வியாழன், 24 ஜூன், 2010

22 என நினைத்து 60ஐ கற்பழித்தவர் கைது

பாபாநாசம் அருகே இளம்பெண் என நினைத்து 60 வயது பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தென்னஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவருக்கு மணி என்ற மகனும் (25), மஞ்சுளா (22) என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் உமாவை, நான்கு ஆண்டுக்கு முன் மணி ஒருதலைப்பட்சமாக காதலித்தார்.

காதலிக்க மறுத்த உமாவை வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த போது மணி, பலாத்காரம் செய்தார். மணிக்கு, பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அவமானமடைந்த மணி, தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.உமாவின் அண்ணன் ஜெகனுக்கு (28), மணியின் தங்கை மஞ்சுளாவை பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. மஞ்சுளா போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து சென்றார்.நேற்று முன்தினம் அப்பகுதியில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதை பார்க்க மெலட்டூர் அருகே அய்யன்குளத்தை சேர்ந்த பச்சையம்மாள் (60) என்பவர், மஞ்சுளா வீட்டுக்கு வந்திருந்தார். இரவில் கோவிலில் வாணவேடிக்கையும், நடன நிகழ்ச்சியும் நடந்தது. அதைக்காண நேற்றிரவு மஞ்சுளாவும், பச்சயம்மாளும் சென்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குத் திரும்பினர்.மஞ்சுளா வீட்டின் திண்ணையில் பச்சையம்மாள், போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கினார். போதையில் வந்த ஜெகன், திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பச்சயம்மாளை, மஞ்சுளா என நினைத்து அருகிலுள்ள புதருக்குத் தூக்கிச் சென்று கற்பழித்தார். பச்சையம்மாள் சத்தம் போடவே, ஜெகன் தப்பி ஓடிவிட்டார்.காயமடைந்த பச்சையம்மாள், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில், மெலட்டூர் போலீசார், ஜெகனை கைது செய்தனர்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல