வெள்ளி, 28 மே, 2010

இங்கிலாந்து ராணி மரணம் என பி.பி.சி ரேடியோ அறிவித்ததால் சர்ச்சை

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவிப்பாளர் அ‌றி‌வி‌த்ததா‌ல் பெரு‌ம் ச‌ர்‌ச்சையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இத‌னிடையே அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்து‌ள்ளது.

பி.பி.சி ரேடியோ அறிவிப்பாளர் டானி கெல்லி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக அறிவித்தார். அதற்கு முன்பு அவர் தேசிய கீதத்தை ஒலிபரப்பினார். அது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்போதே நேயர்களுக்கு முக்கியமான அறிவிப்பு என்று கூறி, ராணி எலிசபெத் இறந்து விட்டார் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பர்மிங்காம் நகரிலும், மேற்கு மிட்லாண்டு பகுதியிலும் ஒலிபரப்பானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வேடிக்கையாக எதையோ சொல்ல முயன்று அது தொடர்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடப்போக அது அந்த நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ராணி எலிசபெத் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக எப்படி அறிவிப்பு செய்யலாம் என்று பலரும் கண்டனம் செய்தனர்.

இதை தொடர்ந்து பி.பி.சி ரேடியோ வருத்தம் தெரிவித்துக் கொண்டது. அந்த அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல