வியாழன், 25 மார்ச், 2010

ஈரோட்டில் அரங்கேறிய உண்மை கதை

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வது எல்லாம் வெறும் பேச்சளவில்தான்.

இந்தியாவின் தலை நகரமான புது டெல்லி முதல் மலையோர கிராமம் வரை பெண்கள் கற்பழிப்பு சம்பவம் அன்றாட செய்தியாக வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைப்பதெல்லாம் கனவாகத் தான் உள்ளது. பெண்கள் எப்படி எல்லாம் சிக்கி சீரழிகிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஈரோட்டில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண்ணை சந்தித்த போது அவள் கூறிய திடுக்கிடும் தகவல்கள் இப்படியும் நடக்குமா? என்று வியக்க வைத்தது. அவள் சோகக்கதை சுருக்கம் இதோ...

கைத்தறிகளும், விசைத்தறிகளும் மானம் காக்க துணி நெய்து தரும் ஊர் ஈரோடு. இங்கு வசிக்கும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவள்தான் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவம் தந்த எழுச்சியில் காண்பவர்கள் கண்கள் மயங்கும் அழகியாக அவள் விளங்கினாள். இந்த காலகட்டத்தில் அரும்பு மீசையும், குறும்பு பார்வையுமாக சுதா மீது காதல் கணை தொடுத்தான் மோகன். அவனது விடா முயற்சியால் எட்டி சென்ற பச்சைக்கிளி சுதா அவனது கைக்கு எட்டும் முல்லை கொடியானாள்.

காதல் வானில் சிறகடித்த சுதாவிடம் தான் ஒரு என்ஜினீயர் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டான் மோகன். இதனை நம்பிய சுதா தனக்கு சொந்தமென இருந்த ஒரே ஜீவனான தாயிடம் தன் காதலன் பற்றி கூறினாள். மகளின் ஆசைக்கு அணை போட விரும்பாத தாயும் பச்சைக் கொடி காட்டினார். இதன் எதிரொலியாக காதல் திருமணம் கை கூடியது. ஜோடி கிளியாக இருவரும் பாடி பறந்தனர்.

சிறிது நாள் சென்றதும் மோகன் ஒரு ஏமாற்று பேர்வழி. வேலை ஏதும் இல்லாமல் ஊதாரியாக சுற்றி வருகிறான் என்று சுதாவுக்கு தெரிய வந்தது. இதனால் இல்லற வாழ்க்கை தித்திப்பதற்கு பதிலாக எட்டி காயாக கசக்க தொடங்கியது. பணம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவது? என்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் வலுத்தது. கணவன் தன்னை காக்கின்ற காவலன் அல்ல. விற்று பிழைக்க போகும் கோவலன் என்று சுதா தெரிந்து கொண்டாள். எனவே அவனை நம்பி பலனில்லை என்று தானே ஒரு வேலையை தேடி குடும்ப சக்கரத்தை நகர்த்துவோம் என்று கருதினாள்.

எனவே மிகவும் முயற்சி எடுத்து ஒரு அலுவலக ஊழியராக வேலைக்கு சேர்ந்தாள். அதில் கிடைத்த வருமானத்தில் காலத்தை ஓட்டினாள். இதற்கிடையே ஒரு அழகான பெண் குழந்தைக்கு அவள் தாயானாள்.

குழந்தை வரவு மகிழ்ச்சியை அளித்தாலும் அதனால் ஏற்பட்ட செலவுகள் சுதாவை சல்லடையாக துளைக்க தொடங்கியது. தனது துன்பங்களை தாங்கி கொள்ள சக ஊழியர்களின் உதவியை நாடினாள். "அவர்கள் அவளது நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் போல் நடித்தனர். ஒன்றை கொடுத்துதான் ஒன்றை பெற வேண்டும் என்ற வியாபார அடிப்படையில் உயிருக்கு மேலான கற்பையே அவள் கடைசியில் விட்டு கொடுத்தாள்.

இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த வேட்டை நாய்கள் சுதா உடலை சொந்த மாக்கி பசியாறி கொண்டன. அவளிடம் உள்ள மோகம் குறைந்ததும் அவளை ஒதுக்கி தள்ளி விட்டன. அடுத்தவர் உதவியுடன் நாட்களை நகர்த்தியவளுக்கு காமம் வடிந்து போன கயவர்களால் இனி வருமானத்துக்கு வழியில்லை என்று தெரிந்து விட்டது. இனி எப்படி வாழப் போகிறோம்? என்று கருதி கண்ணீர் வடித்தாள் சுதா.

ஆனால் வழி ஒன்றும் தெரியவில்லை. திருமண வாழ்க்கை தேறாத வாழ்க்கை ஆகி விட்டதே! என்று எண்ணிய சுதா "அழகு குறைந்து போனதால் தானே நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை மீண்டும் அழகி ஆவோம்' என்று ஈரோட்டில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு சென்றாள். அவளை அபார அழகியாக மாற்றுவதாக கூறிய அழகு நிலைய பெண் சுதாவின் அழகை பளிச்சிட செய்ததுடன், அவள் அழகை அரை குறை ஆடையில் அவளுக்கு தெரியாமல் படமும் பிடித்து விட்டாள். இதனை அறியாத சுதன்யாவிடம் "நாளை வா உனக்கொரு நல்ல செய்தி சொல்கிறேன்' என்றாள். அவளது வார்த்தையில் மயங்கிய சுதா மறுநாள் அழகு நிலையத்துக்கு சென்றாள். அங்கு அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அழகு நிலைய பெண் சில புகைப்படங்களை சுதாவிடம் கொடுத்தாள். அதில் அரை நிர்வாண கோலத்தில் சுதா இருப்பது போன்ற படங்கள் இருந்தது. சுதாவால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை. "நல்லவள் போல் வேடமிட்டு ஒரு பெண்ணே நம்மை ஏமாற்றி விட்டாளே என்று கதறினாள். அவளிடம் கோபப்பட்டாள். ஆனால் அழகு நிலைய பெண்ணோ "நான் சொல்வதை கேட்டால் நீ பணமும் சம்பாதிக்கலாம் சுகமாகவும் இருக்கலாம்' என்று கூறினாள்.

இதற்கு உடன்படவில்லை என்றால் உன் மானம் சந்தி சிரிக்கும்படி ஆகி விடும் என்றும் மிரட்டினாள். அவள் கூறியபடி சுதா விபசார அழகியாக மாறினாள். தினமும் பல ஆண்களுக்கு வடிகால் ஆகினாள். பின்னர் அவளுக்கு ஆண்களை தழுவுவது பிணங்களை தழுவுவது போல் ஆகி விட்டது. விக்ரமாதித்தன் வேதாளத்தை சுமந்த கதையாக... இப்போதும் சுதா ஒரு விபசார அழகியாக தினமும் பலரை தன் மீது சுமந்து வருகிறாள். அதில் இருந்து அவளால் விடுபடவே முடியவில்லை.

சுதாவைப் போல் ஈரோட்டில் உள்ள அழகு நிலையங்களுக்கு சென்ற பல குடும்ப பெண்களும் அழகு நிலைய விபசார கும்பலிடம் சிக்கி விபசாரி ஆகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் இன்னும் பல குடும்ப பெண்கள் தடம் புரண்டு போவதை தடுக்க முடியும்! இதை காவல் துறை கவனத்தில் கொள்ளுமா?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல