒரு கால் மணி நேரத்திற்கு அவளைத் தவிக்கவிட்டு அவளுடைய பரிதாப நிலையை கண் குளிரக் கண்டு ரசிப்போம்.

மறு நாள் காலை 9.30

காந்தி சிலையருகே ஷில்பா காத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச்செல்ல செல்போனை எடுத்து பேச முனைவதும், கால் கிடைக்காததால் கோபத்தில் ச்சே! என்று காலைத்தூக்கி தரையில் உதைப்பதுமாக தன் எரிச்சலையும், தவிப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இக்காட்சியை மறைந்திருந்த சங்கரும், ஷியாமும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே அவள்,

இன்னைக்கி செலவு பண்ண இந்த இளிச்ச வாயன் இல்லைன்னா என்ன? தினமும் நம்பளச் சுத்திச் சுத்தி ஜொள்ளு விடும் முகேஷை அழைத்தாள். என்ன என்று எண்ணியவளாய் அவளைச் செல்போனில் தொடர்பு கொள்ள, அவன் பத்தே நிமிடத்தில், பைக்கில் அட்டகாசமாக அவளருகே வந்து நின்றான். அவள் சிரித்துக் கொண்டே அவன் தோளை மென்மையாகத் தொட்டு உரசிக்கொண்டே பின்னால் அமர, பைக் மின்னல் வேகத்தில் பறந்தது.

நண்பர்கள் இருவரும் அட! நம்ம முகேஷ்டா! இவன் எங்கே இப்படி? என்று அதிர்ச்சியில் வாயைப் பிளந்துக் கொண்டு அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல